Just In
- 4 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 5 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
- 14 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- 15 hrs ago
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை வர வைக்குமாம்... ஜாக்கிரதை!
Don't Miss
- News
3 லோக்சபா, 7 சட்டசபை இடைத்தேர்தல்- விறுவிறு வாக்கு எண்ணிக்கை -பாஜக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி டென்ஷன்!
- Finance
3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் கணிப்பு..!
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Movies
ரோஜா சீரியலில் இருந்து ரசிகர்களின் ஃபேவரைட் 'அர்ஜுன் சார்' சிபு சூரியன் விலகல்...கவலையில் ரசிகர்கள்
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா உறுதி.. இங்கிலாந்து தொடரில் அடுத்தடுத்த சர்ச்சை.. எப்படி பரவியது??
- Technology
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
உங்க காதலில் இந்த அறிகுறிகள் இருந்தால் அது உங்க சுயத்தை அழிக்கும் மோசமான காதலாம்...!
எந்தவொரு உறவிலும், எல்லைகள் மிகவும் முக்கியம். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், உறவில் உங்களை இழப்பதும், உங்களின் அடையாளத்தை மறந்துவிடுவதும் மிகவும் எளிதானது. உங்கள் உறவில் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதை நீங்கள் எப்போதும் கண்காணிக்க வேண்டும்.
உங்கள் காதல் எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும் அதில் உங்களின் சுயத்தை ஒருபோதும் இழந்து விடக்கூடாது. அப்படி உங்களின் அடையாளத்தை இழந்து விட்டால் உங்களின் கருத்துக்களுக்கு உறவில் முக்கியத்துவம் இருக்காது, நீங்கள் ஒரு அடிமைபோலவே நடத்தப்படுவீர்கள். உறவில் உங்கள் சொந்த அடையாளத்தை நீங்கள் இழக்கிறீர்கள் என்பதைக் குறிக்கும் அறிகுறிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் துணையை எப்போதும் திருப்திபடுத்திக் கொண்டே இருப்பது
உங்கள் தற்போதைய உறவில் உங்கள் துணையை திருப்திப்படுத்தவும், அவரை/அவளை சமாதானப்படுத்தவும் நீங்கள் தொடர்ந்து முயற்சிப்பதாக நீங்கள் உணர்ந்தால், இது நீங்கள் உங்களை நீங்களே இழக்கிறீர்கள் என்பதற்கான முக்கிய அறிகுறியாகும். உங்கள் துணைக்கு சரியானவராக இருக்க வேண்டும் என்ற இந்த ஆசை உங்களை அடிக்கடி வாட்டுகிறது. இந்த பயம் உங்களை எப்போதும் அவர்களை திருப்தியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்க வைக்கிறது. உறவில் தேவையில்லாத ஒன்றைப் பற்றி கவலைப்படும் அழுத்தம் ஒருபோதும் இருக்கக்கூடாது.

உங்கள் சொந்த உணர்வுகளை கேள்வி கேட்கத் தொடங்குவது
உங்கள் உறவில் உங்களின் உணர்வுகள் பொருட்படுத்தாதது போல் உணர்கிறீர்களா? நீங்கள் உண்மையில் என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் நிம்மதியாக இருக்க முடியாத ஒரு உறவில் இருப்பது, நீங்கள் சரியான உறவில் இருக்கிறீர்களா இல்லையா என்று கேள்வி எழுப்புவது, நீங்கள் அதிலிருந்து வெளியேற வேண்டிய நேரம் இது என்பதற்கான அறிகுறியாகும்.

அவன்/அவள் திட்டப்படியே எல்லாம் நடப்பது
சில நேரங்களில் நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் திட்டமிட்டு நேரத்தை செலவிட வேண்டும், ஆனால் இது உங்களின் புறமிருந்து மட்டுமே வருவதாக மாறினால், நிச்சயம் இது ஒரு பிரச்சனைதான். உங்கள் கூட்டாளியின் தேவைக்கு மட்டுமே உங்கள் நேரத்தை நீங்கள் கட்டமைத்தால் அது நியாயமற்றது. நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் இருக்க வேண்டும், அது ஒரு உறவில் ஒரு நபர் மட்டுமே எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது.

உங்கள் ஆர்வங்கள் மற்றும் முன்னுரிமைகள் அனைத்தும் உங்கள் துணையைப் பற்றியே இருப்பது
ஒவ்வொரு நபருக்கும் அவரவர் பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்கள் உள்ளன. இது உங்கள் இடம், உங்கள் நேரம் மற்றும் உங்கள் தனித்துவம். இருப்பினும், அது தீவிரமாக மாறுகிறது என்றால், முற்றிலும் தவறு. சில சரிசெய்தல் நல்லது, ஆனால் நீங்கள் அவர்/அவள் விரும்புவதையும், விளையாடுவதையும், செய்வதையும் மட்டுமே நீங்கள் செய்கிறீர்கள் என்றால், உங்கள் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்தால், நீங்கள் உங்கள் அடையாளத்தை இழக்கிறீர்கள்.

உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த முடியாமல் இருப்பது
ஒரு உறவில், முதல் ஆறுதல் என்னவென்றால், நீங்கள் நீங்களாகவே இருப்பதுதான், அந்த ஒரு நபரிடம் உங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டும். உங்கள் யைதுணையைப் புண்படுத்தாமல் இருக்க உங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் அடக்கி, உங்கள் வார்த்தைகளை மிக அதிகமாகக் குறைக்க வேண்டும் என்றால், இந்த நபருடன் இருப்பதன் பயன் என்ன? ஒன்றாக விவாதித்து முடிவெடுக்கும் சுதந்திரம் முக்கியமானதாகும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் திறமையாக இல்லாவிட்டாலும், உங்களுக்கு ஒரு யோசனை இருந்தாலும், அதை நீங்கள் தயங்காமல் வெளிப்படுத்த வேண்டும். இல்லை என்றால் அது ஒரு பயனற்ற உறவாகும்.

ஒருவர் மட்டுமே சமரசம் செய்வது
நாம் அனைவரும் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ஆனால் ஒரு உறவில் நீங்கள் மட்டும் அவ்வாறு செய்யக்கூடாது. உறவுகள் என்று வரும்போது சமரசம் செய்வது ஒரு பகுதியாகும், ஆனால் நீங்கள் மட்டும் செய்வது நியாயமற்றது. உங்கள் கூட்டாளரை மகிழ்விப்பதற்காக, உங்களை இழந்துவிட்டால், அது உண்மையில் மதிப்புக்குரிய உறவாக இருக்குமா?