Just In
- 12 min ago
சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் ஆகஸ்ட் 17 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
- 17 min ago
உங்களுக்கு தோல் புற்றுநோய் இருக்கானு இந்த முறை மூலம் வீட்டிலேயே தெரிஞ்சிக்கலாம்... ட்ரை பண்ணி பாருங்க!
- 7 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது...
- 16 hrs ago
அமேசானில் அட்டகாசமான தள்ளுபடியில் வேக்யூம் கிளீனர்கள்.. ஸ்டாக் முடிவதற்குள் சீக்கிரம் வாங்குங்க...
Don't Miss
- Automobiles
விலை குறைவு, பெர்ஃபாமன்ஸ் அதிகம்... 125சிசி-யில் பஜாஜ் சிடி பைக்!! சிடி125எக்ஸ் என்ற பெயரில்..
- News
ஒரே ஒரு பாயிண்ட்.. அத்தனையும் அடிபட்டுப் போகும்.. ஓபிஎஸ்ஸின் ‘அசராத’ நம்பிக்கைக்கு காரணம் இதுதான்!
- Movies
சர்ச்சைகளால் 2வது நாளே பாதியாக சரிந்த அமீர்கான் பட வசூல்...ஏன் என்னாச்சு?
- Sports
அந்தர் பல்டி அடித்த பிசிசிஐ..ஷமி மீது வந்த திடீர் பாசம்.. டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு- என்ன காரணம்
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் Realme 9i 5G - அம்சங்கள் எல்லாம் டாப் டக்கர்!
- Finance
காதலனின் துரோகத்தை அம்பலப்படுத்த முழுபக்க விளம்பரம்... யாருடைய செலவில் தெரியுமா?
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
- Education
இரண்டாவது பெரிய துறைமுகத்தில் பணி வாய்ப்பு?
உங்க கணவன் அல்லது மனைவி உங்ககிட்ட இப்படி நடந்துக்கிட்டா அவங்க உங்கள லவ் பண்ணவே இல்லையாம்!
ஆண் ,பெண் உறவு என்பது ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நம்பிக்கை கொண்டு காதல் செய்வது. பொதுவாக உறவு என்பது பல சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கும். ஒருவரையொருவர் புரிந்துகொண்டும், விட்டுக்கொடுத்தும் நடக்கும்போது, அந்த உறவு நீண்ட காலம் மகிழ்ச்சியாக செல்லும். காதல்தான் ஒரு உறவை உயிர்ப்போடு வைத்திருக்கும். சில சமயங்களில் உங்கள் கணவன் அல்லது மனைவி உங்களை நேசிக்கிறாரா? என்ற குழப்பம் எழலாம். ஏனெனில், அதேகேற்ப பல சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கலாம். உங்கள் பங்குதாரர் உங்களை நேசித்தால், அவர் அல்லது அவள் ஒருபோதும் செய்யத பல விஷயங்கள் உள்ளன.
உங்களை ஏமாற்றுவது மற்றும் உடல் ரீதியாக காயப்படுத்துவது தவிர, அன்பான பங்குதாரர் ஒருபோதும் நாடாத பல விஷயங்கள் உள்ளன. உங்கள் பங்குதாரர் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களைச் செய்து கொண்டிருந்தால், உங்கள் உறவை மறுபரிசீலனை செய்து அதற்கேற்ப செயல்பட வேண்டிய நேரம் இது. ஆம். அவை என்னென்ன என்று இங்கே காணலாம்.

வேறொருவரை பற்றி பேசுவது
நீங்கள் வேறொருவரை கவர்ச்சிகரமானவர் என்று உங்கள் துணை முன்பு கூறுவது, அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். எப்போதும் ஆண், பெண் இருவரும் தங்கள் துணை தங்களை அழகாக இருக்கிறார் என்று பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இது எல்லாரிடத்திலும் இருக்கும் பொதுவான எதிர்பார்ப்பு. ஆனால், நீங்கள் மற்றவர்களை கவர்ச்சியானவர் என்று கூறுவது சரியானதாக இருக்காது. உங்கள் பங்குதாரர் உங்களை நேசித்தால், அவர்கள் அதை ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில், இது உங்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும்.

தினமும் சின்ன சண்டை
உங்கள் துணை தினமும் சிறிய சண்டைகளை போட்டால், அவர் அல்லது அவள் உங்களை அதிகமாக நேசிக்க மாட்டார்கள். பொதுவாக, நாம் ஒருவரை நேசிக்கும்போது, அவர்களை மன்னித்து, சிறிய விஷயங்களை விட்டுகொடுக்க முயற்சி செய்கிறோம். ஆனால் அவை வழக்கமான அடிப்படையில் முட்டாள்தனமான சண்டைகளாக இருந்தால், அது உங்கள் உறவை மோசமாக்கும். அதன் முடிவில் ஒரு தீர்மானம் இருந்தால்தான் வாதங்கள் ஆரோக்கியமானதாக இருக்கும். ஆரோக்கியமான வாதங்கள் உறவுக்கு அவசியம்.

பொதுவெளியில் உங்களை அவமதிப்பது
உங்களை நேசிக்கும் மற்றும் உங்களை மதிக்கும் நபர் உங்களை ஒருபோதும் மற்றவர்கள் முன்பு அவமதிப்பு செய்ய மாட்டார்கள். உறவிலுள்ள ஒரு சர்ச்சை அல்லது சிக்கல் தனிப்பட்ட முறையில் தீர்க்கப்படலாம். ஆனால் உங்கள் பங்குதாரர் அதைச் செய்யவில்லை என்றால், நீங்கள் உடன் இருக்க விரும்பும் நபர் இவர்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்கள் வாழ்க்கை முறை தேர்வுகளை விமர்சித்தல்
ஆரோக்கியமான தேர்வுகளைத் தேர்வுசெய்ய ஒருவரை ஊக்குவிப்பது நல்லது. இது ஆரோக்கியமான உறவுக்கு அவசியம். நீங்கள் அந்த வாழ்க்கை முறை தேர்வுகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் துணை உங்களை ஊக்குவிப்பார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் உங்கள் பங்குதாரர் எப்போதும் விமர்சித்தால், உங்கள் உறவில் ஏதோ சிக்கல் இருக்கிறது. அவற்றை கண்டறிவது மிகவும் முக்கியம்.

உங்களை வீழ்த்தும் விஷயங்களைச் சொல்வது
உங்களை வீழ்த்தும் விஷயங்களை ஒருபோதும், உங்கள் துணை செய்யவே கூடாது. உங்கள் பங்குதாரர் உங்களைத் தாழ்த்தி விமர்சித்து விட்டு, அது "காதல் காரணமாக" என்று சொன்னால், தயவுசெய்து அதை நிறுத்த சொல்லுங்கள். இது உங்களை தன்னம்பிக்கையற்ற நபராக மாற்றும். அதற்கு பதிலாக உங்கள் துணை செய்யும் நல்ல காரியங்களுக்காக அவரை/ அவளை பாராட்ட வேண்டும். மேலும், இந்த நேரத்தில் எந்த வகையான தவறான விஷயங்களையும் உங்கள் துணையிடம் கூறக்கூடாது.