Latest Updates
-
18 ஆண்டுகள் கழித்து மகரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. உங்க ராசி என்ன? -
செக் எழுதும்போது ஏன் தொகைக்கு பக்கத்தில் 'ONLY' என்று எழுதுகிறோம் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
ராகி ரவா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 05, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வெற்றிகளை குவிக்கப் போறாங்களாம் -
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும்
உங்க திருமண வாழ்க்கையில் ரொம்ப சந்தோஷமா இருக்கணுமா? இந்த 5 விஷயங்கள மட்டும் செய்யாதீங்க...!
நீங்கள் இருவரும் சுறுசுறுப்பாக இருந்தால், மோதல்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால் சமநிலையை அடைவதற்கு நேரம் எடுக்கும். ஒருவரையொருவர் கட்டுப்படுத்துவதை முதலில் நிறுத்த வேண்டும்.
திருமண உறவு என்பது சாதாரணமான உறவு அல்ல. அது ஏராளமான கடமைகள் மற்றும் பொறுப்புகள் நிறைந்ததாக உள்ளது. இவற்றை ஒரு ஆணும் பெண்ணும் வெற்றிகரமாக சந்திக்கும்போது, அது திருமண உறவு நிறைவடைந்ததாக இருக்கும். பொதுவாக ஆண், பெண் உறவு என்றாலே, அது பல சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கும். அவற்றை நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். ஒரு உறவில் அன்பு, நம்பிக்கை மற்றும் விட்டுக்கொடுக்கும் பழக்கம் மிக முக்கியம். இவைதான் உங்கள் உறவை உயிர்ப்போடு வைத்திருக்க உதவும். ஆதலால், தான் திருமணமான சில காலங்களிலே உங்கள் உறவு சலிப்படைகிறது அல்லது கசக்கிறது. ஆனால், உங்கள் திருமண உறவை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், அவற்றை புத்துயிர் பெற செய்யலாம்.

உங்கள் திருமண வாழ்க்கை எவ்வளவு கீழே இழுக்கப்பட்டதாகத் தோன்றினாலும் அதை மீண்டும் பாதையில் கொண்டு வாருங்கள். உங்கள் திருமண உறவை எளிதாக்கும் சில விஷயங்கள் உள்ளன. ஆனால் சில விஷயங்களை நீங்கள் கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். அது என்னென்ன விஷயங்கள் என்று தெரிந்துகொள்ள இக்கட்டுரையை முழுவதும் படியுங்கள்.

யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள்
தம்பதிகள் ஒரு உறவுக்குள் புதிதாக நுழையும்போது, ஆண், பெண் இருவருக்குள்ளும் பல எதிர்பார்ப்புகள் இருக்கும். பல எதிர்ப்பார்ப்புகள் இருவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கலாம். சில எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். நம்பத்தகாத எதிர்பார்ப்புகளின் தடைகள் உங்கள் இருவரையும் மூச்சுத் திணறச் செய்யும். அந்த எதிர்பார்ப்புகள் உங்கள் உறவில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். அந்த நம்பத்தகாத யோசனைகளையும் எதிர்பார்ப்புகளையும் இப்போதே கைவிடுங்கள். உங்கள் துணைக்கு அழுத்தம் கொடுக்காத விஷயங்களை மட்டும் இருவரும் எதிர்பார்க்கவும். இல்லையெனில், நீங்கள் தவறான புரிதல், மனக்கசப்பு மற்றும் மன அழுத்தம் போன்ற பாதையை அமைத்துக் கொள்வீர்கள்.

ஒருவரையொருவர் கட்டுப்படுத்துவதை நிறுத்துங்கள்
நீங்கள் இருவரும் சுறுசுறுப்பாக இருந்தால், மோதல்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால் சமநிலையை அடைவதற்கு நேரம் எடுக்கும். ஒருவரையொருவர் கட்டுப்படுத்துவதை முதலில் நிறுத்த வேண்டும். அவரவர் விருப்பம் போல வாழ்க்கையை வாழ அனைவரும் உரிமை உள்ளது. உங்கள் தனித்துவத்தையும் இணக்கத்தையும் சமநிலைப்படுத்த நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். அந்த விஷயத்தில் உங்கள் கொள்கைகள் மற்றும் யோசனைகள் மற்றும் மதிப்புகளை மட்டும் கடைப்பிடிக்க முடியாது. உங்கள் கூட்டாளியின் கருத்துக்களுக்கும் சமமாக மதிப்பளிக்க வேண்டும். நீங்கள் அதைச் செய்யவில்லை என்றால், உங்கள் உறவில் பல சிக்கல்கள் எழலாம்.

உடைமைத்தனத்தை எல்லாம் விட்டுவிடுங்கள்
உங்கள் பங்குதாரர் உங்கள் சொத்து அல்ல என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் இருவரும் எவ்வளவு காலம் ஒன்றாக இருந்தீர்கள். ஒவ்வொருவருக்கும் சுவாசிக்கவும் வளரவும் அந்தந்த இடம் இருக்க வேண்டும். ஒருவருக்கான தனிப்பட்ட இடம் அவர் வாழ்க்கையில் எப்போதும் இருக்க வேண்டும். ஒருவரையொருவர் நம்புங்கள். ஏனென்றால் உடைமை என்பது உங்கள் துணைக்கு ஒரு பெரிய தடையாக இருக்கலாம். இது உங்கள் துணை உங்களை விட்டு பிரிவதற்கு வாய்ப்பளிக்கும்.

விமர்சிப்பதை நிறுத்துங்கள்
தம்பதிகள் ஒருவரையொருவர் விமர்ச்சிப்பதை முதலில் நிறுத்துங்கள். இது உறவில் மிகவும் நச்சுப் பழக்கம். நீங்கள் இப்போதே இதைக் கைவிட்டு, உங்கள் துணை உங்களுக்காகச் செய்யும் சிறிய விஷயங்களைப் பாராட்ட வேண்டும். நல்ல விஷயங்களுக்காக உங்கள் துணையைப் பாராட்டுங்கள் மற்றும் அவரின் அல்லது அவளின் இலக்குகளை அடைய ஊக்கப்படுத்துங்கள். இது உங்கள் உறவில் நெருக்கத்தையும், நீண்ட காலம் உறவில் சேர்ந்து இருப்பதையும் உறுதி செய்யும்.

உங்கள் துணையை சரிசெய்ய முயற்சிப்பதை நிறுத்துங்கள்
இந்த உலகில் யாரும் நூறு சதவீதம் சரியானவர்கள் இல்லை. ஒருவரை மாற்றவோ அல்லது சரி செய்யவோ நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம். உங்களால் ஒரு நபரை சரிசெய்ய முடியாது. உங்கள் பங்குதாரர் சரியானவராக இருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் நன்மை, தீமைகள் உள்ளன. அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உறவு என்பது யாரையும் சரிசெய்வது அல்ல. ஆனால் அது சரிசெய்தல் பற்றியது! அதை புரிந்து தெரிந்து செயல்பட வேண்டும்.

திருமணத்தில் மிக முக்கியமான விஷயங்கள் என்ன?
திருமணத்தில் மிக முக்கியமான விஷயங்கள் என்ன என்று ஆராய்ச்சி செய்தபோது, மூன்று முக்கிய கருப்பொருள்கள் வெளிப்பட்டன. அவை தொடர்பு, அன்பு மற்றும் அர்ப்பணிப்பு. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, எந்தவொரு உறவையும் நீடிக்க தொடர்பு முக்கியமானது. இந்த மூன்று விஷயங்களை பின்பற்றி உங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்றுங்கள்.



Click it and Unblock the Notifications
