Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும்
என் பொண்டாட்டி 15 ஆண்களை ஏமாத்தி இருக்கா... இப்ப நான்... கதறி அழுத 16 வது கணவன்
தன்னுடைய மனைவி தனக்கு முன் 15 ஆண்களை ஏமாற்றியிருப்பதாக கணவன் சொல்லும் கதையை கேளுங்கள். இப்படியெல்லாம் இருப்பாங்களான்னு உங்களுக்கு தோணும்.
நான் ஏற்கனவே விவாகரத்து ஆனவன். என்னுடைய முதல் மனைவியை நான்கு வருஷத்துக்கு முன்னால் விவாகரத்து செய்தேன். அதன்பின் இரண்டு வருஷம் சும்மாதான் சுத்திக்கிட்டு இருந்தேன். பெரிதாக வேலை இல்லை. குடும்பத்துல இருந்த பிரச்சினையால செஞ்சிக்கிட்டு இருந்த வேலையையும் விட்டுட்டேன். வெளிநாட்டுக்கு போறதுக்காக ஏஜென்சிகள் கிட்ட பணம் கொடுத்து முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன். அந்த நேரத்துல தான் இப்படியொரு பெண்ணை சந்திச்சேன்

அப்பா அம்மா வருத்தம்
வீட்ல அப்பா, அம்மா ரெண்டு பேரும் வயசானவங்க. மொதல்ல கட்ட பொண்டாட்டிய இப்படி விவாகரத்து பண்ணிட்ட. எங்களுக்கும் வயசாகிடுச்சு. நீ வெளிநாட்டுக்கு வேலைக்கு போயிட்டியன்னா நாங்க ரெண்டு பேரும் பேரப்பிள்ளைங்கள பார்கமாமலே கட்டையில போய் சேர்ந்திடுவோம் போல இருக்கு. இன்னொரு கல்யாணம் பண்ணிக்க ராசா என்று தினமும் புலம்ப ஆரம்பித்தார்கள். இதற்காகவே வீட்டுப்பக்கம் பகல் முழுக்க வர மாட்டேன். ராத்திரி அப்பா, அம்மா தூங்கினப் பின்னாடி வந்து படுப்பேன்.

காலங்கள் கழிந்தது
இப்படியே ஒன்றரை வருஷம் ஆனது. வெளிநாட்டுக்கு போற முயற்சியும் பெருசா முடிவுக்கு வரல. அந்த சமயத்துல தான் அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க குடும்பத்தோட வெளியிடங்களுக்கு போறத பார்த்து எனக்கும் ஆச வந்துச்சு. ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க எனக்கு சம்மதம்னு அம்மாகிட்ட சொல்லிட்டு பெண் தே ஆரம்பிச்சேன். அந்த சமயத்துல என் கண்ணுல பட்டவ தான் இவ.

ஆசைக்கு அடிமையானேன்
இவ மேல எனக்கு ஒரு ஆசை வர ஆரம்பிச்சது. அவளும் என்னைய தான் நான் டவுனுக்கு வேலை விஷயமா போகும்போது வரும்போதும் நோட்டம் விட்ருக்கா. அதுக்குப் பிறகு நானும் அவள கவனிக்க ஆரம்பிச்சுன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பேசினேன். அப்ப தான் தெரிஞ்சிச்சு அவளும் ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாகரத்து ஆனவனு. அப்படியே பேசி கேட்டேன் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியானு. அவ யோசிச்சா?

திருமணம்
சரி அடுத்த வாரம் வேலையா திரும்ப திருச்சிக்கு வருவேன் அப்ப உன் முடிவ சொல்லுனு சொல்லிட்டு கிளம்பிட்டேன். ஒரு வாரம் கழிச்சசு திரும்பவும் போனேன். அவ எனக்கு முன்னாடி அந்த இடத்துல வந்து நின்னா. எனக்கு சம்மதம்னு சொன்னா. உடனே வேகவேகமா எல்லா ஏற்பாடுகளும் நடந்துச்சு. கல்யாணமும் முடிஞ்சிச்சு.

சிங்கப்பூர் பயணம்
அது என்னன்னு தெரியல. அவ்ளோ நாளா காத்துக்கிட்டு இருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு கல்யாணம் ஆகி நாலாவது மாசத்துல அந்த அதிர்ஷ்டம் வந்துச்சு. கல்யாணம் முடிஞ்ச நல்ல நேரம்னு நினைச்சு உடனு கிளம்பி சிங்கப்பூருக்கு வேலைக்குப் போனேன். அங்க போய் நல்லா சம்பாதிச்சேன். வீட்டுக்கு மாசா மாசம் பணம் அனுப்பி மனைவியை ரொம்ப சந்தோஷமா வெச்சிருந்தேன்.

கர்ப்பம்
இடையில புது மனைவிய பார்க்கணும்னு ரெண்டு முறை 1 மாசம் லீவு போட்டுட்டு இந்தியா வந்துட்டுப் போனேன். நான் ஊருக்குப் போய் பதினைஞ்சு நாள்லயே என் மனைவிக்கிட்ட இருந்து அந்த சந்தோஷமான செய்தி வந்துச்சு. ஒரு ஆம்பிளைக்கு என்ன சந்தோஷம் இருக்கப்போகுது நான் அப்பாவாகிட்டேன் கேட்கறத தவிர. கர்ப்பமா இருக்கேன்னு போன்ல சொன்னா. நானும் சீக்கிரம் வர்றேன்னு சொல்லி சந்தோஷமா பேசிக்கிட்டு இருந்தேன்.

சீட்டிங் செய்துவிட்டாள்
ஆனாலும் எனக்கு அங்க இருப்பு கொள்ளல. விஷயத்த என் மேனேஜர்கிட்ட சொல்லிட்டு 15 நாள் மட்டுமாவது லீவு கொடுங்கனு கேட்டு வாங்கிக்கிட்டு வந்தேன். இங்க வந்து பார்த்தான் என் தலையில பெரிய இடி விழுந்தது. அது என்னவென்றால் என் வீட்டில் இருந்த 45 சவரன் நகையையும் 15 லட்ச ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார். அப்போது தான் தெரிந்தது அவள் ஒரு ஏமாற்றுக்காரி என்று.

முதல் கணவன்
ஆமாங்க. என்ன மட்டுமில்ல. இதுக்கு முன்னாடி அவளுாட முதல் கணவர்கிட்டயும் நீ என்கிட்ட சண்டை போட்டு அடிச்சதால தான் என் கரு கலைஞ்சிச்சுன்னு சொல்லி மிரட்டி பணம் வாங்கியிருக்கா. எனக்கு 15 பேரை இந்த மாதிரி ஏமாத்தியிருக்கா.

பல பேருடன் தொடர்பு
அவள் சீக்ரெட்டா வெச்சிருந்தா போட்டோக்கள், பல பேருடன் இருந்த தொடர்பு சம்பந்தப்பட்ட விஷயங்களையெல்லாம் அவளோட மெயில்ல இருந்து எடுத்து போலீசிடம் கொடுத்திருக்கிறேன். அவங்களும் அவள தேடிக்கிட்டு தான் இருக்காங்க. இந்த மாதிரி ஒரு சில பெண்கள் பண்ற இழிவான காரியங்களால எந்த பொண்ண நம்பறதுன்னே தெரியாம போயிடுது.
இப்படி புலம்பும் இந்த ஆண் தன்னுடைய மனைவி பதினைந்து ஆண்களை ஏமாற்றி மோசடி செய்ததாக கணவரே காவல் நிலையத்தில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



Click it and Unblock the Notifications