Latest Updates
-
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா?
ஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்?
ஆண்களைவிடவும் பெண்கள் ஏன் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது பற்றி இந்த கட்டுரையில் மிக விரிவாகப் பார்க்கலாம்.
உலகில் தற்கொலை எண்ணம் அதிகமாக இருப்பது ஆண்களுக்கா? பெண்களுக்கா என்று அறிந்து கொள்வதற்காக உலக சுகாதார நிறுவனம் ஆய்வு ஒன்றை நிகழ்த்தியது. அதில் சில அதிர்ச்சி தருகின்ற முடிவுகள் வெளிவந்தன. அவற்றை உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது. உங்களைச் சுற்றியிருக்கும் பெண்களில் பலர் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் அதே வேளையில் தற்கொலை செய்து கொள்வது பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அந்த ஆய்வு அப்படித்தான் சொல்கிறது.
பத்தில் இரண்டு (அதாவது நூற்றுக்கு இருபது பேர்) பெண்கள் தற்கொலை செய்து கொள்வது பற்றி தான் எப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை என்னும் அதிர்ச்சிகரமான தகவலை உலக சுகாதார நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

தற்கொலை எண்ணம்
ஆண்களைவிடவும் பெண்களுக்குத் தான் தற்கொலை செய்து கொள்கின்ற எண்ணம் நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறது என்று மனநல மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் அவர்கள் கூறும்போது, ஒவ்வொரு பருவ வயதைக் கடக்கிற பொழுதிலும் பெண்களுக்கு மன உளைச்சல், வெவ்வேறு வகையான வடிவங்களில் இருந்துகொண்டே தான் இருக்கும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

உடல்ரீதியான மாற்றம்
15 வயது முதல் 17 வயது வரையிலும் உள்ள வயதென்பது பொதுவாக சிறுமிகளாக இருந்து அடுத்தக்கட்டமாக ப் பெண்களுக்கு உடலியல் ரீதியாக மாற்றத்தை எற்படுத்தும் வயது. மாதவிடாய் காலங்களில் உண்டாகிற உடல் ரீதியான சோர்வு அவர்களுக்குப் பெரும் எரிச்சலை ஏற்படுத்தும். இது எல்லோருக்கும் இருப்பது தான் என்று நாம் ஒற்றை வரியில் கூறும் பதில் அவர்களுக்குப் போதுமான ஆறுதலாக இருப்பதில்லை. அதேபோன்று ஒவ்வொரு முறையும் அதே காலகட்டத்தில் தான் காதல் தோல்வி, பரீட்சையில் தோல்வி குறித்த பயங்கள் சூழும்போது அவர்கள் தற்கொலை முடிவை நோக்கிச் செல்கிறார்கள்.

படிப்பு - வேலை
18 - 23 வயதுடைய பெண்கள் வேலை, படிப்பு காரணமாக குடும்பத்தைவிட்டு விலகியிருக்கும் சூழல் ஏற்படலாம். அதனாலும்கூட மன அழுத்தம் உண்டாகிறது. கிராமத்திலிருந்து நகர வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் சில பெண்கள் கார்ப்பரேட் வாழ்க்கை முறைக்கு ஈடுகொடுக்க முடியாமல், அதை சமாளிக்க முடியாமல் வீட்டில் இருப்பவர்களிடமும் சொல்ல முடியாமல் தற்கொலை எண்ணத்துக்குள் மூழ்கி விடுகிறார்கள்.

திருமண வாழ்க்கை
22 வயதைத் தாண்டிவிட்டாலே பெண்களுக்கு இருக்கும் மிக முக்கியப் பிரச்சினை என்றால் அது திருமணம் தான். உடனே குழந்தை பிறப்பு, குடும்பப் பொறுப்பு என கிட்டதட்ட 40 வரை தொடர்கிறது. அடுத்ததாக, 50 வயதுடைய பெண்கள் திருமணம், குழந்தை, குழந்தையை வளர்க்கும் பொறுப்பு, கணவன் மற்றும் அவர்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களின் சின்ன சின்ன சலசலப்புகள், ஒத்துழைப்பின்மை ஆகியவற்றால் அதிக அளவு மன அழுத்தத்துக்கு ஆளாகியிருப்பார்கள். அந்த சூழலில் குடும்பம் என்ற ஒற்றை விஷயத்தைத் தவிர்த்து, வேறு ஏதேனும் தனிப்பட்ட பிரச்னை ஆட்கொள்ளும் போது தற்கொலை எண்ணம் தலையெடுக்கும்.

மெனோபஸ்
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உடல் ரீதியாக மெனோபஸ் ஸ்டேஜை அடைகின்ற போது, அதிக அளவு மன உளைச்சல் உண்டாகும். ஏனெனில் மெனோபஸ் காலகட்டத்தில் மற்ற காலங்களைவிட நான்கு மடங்கு அதிகமாக ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும்.
தாங்க முடியாத வலி இருக்கும், மிக அதிக அளவிலான ரத்தப்போக்கு, அதனால் உண்டாகும் பதட்டம், பயம் ஆகியவை அவர்களைத் தற்கொலையை நோக்கித் தூண்டும்.

ஆண்களுக்கு
ஆண்களுக்கு பொதுவாக தற்கொலை எ்ணம் என்பது மிக அரிதாகவே ஏற்படுகிறது. அப்படி உண்டாகும் தற்கொலை எண்ணம் ஒரு முறை தோன்றும். அதிலிருந்து விடுபட்டவுடன் மீண்டும் அதைப்பற்றி சிந்திக்க மாட்டார்கள். அப்படியே தோன்றினாலும் கூட, அதைத் தவிர்க்க வேறு ஏதேனும் விஷயங்களில் மனதைச் செலுத்துவார்கள். ஆனால் பெண்கள் ஒரு விஷயத்தைப் பற்றி மேலும் மேலும் சிந்தித்துக் கொண்டே இருப்பதால் தற்கொலை எண்ணமும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறதேயொழிய து ஒரு முடிவுக்கு வருவதில்லை.

தனிமை
பெண்களைப் பொருத்தவரையில், தனிமை, வெறுப்பு, வெறுமை போன்ற பிறர் மீதான கோபங்கள் அனைத்துக்கும் தங்களைத் தாங்களே தண்டித்துக் கொள்ளும் முடிவை எடுகிக்றார்கள். அதனாலேயே ஆண்கள் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்து இவர்களே தண்டைனையை அனுபவிக்க முன்வருகிறார்கள்.

என்ன செய்யலாம்?
இளம் வெயிலில், காலை நேரத்தில் வாக்கிங் செல்லுதல், ஒரு நாளைக்கு எட்டு மணி நேர நல்ல முறையான தூக்கம், மனதுக்குத் தோன்றியதை எழுதிப் பார்த்தல், கதவைத் தாழிட்டுக் கொண்டு, சத்தமாக பாட்டு போட்டு டான்ஸ் ஆடுதல் போன்றவை மனதில் உள்ள பாரங்களையும் அழுத்தத்தையும் ஐஸ் கட்டியைப் போல உருகச் செய்திடும். இதுபோன்ற செயல்பாடுகளை தினமும் பின்பற்றத் தொடங்கினால் தற்கொலை என்ற சொல்லே உங்கள் நினைவுக்கு வராது.



Click it and Unblock the Notifications











