For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...

By Mahibala
|

கணவன் - மனைவிக்கு இடையே சில வீடுகளில் எப்ப பார்த்தாலும் ஜாலியாக இருக்கும். சில வீடுகளில் எப்போதும் சண்டை தான். சில வீட்டில் கலாட்டாக்கள் களை கட்டும். எந்த வீடு எப்படி இருந்தாலும் அதற்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது அந்த வீட்டில் உள்ள பெண்ணாகத் தான் இருக்கும். அவர்களால் தான் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். தினமும் பெண்கள் ஒன்பது அவதாரங்கள் எடுக்கிறார்கள். அதுதான் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கின்றது.

Interesting funny facts about household women

அப்படி அவர்கள் எடுக்கும் அவதாரங்கள் தான் என்ன? ரொம்ப சீரியஸாகாதீங்க. ஜாலியான விஷயம் தான். கணவன்மார்கள் படித்து என்ஜாய் பண்ணுங்க. அதேசமயம் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஷ்டலட்சுமி

அஷ்டலட்சுமி

காலையில் அலுவலகத்துக்கு நேரமாகிற ரஷ்ஷான நேரம், அலுவலக வேலைகள் ஆகியவற்றைச் செய்யும் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான். அந்த சமயங்களில் பெண்டாட்டிகள் அஷ்டலட்சுமிகளாகவே மாறிவிடுவார்கள்.

MOST READ: பாதி கடலை விலைக்கு வாங்கி காதலிக்கு பரிசாகக் கொடுத்த காதலன்... டேய்! எங்க இருந்துடா வர்றீங்க...

சரஸ்வதி

சரஸ்வதி

மாலையில் குழந்தைகள் பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்ததும், அவர்களை கவனித்து வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுக்கின்ற பொழுது, பெண்டாட்டிசரஸ்வதியாக மாறிவிடுவாள்.

மகாலட்சுமி

மகாலட்சுமி

சில கணவன்கள் ஊதாரித்தனமாகச் செலவு செய்தாலும், தன்னுடைய கையில் இருக்கும் பணத்தை வீட்டுச் செலவை மிகவும் சிக்கனமாக செலவு செய்து அதிலிருந்து சுங்கிடி பிடித்து, மிச்சப்படுத்தும் போது பெண்டாட்டிகள் கணவன்களுக்கு மகாலட்சுமிகளாகத் தெரிவார்கள்.

அன்னப்பூரணி

அன்னப்பூரணி

வீட்டில் கணவன், குழந்தைகள் என வீட்டில் உள்ளவர்களுக்கு என்னென்ன சாப்பிட பிடிக்கும்? எது உடலுக்கு ஆரோக்கியம் என்று பார்த்து பார்த்து சமைத்து, அதை முழு மனதோடு அன்பாகப் பரிமாறுகிற போது, பெண்டாட்டிகள் அன்னப்பூரணியாகத் தெரிவார்கள்.

MOST READ: வேர்க்கும்போது ரத்தமாக வேர்க்கும் 21 வயது விநோதப்பெண்... என்னதான் ஆகுதுனு பாருங்க...

பார்வதி தேவி

பார்வதி தேவி

வீட்டில் ஏதாவது பிரச்சினைகள் வருகின்ற வேளைகளில் தேவையான சமயத்தில் தன்னுடைய குடும்பத்திற்கான மன உறுதியோடு இருக்கின்ற பொழுது பெண்டாட்டிகள் கணவன்மார்களுக்கு பார்வதி தேவியாகத் தெரிவாள்.

துர்கா தேவி

துர்கா தேவி

இனிமேல் தான் இருக்கு உங்களுக்குப் பிரச்சினை. இங்க இருந்து தான் நீங்க ஜாக்கிரதையா இருக்கணும். நீங்கள் காலையில ஆபீஸ் போறதுக்கு எவ்வளவு வேகமா கிளம்பினாலும் குளிச்ச டவலை ஒழுங்கா காயப் போடணும். ஆனா நாம பண்றதில்லை. நீங்க காலையில குளிச்சிட்டு வந்து ஈட டவலை அப்படியே கட்டில் மேல போட்டீங்கனா அவ்ளோ தான் துர்காதேவியா மாறிடுவாங்க.

பத்ரகாளி

பத்ரகாளி

பொதுவாக பெண்கள் எதிலும் அவ்வளவு ஈஸியா திருப்தியாக மாட்டாங்க. அதிலும் கணவன் வாங்கிக் கொண்டு வரும் காய்கறிகள் நல்லதா இல்லன்னா என்ன ஆகும்னு தெரியும்ல. ஒருவேளை நீங்க பிரஷ்ஷான காய்கறிகளை வீட்டுக்கு வாங்கிட்டு வரலன்னா அப்புறம் அவங்க பத்ரகாளியா மாறிடுவாங்க.

மகிஷாசுரமர்தினி

மகிஷாசுரமர்தினி

பெண்கள் திருமணத்துக்கு பின்பு விழுந்து விழுந்து தன்னை அலங்காரம் செய்து கொள்வதே தன்னுடைய கணவனிடம் இருந்து பாராட்டைப் பெற வேண்டும் என்பதற்காகத் தான். அப்படி அவர்கள் கஷ்டப்பட்டு அலங்கரித்துக் கொண்டு இருக்கும்போது, தன்னை கணவன் கண்டுகொள்ளாமல் போனால் அந்த இடத்திலேயே மகிஷாசுரமர்தினியாக மாறிவிடுவார்கள். அப்புறம் என்ன நீங்க தான் மகிஷாசுரன்.

MOST READ: குடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்... அப்புறம் என்னாச்சுனு தெரியுமா?

சொர்ணாக்கா

சொர்ணாக்கா

தன்னைப் பற்றி புகழாத கணவனைக் கூட பெண்கள் சாதாரணமாக விட்டு விடுவார்கள். ஆனால் இதுவே கணவன் தன்னைத் தவிர மற்றொரு பெண்ணைப் பற்றி பெருமையாகவோ புகழ்ந்தோ பேசிவிட்டால் அவ்வளவு தான் உங்க பொண்டாட்டி உங்களுக்கு சொர்ணாக்காவா தான் தெரிவார்கள்.

என்ன கணவன்மார்களே! இப்பவாச்சும் உங்க மனைவிகளோட அவதாரங்களைப் புரிஞ்சிக்கிட்டீங்களா? இனியாவது கொஞ்சம் கவனமா நடந்துக்கங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting funny facts about household women

Housewives during the Middle Ages in Europe were not allowed to divorce their husbands or own property unless they were widows. Rich housewives had wet nurses to look after their children.
Story first published: Wednesday, June 26, 2019, 18:10 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more