இதெல்லாம் வைஃப் கூட நீங்க நெருக்கமா இல்லைங்கிறத வெளிப்படுத்துற அறிகுறிகள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

நீங்களும் உங்கள் மனைவியும் சேர்ந்து வாய்விட்டு சிரித்து, கட்டிலில் கட்டிப்புரண்டு தலையணை சண்டையிட்டு வெகுநாட்கள் ஆகிவிட்டதா? இருவரும் ஒரே வீட்டுக்குள் வெவ்வேறு கனவுகளுடன் வாழ்ந்து வருகிறீர்களா? வார இறுதியில் நீங்கள் இருவரும் நேருக்கு நேர் முகத்தைப் பார்த்துக் கொண்டதை விட, மொபைல் திரையும், டிவியையுமே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் இருவருக்குள் ஏதோ பெரிய பிரச்சனை இருப்பதாக கருதி சரியாக பேசாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அலைகிறீர்களா?

உண்மையில் உங்கள் இருவருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. உங்கள் இருவருக்குள் இணக்கம் குறைந்திருக்கிறது. அதற்கு எங்கோ, என்றோ... உங்கள் இருவரின் கலந்துரையாடலின் போது ஒருவரது விருப்பத்தை மற்றொருவர் ஏற்காமல் இருந்ததோ, கருத்தை சரியாக பதிவு செய்யாமல் இருந்ததோ தான் காரணமாக இருக்கும்.

சரி இதற்கு என்ன செய்வது? யாரிடம் போய் தீர்வுக் கேட்பது என்று கேட்கிறீர்களா? தீர்வு உங்களிடம் தான் இருக்கிறது. கையில் கூட இல்லை, உங்களுக்குள்... மனதில் உணர்வாக, வாயில் வார்த்தையாக இதற்கான தீர்வு நிறையவே கொட்டிக் கிடக்கிறது. ஆனால், தயக்கம் என்ற ஒன்று மட்டும் உங்களை அந்த தீர்வை முன்னெடுத்து செல்லாதிருக்க தடுக்கிறது. அந்த தயக்கம் எனும் தடையை உடைத்து எறியுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இணக்கம்!

இணக்கம்!

உரையாடல் ரீதியாகவவோ, உடலுறவு ரீதியாகவோ உங்கள் இருவர் மத்தியில் இணக்கம், ஈர்ப்பு, இணைப்பு பெரிதாக இருக்காது. பேச வேண்டும், உறவில் கூட வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழாது. இதேப் பிரச்சனை உங்கள் துணையிடமும் நீங்கள் காண்பீர்கள்.

சிணுங்கியது!?

சிணுங்கியது!?

நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கொஞ்சியோ, சிணுங்கியதோ நீண்ட நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு கடந்த கால நிகழ்வாக மாறியிருக்கும். இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் போதும், ஒரே மெத்தையில் படுத்திருக்கும் போதும் கூட பெரிதாக ஏதும் பேசிக் கொள்ள மாட்டீர்கள். நீங்கள் இருவரும் விரும்பி நேரம் கழித்தது நீங்களே மறந்திருப்பீர்கள். இந்த அறிகுறிகள் எல்லாம் தோன்றினால் உங்கள் உறவில் மன ரீதியாக ஏதோ பிரச்சனை சூழ்ந்துள்ளது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.

கலந்தாய்வு!

கலந்தாய்வு!

நீங்கள் இருவரும் ஆரம்பத்தில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அது இருவரில் யாரை சார்ந்து இருந்தாலும் உங்கள் கருத்துகளை பகிர்ந்து, அதை இப்படி செய்யலாம், இதை இப்படி முயற்சிக்கலாம் என்று கூறியிருப்பீர்கள். ஆனால், அது இப்போது காணாமல் போயிருக்கும். ஒருவேளை இல்லறத்தில் நடந்த ஏதேனும் ஒரு விஷயத்தில் உங்கள் இருவருக்குள் வேறுபட்ட கருத்து இருந்து, அதை வெளிப்படையாக கூறாமல் விட்டு, அதன் பின் உங்களுக்குள் இருந்த இணைப்பு, இறுக்கம் குறைந்திருக்கலாம்.

கனவுகள்!

கனவுகள்!

வாழ்க்கையில் ஆண் (கணவன்), பெண் (மனைவி) இருவருக்கும் இருவேறுபட்ட கனவுகள் இருப்பது இயல்பு. இரண்டுமே முழுவதுமாக அடைவதும் சாத்தியமானது அல்ல. விட்டுக்கொடுத்து போகவேண்டும். முடிந்த வரை இருவரின் கனவுகளையும் அடைய இருவரும் முயற்சிக்க வேண்டும். இதுப்போன்ற சூழலில் நடுவழியில் ஒரு குழப்பம் ஏற்படுவது இயல்பு. அந்த குழப்பம் உங்கள் உறவில் விரிசல் உண்டாகவோ நீங்கள் இருவரும் தனித்து பயணிக்க காரணியாக மாறிவிடக் கூடாது.

ஆர்வம்!

ஆர்வம்!

ஒருவேளை உங்கள் இருவருக்குள் ஆரம்பக் காலக்கட்டத்தில் இருந்து அந்த ஆர்வம் உறவில் குறைந்திருக்கலாம். வேலையில் ஆர்வம் குறைய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், உறவில் ஆர்வம் குறைந்துப் போக ஒரே ஒரு காரணம் தான் இருக்கும். இருவரில் யாரேனும் ஒருவர் கவன சிதறலுடன் வாழ்ந்து வர வேண்டும். அல்லது, காதலை வெளிப்படுத்துவதை நிறுத்தியிருக்க வேண்டும். அல்லது காதல் செல்லும் பாதை மாறியிருக்க கூடும்.

பேசுங்க!

பேசுங்க!

சரி! இதை எப்படி சரி செய்யலாம்? இதற்கான தீர்வு மிகவும் எளிமையானது. பேசுங்கள்... பேசினால் போதும். உண்மையாக, அதே பழைய நேசத்துடன் பேசுங்கள். உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் அந்த விரிசல் விரைவில் கூடிவிடும். மற்றபடி கூடுதல் ஈர்ப்பு வேண்டும் எனில், சில நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு வெளியூர் அல்லது உங்களுக்கு பிடித்த இடத்திற்கு ஒரு ட்ரிப் சென்று வாருங்கள்.

சங்கோஜம்!

சங்கோஜம்!

நாம் உறவில் செய்யும் பெரிய தவறே.. நமக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் மன்னிப்பு, நன்றி, காதல் கூற சங்கடம், சங்கோஜம் கொள்வோம். இதுவே மூன்றாம் நபர் என்றால், மிக எளிதாக மன்னிப்பு, நன்றி கூறி கடந்துவிடுவோம்.

ஈகோ!

ஈகோ!

மேலும், அவராக வந்து பேசட்டும், தானாக சென்று ஏன் பேச வேண்டும் என்று ஒரு ஈகோ வேறு எட்டிப்பார்க்கும். ஈகோ என்பது உங்கள் உறவை கொள்ளும் மிருகம் அதை வளர்க்க வேண்டாம். அது ஒரு நாள் உங்களையும் வேட்டையாட ஒரு நல்ல நாள் பார்த்து காத்திருக்கும். உறவு மோசமான நிலையை சென்று நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தால்... முதலில் நீங்கள் தூக்கியெறிய வேண்டியது, ஈகோவும், மானமும் தான். வாழ்க்கை முக்கியமா? ஈகோ முக்கியமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

காலம்!

காலம்!

காலங்களிலேயே நான்கு வகை இருக்கிறது எனில் பார்த்துக் கொள்ளுங்கள். உறவில் பல உணர்வுகள் இருக்கிறது. அனைத்து உணர்வுகளும் அந்தந்த சூழலுக்கு தகுந்தது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. சிலசமயம் நம்மை கடும் வெயிலில் சுட்டெரிக்கும். கவலை வேண்டாம், அதன் பிறகு தான் சுகமான காற்றுவீசும். பிறகு அடைமழை பொழியும்.

காயம்!

காயம்!

எனவே, சின்ன, சின்ன பிரச்சனைகளை பெரிதாக எடுத்துக் கொண்டோ, உங்கள் துணையின் சூழல், மனநிலை முழுவதுமாக அறிந்துக் கொள்ளாமல், உறவில் விரிசல் உண்டாகிவிட்டது என்று தவறாக எண்ணிக் கொண்டு பிரிய நினைக்க வேண்டாம். உடல் ரீதியான வலியை விட கொடுமையானது மன ரீதியான வலி. அதிலும், உறவில் ஏற்படுத்தப்படும் மன ரீதியான வலி, வாழ்நாள் முழுக்க ஆறாத காயத்தை உண்டாக்கும் வீரியம் கொண்டது.

All Image Source: unsplash.com

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs Shows That You Should Be Closure With Your Life Partner!

Signs Shows That You Should Be Closure With Your Life Partner!