For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஊர், பெயர் தெரியாத பெண்களுடன் கொஞ்சிக் குலவ விரும்பும் கணவர் - இரகசிய டைரி!

By Staff
|

நானும், என் கணவரும் புதியதாக திருமணம் ஆனவர்கள். சுற்றிவளைக்காமல் நேராக விஷயத்திற்கு வருகிறேன். என் கணவர் ஆன்லைன் டேட்டிங் தளங்கள் மற்றும் மொபைல் டேட்டிங் செயலிகளில் ஊர், பெயர் தெரியாத, அறிமுகம் இல்லாத புதிய பெண்களுடன் பேசுவதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்.

Secret Confession: My husband Enjoys Chatting with Strangers on Dating Apps!

Image Source: Google

திருமணத்திற்கு முன்பே ஒருமுறை... தனக்கு இப்படியான பழக்கம் இருப்பதாக கூறியிருந்தார். அப்போது நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சரி, காதலிக்க யாரும் இல்லாததால் இப்படி செய்து வருகிறார் என்று கருதினேன். ஆனால், திருமணதிற்கு பிறகு நான் உடன் இருக்கும் போதிலும் கூட வேறு பெண்களுடன் சாட் செய்து மகிழ்கிறார். பேசுவதை தவிர வேறு எந்த தவறும் நடப்பதில்லை. சாட்டிங் மட்டும் தான் செய்கிறார்.

இந்த சூழலை என்னால் கையாள முடியவில்லை. இவர் என் கண் முன்பாகவே என்னை ஏமாற்றுவதை எப்படி தடுப்பது. இதற்கு கவுன்சிலிங் ஏதாவது இருக்கிறதா? அல்ல எம்முறையில் இதற்கான தீர்வை காண இயலும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துரோகம்!?

துரோகம்!?

இதை எப்படி துரோகம் என்று கூறுவது... மேலும் திருமணத்திற்கு முன்பே தனது இந்த பழக்கத்தை பற்றி உங்கள் கணவர் உங்களிடம் வெளிப்படையாக கூறிவிட்டார். எனவே, அவர் உங்களுக்கு துரோகம் செய்யவில்லை. ஆனால், ஆரம்பத்தில் தவறாக தெரியாத அவரது செயல், இப்போது திருமணத்திற்கு பிறகு உங்கள் கண்களுக்கு அசௌகரியமானதாக இருக்கிறது.

சிற்றின்பம்!

சிற்றின்பம்!

இதுவும் ஒரு வகையிலான சிற்றின்ப ஆசை தான். உங்கள் கணவர் பார்ன் எனப்படும் ஆபாசப் படங்களை பார்த்தால்.. அதை அவர் உங்களுக்கு செய்யும் துரோகம் என்று கூறுவீர்களா? இல்லை... அவரது குணாதிசயம் சரியில்லை என்று தானே கூறுவோம். ஆம்! இதுவும் ஒரு வகையில் பார்ன் படம் பார்ப்பது போன்ற சிற்றின்ப ஆசை தான். பார்ன் படம் பார்ப்பதையே ஒருசிலர் நன்மை என்றும், ஒருசிலர் தீமை என்றும் கூறுகிறார்கள்.

தீ!

தீ!

ஏறத்தாழ நாம் செய்யும் எல்லா செயலிலும் நன்மையையும் உண்டு, தீமையும் உண்டு. ஆனால், அதில் இருந்து நாம் எதை கற்கிறோம், எதை தவிர்க்கிறோம் என்பதில் தான் நமது குணாதியங்கள் அமைகின்றன. உதாரணமாக, தீயை கொண்டு தீபம் பற்றவைக்கலாம், வீட்டையும் எரிக்கலாம் என்று சொல்லாடல் கேள்வி பட்டிருப்பீர்கள்.

அதை போல தான் இந்த டேட்டிங் மற்றும் பார்ன் போன்ற சிற்றின்ப விஷயங்களிலும் காண்கிறார்கள் ஆய்வாளர்கள். சில ஆய்வுகள் பார்ன் பார்ப்பது நன்மை விளைவிக்கிறது என்று கூறுகிறார்கள். சில ஆய்வுகள் பார்ன் இல்லற உறவை, தாம்பத்தியத்தை கெடுக்கிறது என்று கூறுகிறது. இதில், எது சரி? எது தவறு?

தவறு தான்!

தவறு தான்!

திருமணத்திற்கு பிறகு, உங்கள் கண்ணதிரே வேறு சில பெண்களுடன் கணவர் கொஞ்சி, குலாவி பேசுவது தவறு தான். ஆனால், தான் செய்வது தவறு என்ற எண்ணமே அவருக்குள் இல்லை. முதலில் அது தவறு என்பதை உணர்த்துங்கள். ஒருவேளை, இதே போல நானும் டேட்டிங் செயலிகளில் வேறு ஆண்களுடன் கொஞ்சி, குலாவி பேசினால் நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வீர்களா என்று வினவுங்கள்...?

நிச்சயம் உங்கள் கணவரிடம் இருந்து ஏற்றுக் கொள்வேன் என்ற பதில் வராது. பொதுவாகவே இந்திய ஆண்களிடம் ஒரு மனோபாவம் இருக்கிறது. தான் நிறைய பெண்களிடம் பேசலாம் அது சகஜம். அதுவே, மனைவி நிறைய ஆண்களுடன் பேசினால் தவறு என்று கருதுவார்கள். அதே சமயத்தில் எதையும் சுட்டிக்காட்டி கூறினால்.. அதை ஏற்றுக் கொள்ளும் மனோபாவமும் இந்திய ஆண்களிடம் இருக்கிறது.

சுட்டிக் காட்டுங்கள்!

சுட்டிக் காட்டுங்கள்!

நீங்கள் இருவருமே புதியதாக திருமணம் ஆனவர்கள். ஆகையால், சில விஷயங்களை கலந்தாலோசிக்க உங்களுக்குள் சிறு தயக்கம் ஏற்படலாம். அந்த தயக்கத்தை உடைத்து... இருவருக்கும் போதுமான நேரம் இருக்கும் போது. அமைதியான மனநிலையில் இது குறித்து மனம்விட்டு பேசுங்கள்.

எக்காரணம் கொண்டும் எடுத்த எடுப்பிலேயே குற்றாவாளி மீது குற்றம் சுமத்துவது போல பேச்சை ஆரம்பிக்க வேண்டாம். சாந்தமாக அவரது இந்த செயல் குறித்த உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். உங்களுக்குள் ஏற்படும் மனவலியை அவர் புரியும் படி கூறுங்கள்.

நிச்சயம் மாற்றம் வெளிப்படும்!

நிச்சயம் மாற்றம் வெளிப்படும்!

பெரும்பாலான விஷயங்கள் தீர்வுக் காணாமல் இருப்பதற்கு முக்கிய காரணமே பேசாமல் இருப்பது தான். மனதுக்குள் பூட்டி எதையும் பூட்டி வைத்துக் கொண்டிருக்காமல் முதலில் தகுந்த தருணம் வரும் பொழுது தயக்கம் இன்றி பேசிவிடுங்கள்.

தான் செய்வது கட்டிய மனைவிக்கு எத்தகைய வருத்தத்தை ஏற்படுத்தும் என்ற புரிதல் இல்லாத காரணத்தால் தான் அவர் இப்படி செய்து வருகிறார். எனவே, தைரியமாக பேசுங்கள். இது மிக சிறிய பிரச்சனை தான். நல்ல மாற்றம் ஏற்படும்.

மேலும், நீங்கள் கூறியதை வைத்து பார்த்தால்... உங்கள் திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டது என்று நன்கு அறிய முடிகிறது. எனவே, முடிந்த வரை ஒருவரை, ஒருவர் நன்கு முழுமையாக அறிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். பிறகு, இத்தகைய எந்த பிரச்சனையும் இல்லறத்தில் எழவே எழாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secret Confession: My husband Enjoys Chatting with Strangers on Dating Apps!

My husband enjoys chatting with strangers on dating apps, and shared about this habit with me before getting married. His says he gets to meet new people and know their life experiences. Initially I was fine with it but now, I am uncomfortable.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more