For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் வாய் மூடி இருந்ததால்... திருமணம் ஒரே வாரத்தில் முடிவுக்கு வந்தது... - My Story #268

நான் வாய் மூடி இருந்ததால்... திருமணம் ஒரே வாரத்தில் முடிவுக்கு வந்தது... - My Story #268

By Staff
|

என் வயது 25. நான் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக கடந்த மூன்று வருடங்களாக பணிபுரிந்து வந்தேன். திருமணம் என்ற பெயரில் என் வாழ்வில் நடந்த ஒரு அபாயமான விபத்தின் காரணமாக ஒரு மாதத்திற்கு முன் என் வேலையை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

என் திருமண வாழ்க்கை பற்றி யாரிடம் கூறி அனுதாபம் தேடுவது என்று தெரியாமல் தவித்து வந்தேன். எனக்கு சென்ற வருடம் நிச்சயம் செய்யப்பட்டது. அன்று தான் அவரை முதன் முதலில் பார்த்தேன். அந்த ஒரு நாள் மட்டும் நான் மௌனமாக இன்றி, வாய் திறந்து பேசியிருந்தால்... ஒரு மோசமான சம்பவத்தை நான் கடந்து வந்திருக்க மாட்டேன். என் இல் வாழ்க்கை ஒரே வாரத்தில் முடிவுக்கு வந்திருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமைதியானவர்!

அமைதியானவர்!

அன்று என்னை பெண் பார்க்க வந்திருந்தனர். என் அப்பா தான் இந்த மாப்பிளையை தேர்வு செய்திருந்தார். அவரை அன்று தான் முதன் முறையாக பார்கிறேன். இவர் தான் பெண் பார்க்க வருகிறார் என்று ஒரு புகைப்படத்தை கூட காண்பிக்கவில்லை என் அப்பா. எங்கே படத்தை பார்த்து வேண்டாம் என்று சொல்லிவிடுவேனோ என்று எண்ணினார் போல.

பணிவானவர்!

பணிவானவர்!

அன்று நானும் அவரும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ள நேரம் அளிக்கப்பட்டது. நான், என் வயது, படிப்பு, வேலை என்று கேட்டறிந்தார். அவர் ஐதராபாத்தில் எம்.பி.ஏ படித்ததாக கூறினார். மேலும், தற்சமயம் ஒரு என்.ஜி.ஓ நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் கூறி இருந்தார். அவன் எனக்கான சரியான தேர்வா என்ற சந்தேகம் எனக்குள் இருந்துக் கொண்டே இருந்தது. பணிவாக இருக்கலாம், ஆனால் அதற்கென தரையில் படுத்துவிட கூடாது.

நேர்மறை எண்ணம்!

நேர்மறை எண்ணம்!

சகோதரிகள், அம்மா, அப்பா, உறவினர் என்று அனைவருக்கும் அவரை பிடித்துவிட்டது. உடனே உனக்கான சரியான ஜோடி இவன் தான் என்று பாராட்டி பேசினார்கள். உடனே, நிச்சய தேதியும் முடிவானது. நிச்சயம் முடிந்த இரண்டு நாட்கள் கழித்து சந்தித்து பேசலாம் என்று ஓரிரு முறை என்னை அழைத்தார். ஆனால், அவர் பேசியது எல்லாம் எப்படி இருக்க, வீட்டுல எப்படி இருக்காங்க, அக்கா, தம்பி எல்லாம் சவுக்கியமா? என்பது மட்டும் தான்.

என்ன செய்வது?

என்ன செய்வது?

அவர் சுவாரஸ்யமாக, காதலிக்கும் படியோ எதுவும் பேசவில்லை. மேலும், ஒருமுறை பேசிக் கொண்டிருக்கும் போது, இப்போது எந்த வேலையும் செய்யவில்லை. முன்னர் தான் என்.ஜி.ஓவில் வேலை செய்து வந்தேன் என்று கூறினார்.

அப்போது எதிர்காலத்தில் என்ன செய்வதாக உத்தேசம் என்று கேட்டதற்கு. தனது அண்ணனுடன் சேர்ந்து தொழில் துவங்க போவதாக கூறினார்.

அவர் அண்ணனுக்கும் சில வாரங்களுக்கு முன்னர் தான் நிச்சயம் ஆனது. அதனால் தான் எங்கள் திருமணத்தை நிச்சயம் மட்டும் செய்து ஒரு வருடம் கழித்து திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.

தம்பி மட்டும் தான்...

தம்பி மட்டும் தான்...

என் வீட்டில் எனக்கு ஆதரவாக இருந்தது எனது தம்பி மட்டும் தான். அவன் தான் இவர் உனக்கு ஏற்ற ஆளில்லை என்று கூறி வந்தான். மற்றவர்கள் எல்லாம் இவரை குறித்து மிகவும் பெருமையாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தனர்.

இதுகுறித்து பெற்றோரிடம் கூறலாம் என்று எண்ணினேன். ஆனால், இது என் அப்பாவின் தேர்வு. எனக்கும், அப்பாவுக்கும் இடையே பெரிதாக பாசமோ, அன்போ இல்லை. அவர் ஒரு ஸ்ட்ரிக்டான தந்தை. ஆகையால், நான் ஏதாவது கூறினால் அவமரியாதை செய்தது போலாகிவிடுமோ என்று அஞ்சினேன்.

அவர் அப்படி தான்!

அவர் அப்படி தான்!

நிச்சயம் என் அப்பா தவறாக தான் எடுத்துக் கொள்வார். ஆனால், அவன் எனக்காக தேர்வு செய்த மாப்பிளை எனக்கு பிடிக்கவில்லையே. அவர் எனக்கு நேர்மையான தேர்வு செய்ததாக சந்தோஷமாக இருக்கிறார். என்ன செய்வதென்று புரியாமல் பேசாமல் இருந்துவிட்டேன். என் கருத்தை எனக்குள்ளே வைத்து புதைத்துவிட்டேன். இது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட சாபமாக மாறியது.

நான்!

நான்!

நான் அதிகம் புத்தகம் விரும்பி படிக்கும் பெண். தினமும் செய்திகள் பார்ப்பேன், படிப்பேன். வாழ்க்கை குறித்து அதிகம் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உடையவள். ஆனால், அவர் அப்படி அல்ல. எதுமே தெரியாது. அறிந்துக் கொள்ள ஆர்வமும் இல்லை. ஒரு வருடம் இப்படியே நகர்ந்தது. ஒருவழியாக எங்கள் திருமண நாள் நெருங்கியது.

முதலிரவன்று...

முதலிரவன்று...

அன்று எங்கள் முதலிரவு... நான் எது நடக்க கூடாது என்று எதிர்பார்த்தேனோ அது கச்சிதமாக நடந்தது. உடலுறவில் ஈடுபட முடியாத சூழல். அவர் என்னை வற்புறுத்திக் கொண்டே இருந்தார். ஒருவருடமாக காதலாக நாலு வார்த்தை பேச தெரியாத நபர், முதலிரவன்று அது நடந்தே ஆக வேண்டும் என்று கெஞ்சுகிறார்.

பேசி புரிய வைத்தேன். என்னால் ஈடுபட முடியாத சூழலில் இருக்கிறேன். நான்கு நாள் ஆகும் என்று கூறிவிட்டேன்.

இரண்டாவது நாள்..

இரண்டாவது நாள்..

மீண்டும் அடுத்த நாள் இரவே உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று அடம் பிடித்தார். நிஜமாகவே இவன் எம்.பி.ஏ படித்தவன் தானா என்ற சந்தேகம் எழுந்தது. நேற்று இரவு உங்களிடம் என்ன கூறினேன் என்று கேள்வி கேட்டேன். அது உங்களுக்கு புரிந்ததா என்று கேட்டேன்.. ஆம், ஆம் என்று தலையாட்டினான்.

மீண்டும் ஒருமுறை எல்.கே.ஜி குழந்தைக்கு வகுப்பெடுப்பது போல விலாவாரியாக கூறினேன். சரி என்று கேட்டுக்கொண்டுவிட்டார்.

ஆறு நாட்கள்!

ஆறு நாட்கள்!

அப்படி இப்படி என்று அந்து நாட்கள் கடந்துவிட்டது. ஆறாவது நாள் திருமணமாகி முதல் முறையாக என் வீட்டுக்கு செல்கிறோம். எங்கள் வீட்டில் மூன்று நாட்கள் தங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். இங்கு தான் பிரச்சனையே பெரிதானது.

முதல் நாள் ஹலோ, ஹேய் என்று பேசிக் கொண்டிருந்தார். இரண்டாவது நாள் என் தம்பியின் நண்பர்கள் வந்திருந்தனர். அவர்களிடம் பேசும் போதுதான் அவரது அறிவிலி தனம் வெளிப்பட்டது.

குற்றம்!

குற்றம்!

என் தம்பி அத்தான் உங்கள் ஃபேஸ்புக் ஐ.டி என்ன? உங்களை நட்பில் சேர்க்க வேண்டும் என்று கேட்டான். ஃபேஸ்புக் எல்லாம் நான் பயன்படுத்தியதே இல்லை. அது பெரும் குற்றம் என்று கூறினார். அனைவரும் ஒரு மாதிரி பார்த்தனர். முகத்தை பார்த்து பேசாமல் கால்விரலால் தரையில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.

சரி! எல்லாரும் வெளியே செல்லுங்கள் என்று கூறி அனுப்பினேன்.

இரவு!

இரவு!

இரண்டாவது நாள் இரவு.. குளித்து விட்டு வந்தவர். நான் தவறான முறையில் குளித்துவிட்டேன் என்று உளறிக் கொட்டினார். எனக்கு எதுவுமே விளங்கவில்லை. என்ன சொல்றேங்க என்று கேட்டதற்கு... எனக்கு மருந்து கொடு, இல்லையேல் திட்டு எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினார்.

அந்த இரவு மிகவும் கொடூரமான அனுபவத்தை அளித்தது. அவருக்கு அருகிலேயே அமர்ந்திருந்தேன். வீட்டில் யாரும் உறங்கவில்லை. எல்லா விளக்குகளும் இரவு முழுக்க ஆப் செய்யாமல் இருந்தோம். எங்கள் அறையின் வாசலில் இரவு முழுக்க உட்கார்ந்திருந்தார்.

அப்பா!

அப்பா!

தன் மருமகன் விரைவில் குணமடைந்து விடுவார் என்று அப்பா எண்ணினார். ஆனால், மறுநாள் காலை அவரது வீட்டுக்கு கிளம்பலாம் என்று இருந்தோம். முதலில் தம்பி மற்றும் அவனது நண்பர்களை அவரை அழைத்து சென்று வீட்டில் விட்டு வாருங்கள். நான் பின்னாடி வருகிறேன் என்று கூறினேன்.

அவர் பயம் கொஞ்சமும் குறையவில்லை. நடந்த அனைத்து சம்பவங்களை அப்பாவிடம் காண்பிக்க தம்பி வீடியோ எடுத்து வைத்திருந்தான்.

மௌனம் தவறு!

மௌனம் தவறு!

மெளனமாக இருந்தே சாதித்தவர்கள் இருக்கிறார்கள் என்பார்கள். ஆனால், மௌனம் எல்லா நேரத்திலும் கைக்கொடுக்காது. நான் மட்டும் பெண்பார்க்க வந்த அன்றே இந்த நபரை பிடிக்கவில்லை என்று வாய் திறந்து கூறி இருந்தால். இன்று என் இல்லற வாழ்க்கை ஒரே வாரத்தில் முடிவுக்கு வந்திருக்காது.

தயவு செய்து.. முக்கியமாக பெண்கள் வாய் திறந்து பேசுங்கள். பேச்சு நமது உரிமை. அதை எதற்காகவும் விட்டுக் கொடுத்து விட வேண்டாம். முக்கியமாக படிப்பு, வேலை மற்றும் திருமணம் போன்ற விஷயங்களில் தைரியமாக முடிவு எடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: My Marriage Lasted Only For a Week, Because of my Silence

Real Life Story: My Marriage Lasted Only For A Week Just Because I Shut My Mouth At The Wrong Time
Desktop Bottom Promotion