For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே அவனுக்கு வேற உறவு இருந்திருக்கு, அது தெரியாம... - My Story #293

By Staff
|

நான் ஒரு அப்பர்-மிடில் கிளாஸ் குடும்பத்துல பிறந்த பொண்ணு. அப்பா, அம்மா ரெண்டு பேருமே நல்ல வேலையில இருந்து ரிட்டையர்ட் ஆனவங்க. கல்யாணமாகி ரொம்ப வருஷம் கழித்து தவமிருந்த பெத்த பொண்ணுன்னு சொல்லுவாங்க. அதனாலேயே என்மேல அவங்களுக்கு ரொம்ப பாசம். அந்த பாசத்தோட மிகுதியில எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க கூட மறந்துட்டாங்கன்னு சொல்லலாம்.

எங்க குடும்பத்துல 22 வயசுக்கு மேல ஒரு பொண்ணு கல்யாணமாகாம இருந்தாலே தப்பா பேசுவாங்க. எனக்கு 27 வயசு வரைக்கும் கல்யாணம் ஆகல. உறவுக்காரங்க நிறையா பேசிட்டதால தான் அப்பா, அம்மா நிறையா வரன் பார்க்க ஆரம்பிச்சாங்க. இந்த காலத்துல கல்யாண வயசு இதுதான், புள்ள பெத்துக்க வேண்டிய வயசு இதுதான்னு யோசிக்காத சூழல்ல வளர்ந்தவ நான்.

Real Life Story: He Cheated on Me 8 Continuous Years.

Image Source: Google

ஊரு, உறவுக்காரன் தப்பா பேசுறான்னு அவசர அவசரமா வரன் பார்த்தாங்க. எங்களுக்கு பிடிச்ச மாதிரியான வரன் சரியா அமையல. ஆனா, வயசு அதிகமாகிட்டே போச்சு. அதனால, ஒரு கட்டத்துல ஆன்லைன் மேட்ரிமோனி சைட்ல கிடைச்ச வரன பார்த்து பேசினோம். பெருசா இம்ப்ரெஸ் ஆகல.. ஆனாலும், இந்த வரனையும் ரிஜக்ட் பண்ணி.. யாரையும் அப்சட் பண்ண எனக்கு விருப்பமில்ல.

அப்பா, அம்மாவுக்கே விருப்பம் இல்லதான். ஆனாலும்.... சும்மா, சும்மா அவங்கள வரவன், போறவன் எல்லாம் குத்தம் சொல்றத என்னால ஏத்துக்க முடியல. அதனால, என் கல்யாணமும் நிச்சயமாச்சு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மோகம் முடிந்த பின்னர்...

மோகம் முடிந்த பின்னர்...

ஆசையும், மோகமும் முடிஞ்ச பிறகு தான் உண்மையான இல்லற வாழ்க்கை ஆரம்பிக்கும் சொல்லுவாங்க. அப்பத்தான் என் வாழ்க்கையில பிரச்சனைகள் எழ ஆரம்பிச்சது. கல்யாணமாகி எங்களுக்கு ரெண்டு மாசம் ஆகியிருக்கும். அன்னிக்கு நைட் லேப்டாப் யூஸ் பண்ணிட்டே தூங்கிட்டார் என் ஹஸ்பன்ட். நடுராத்திரி எழுந்து பார்த்தப்ப தான் கவனிச்சேன். சரி! அத மூடி வைக்கலாம்ன்னு எழுந்து போனப்ப தான். அவர் யாரோ ஒரு பொண்ணு கூட ஆன்லைன் சாட்டிங்ல செக்ஸ் சாட் பண்ணது பார்த்து அதிர்ந்து போனேன்.

அசிங்கம்!

அசிங்கம்!

காலையில எழுந்ததும் முதல் வேலைய இத கேட்டுடணும்னு முடிவு பண்ணேன். கேட்டதுக்கு அப்படி எல்லாம் ஏதும் இல்லன்னு மழுப்புனாரு. அப்பறம் லேப்டாப்ல பண்ண சாட்டிங் எல்லாத்துக்கும் என்கிட்டே ஆதாரம் இருக்குன்னு சொன்னதும் ஒத்துக்கிட்டார். கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் மேல நிறையா ஆர்வம் இருந்துச்சு. அதனால தான் இந்த தப்பு பண்ணிட்டேன். இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்னு அழுது சொன்னாரு. மன்னிசேன்.

கள்ள உறவு!

கள்ள உறவு!

ஆனால், அது வெறும் சாட்டிங் மட்டுமில்ல... அவர் ஆபீஸ்ல வர்க் பண்ற ஒரு பொண்ணு கூட இவருக்கு கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே ஒரு உறவு இருந்திருக்கு. அதை மறச்சு தான் இவரு என்ன கல்யாணம் பண்ணி இருக்காரு. கல்யாணத்துக்கு அப்பறமும், இவர் அந்த பொண்ண பாக்குறதுக்கு ப்ளைட் பிடிச்சு போயிட்டு வந்திருக்காருன்னு தெரிய வந்துச்சு. அங்க அவங்க ரெண்டு பெரும் என்ன பண்ணி இருப்பாங்கன்னு நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்.

கர்ப்பம்!

கர்ப்பம்!

இதுக்கெல்லாம் நடுவுல தான் நான் கர்ப்பமானேன். கர்ப்பமான எல்லார் வீட்டுலையும் அந்த பொண்ண நல்லப்படியா பார்த்துப்பாங்கன்னு நெனச்சேன். ஆனா, எங்க வீட்டுல மாமியார் கொடுமை பண்ண ஆரம்பிச்சாங்க. எங்க குழந்தை பிறந்தா நாங்க தனியா போயிடுவோமோன்னு பயந்து... இல்லாத, நடக்காத விஷயத்தை தினமும் கதைக்கட்டி எனக்கும், என் புருஷனுக்கும் நடுவுல சண்டை உருவாக்கி குளிர் காஞ்சுட்டு இருந்தாங்க.

அவமரியாதை!

அவமரியாதை!

ஒரு கட்டத்துல அவங்க சொல்றத எல்லாம் கேட்டுட்டு என்ன அடிச்சு, தலைமுடிய பிடிச்சு இழுத்துட்டு போய் மாமியார் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க வற்புறுத்தினார் கணவர். இதெல்லாம் என்னால தாங்கிக்க முடியல. எனக்கான சுய மரியாதை இழந்து அங்க வாழனுமான்னு யோசிச்சேன். அப்பா - அம்மா வீட்டுக்கு கிளம்பிட்டேன். நான் கிளம்பினதும், பின்னாடியே வந்தாரு. என் அப்பா, அம்மா கிட்ட அழுது மன்னிப்பு கேட்டு திரும்பு அழைச்சுட்டு போனாரு.

நிம்மதி?!

நிம்மதி?!

திரும்ப அதே சண்டை, அதே சச்சரவு... இதுக்கு நடுவுல குழந்தை பிறந்துச்சு. எல்லார் முகத்துலையும் சந்தோஷம். அப்பா, அம்மா ஒரு கிராண்ட் ஃபங்க்ஷன் ஏற்பாடு பண்ணினாங்க. இனிமேல் எல்லாமே நல்லப்படியா நடக்கும்ன்னு நம்பினேன். அதே சமயத்துல தான் நாங்க துபாய்க்கு ஷிப்ட் ஆகி போனோம். எங்க ரெண்டு பெருக்கும் நடுவே எந்த பிரச்சனையும் இல்ல. நிம்மதியா இருந்தோம். இந்த சந்தோசம் ரொம்ப நாளுக்கு நீடிக்கல.

பாஸ்வேர்ட்!

பாஸ்வேர்ட்!

ஆனா, என் நம்பிக்கையில் மண்ணு விழுந்துச்சு. உண்மைய சொல்லணும்னா திரும்பவும் ஒரு மெயில். அந்த மெயில்ல ஒரு ஈமெயில் ஐடி, அதுக்கான பாஸ் வேர்ட் இருந்துச்சு. அந்த மெயில் அனுப்பிய நபர், இத ஓபன் பண்ணி பாருங்கன்னு சொல்லி இருந்தார். ஒரே குழப்பம், ஓபன் பண்ணி பார்த்த பின்ன ஒரு பேரதிர்ச்சி. அந்த யாஹூ மெயில் முழுக்க பல படங்கள், செக்ஸ் சாட்டிங் பேக்கப், வீடியோ கால்ல அசிங்கமா பேசின சமாச்சாரங்கள்னு கொட்டி கிடந்துச்சு.

அழுகை!

அழுகை!

அசிங்கமான ஆதாரம் மட்டுமில்லாம.. அடிக்கடி இவர் ஐதராபாத் போயிட்டு வந்ததுக்கான ப்ளைட் டிக்கெட்டும் இருந்துச்சு. என்கிட்டே பிஸ்னஸ் விஷயமா வெளியே போறேன்னு சொல்லிட்டு, இவரு ஐதராபாத் போயிட்டு வந்திருக்காரு. இனி மேலும், சும்மா விட கூடாதுன்னு அவர் ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் எல்லா ஆதாரத்தையும் மூஞ்சியில விட்டெறிஞ்சு இதெல்லாம் என்னனு கேட்டேன். மறுபடியும் அழுதார். மன்னிசேன்...

சத்தியமா... அவர மன்னிக்க என்ன காரணம்னு எனக்கு தெரியல. எதுக்காக நான் அவர மன்னிச்சேன்னுங்கிற விஷயம் இப்ப வரைக்கும் எனக்கு பெரிய புதிரா தான் இருக்கு. ஒருவேள எங்களுக்கு ஒரு மகன் இருக்கான். அவன் வாழ்க்கை ஸ்பாயில் ஆயிடக் கூடாதுன்னு நெனச்சு மன்னிச்சேனா கூட தெரியல. கொஞ்ச நாள் அப்படி இப்படின்னு வாழ்க்கை நகர்ந்துச்சு.

வேலை காலி!

வேலை காலி!

ஒருநாள் வீட்டுக்கு வந்ததும், நான் வேலைய விட்டுட்டேன். இனிமேல் அங்க வேலை பண்ண முடியாதுன்னு சொன்னாரு. திரும்ப புது வேலை தேடுறேன்னு சொல்லிட்டு.. பின்ன ரியல் எஸ்டேட் கம்பெனியில ஜாயின் பண்ணாரு. அடுத்தடுத்த மாசத்துல பண கஷ்டம். துபாயில சரியான வருமானம் இல்லாம பிழைக்க முடியாது. அப்பா, அம்மாக்கிட்ட இருந்து உதவி கேட்டு பணம் வாங்கி கொஞ்ச நாள் கடத்தினோம். ஆனாலும், முடியல.

இந்தியாவுக்கு...

இந்தியாவுக்கு...

திடீர்னு ஒரு நாள் வந்து, நீயும், மகனும் இந்தியாவுக்கே போங்க. நான் இங்க இருக்க வேலை எல்லாம் முடிச்சுட்டு, வீட காலி பண்ணிட்டு வந்திடுறேன். நாம இந்தியாவுலையே வேறே வேலை பார்த்து வாழ்க்கை நடத்திக்கலாம்ன்னு சொன்னாரு. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. ஊருக்கு சேஃபா வந்துட்டோம்னு சொல்ல கால் பண்ணேன்.. முதல்ல அட்டன்ட் பண்ணல. பின்ன, கார் ஓட்டிட்டு இருக்கேன் கூப்பிடுறேன்னு மெசேஜ் மட்டும் வந்துச்சு. ஆனா, காலும் வரல, வேற மெசேஜும் வரல.

வேறு வாழ்க்கை!

வேறு வாழ்க்கை!

நாங்க இந்தியா வந்து ரெண்டு, மூணு வாரம் கழிச்சும் எந்த பதிலும் இல்ல. எங்க காலும் எடுக்கல. ஒரு நாள் ஒரே மெசேஜ்... அவர்கிட்ட இருந்து... "இனிமேலும் நாம ஒண்ணா வாழ முடியாது. நீ வர வாழ்க்கை, நான் வேற வாழ்க்கை வாழுறது தான் நல்லது. உனக்கு வேணும்னா விவாகரத்து பண்ணிக்க. ஆனா, என்னால ஒரு பைசா கூட கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டரு. உடைஞ்சு போயிட்டேன். விவாகரத்து பண்ண தான் ப்ளைட் டிக்கெட் போட்டு அனுப்பி வைச்சார்னு அப்ப தான் புரிஞ்சுக்கிட்டேன்.

ஒரே ஒரு நல்லது...

ஒரே ஒரு நல்லது...

சரி! இவர் கூற வாழ்ந்த வாழ்க்கையில ஏமாற்றத்த தவிர நாம வேற என்னத்த அனுபவிச்சோம்னு விவாகரத்து பண்ண முடிவு பெண்ணேன். துபாய் வீட்டு அட்ரஸ், மொபைல் நம்பர், ஆபீஸ்னு எல்லாத்தையும் மாத்திட்டாரு. அவர பத்தி ஒரு தகவலும் இல்ல. விவாகரத்து பண்ணனும்னா கூட அவர காண்டாக்ட் பண்ண ஒரு வழியும் இல்ல. தப்பு பண்ணது எல்லாம் அவரு... ஆனா, இன்னிக்கி தண்டனை அனுபவிக்கிறது நானும், என் மகனும்.

அப்பா யாரு?

அப்பா யாரு?

என் மகன நல்லா வளர்க்க தினமும் என்ன ஷிப்ட்னு கூட பார்க்காம ஓயாமா வேலை பார்த்துட்டு வரேன். என் வயசான அம்மா, அப்பாக்கு தொந்தரவு கொடுக்க விரும்பல. அவருனால எனக்கு ஏற்பட்ட ஒரே நன்மை.. என் சொந்த கால்ல என்னால நிக்க முடியும், என் மகன வளர்க்க முடியும்னு கத்துக்கிட்டது தான்.

இன்னிக்கி, என் மகன, அவன் ஸ்கூல்ல பலர் அப்பா யார்ன்னு தெரியாதவன்னு சொல்லி கிண்டல் பண்றதா வருத்தப்படுறான். பரவாயில்ல.. தன்னோட அப்பா யாரு.. அவரு என்ன எல்லாம் துரோகம் பண்ணார்ன்னு தெரிஞ்சா.. இதவிட ரொம்ப வருத்தப்படுவான்.

கல்யாணம்கிறது நமக்கு பிடிச்ச நேரத்துல, நமக்கு பிடிச்ச நபரோட நடக்கணும். ஊருல, உறவுல நாலு பேரு, நாலு விதமா பேசுறாங்கன்னு பண்ணிக்கிட்டா... எனக்கு நடந்த மாதிரியான கொடுமைகளும் நடக்க வாய்ப்புகள் இருக்கு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: He Cheated on Me 8 Continuous Years.

Real Life Story: He Cheated on Me 8 Continuous Years. Every-time I Forgive Him.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more