மனைவியால் சிதைந்து போன திருமண வாழ்க்கை!My story #198

Posted By:
Subscribe to Boldsky

எங்க இருக்கீங்க.... அவள் கேட்கும் தொனியிலேயே அவள் இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பாள் என்று யூகிக்க முடிந்தது.

வெளிய ஒரு சார பாக்க வந்தேன் என்று சொல்லி முடிப்பதற்குள்.... குழந்தை அழும் சத்தம் கேட்டது, கணவன் மேல் இருக்கிற கோபத்தை குழந்தை மீது காட்டுவது தானே வழக்கம் பாவம் எங்கள் இருவருக்கும் இடையில் சிக்கி சோபி தான் மிகவும் சிரமப்படுகிறாள். அத்தனைக்கும் தற்போது தான் முதல் வகுப்பு சேர்ந்திருக்கிறாள்.

அப்பா.... சாய்ந்தரமும் ஸ்கூல்லயே வச்சிட்டு நைட்டு வீட்டுக்கு அனுப்புற மாதிரி ஸ்கூலா பாத்து சேத்து விடுப்பா.. நீ ஆபிஸ் விட்டு கிளம்பி அப்டியே என்னைய கூட்டிட்டு வீட்டுக்கு வந்திடலாம்,என்ற போது அவளை நினைத்து வருத்தப்படுவதா அல்லது மனைவியை அதட்டுவதா என்றே தெரியாமல் திக்கற்ற நின்றேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோபி :

சோபி :

மகள்..... என்னை அப்படியே உரித்து வைத்து பிறந்தவள், முக ஜாடையிலும் சரி, குணத்திலும் சரி எல்லாருமே.... பழகியவர்கள், முதன் முறையாக பார்ப்பவர்கள் எல்லாரும் தவறாமல் சொல்வது அப்டியே அப்பா மாதிரி இருக்கா என்பது தான்.

ஒரு வயது கூட நிரம்பாத வயதிலிருந்து தன் அம்மாவிடம் அடி வாங்கத் துவங்கிவிட்டாள் இந்த சாகசக்காரி.

திருமணம்.

திருமணம்.

இரண்டு தங்கைகளின் அண்ணனாக வீட்டின் முதல் வாரிசாக பிறந்த பாவத்தால் கடமைகளை எல்லாம் முடித்து திருமணம் செய்து கொள்ளும் போது எனக்கு வயது 33. தங்கைகளை திருமணம் செய்து வைத்து, அப்பா அம்மாவிற்கு சொந்த ஊரில் வீடு கட்டிக் கொடுத்து செட்டில் செய்த பிறகே எனக்கான திருமண ஏற்பாடு துவங்கியது.

நடுவில் அப்பாவிற்கு இருதய ஆப்ரேஷன், தங்கைகளுக்கு சீமந்தம், தாய்மாமன் சீர் எல்லாம் சேர்ந்திட திருமணம் தள்ளிக்கொண்டே போய் ஒரு வழியாக வரன் அமைந்தது.

மனைவி :

மனைவி :

பொண்ணு ஸ்கூல்ல டீச்சரா இருக்கு, கூடப்பிறந்தது ஒரேயொரு அண்ணன் தான் சென்னைல தான் வேலையும் பாக்குது அதனால உனக்கும் பிரச்சனையில்ல, கொஞ்சம் வசதியான குடும்பமாத்தான் இருக்காங்க என்று எல்லாம் ஆராய்ந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

வேலை, குடும்பம்,நண்பர்கள்,தங்கைகள்,தங்கையின் குழந்தைகள் என்றே என் வட்டம் இருந்தது, அதோடு அந்த வட்டத்தை தாண்டி என்னால் சிந்திக்க முடியாத படி வேலைகளும் சூழ்ந்து இருந்ததால் திருமணம் குறித்தோ அல்லது வரப்போகிற மனைவி குறித்தோ எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை.

 காதல் :

காதல் :

இதைச் சொல்லும் போதெல்லாம் என்னை ஆச்சரியமாய் பார்ப்பார்கள் அல்லது, பொய் சொல்றான் என்ற தொனியில் தான் அவர்களது பார்வை இருக்கும். பள்ளி, கல்லூரி நாட்களில் காதல், ஈர்ப்பு எல்லாம் இருந்திருக்கிறது தான்.

அதற்கும் வாழ்க்கைத் துணைக்கும் ஏகப்பட்ட வித்யாசங்கள் இருக்கிறதல்லவா? முதல் விஷயத்தின் போது நமது ஆசாபாசங்களை மட்டுமே பார்ப்போம் அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்போம், இரண்டாவதில் நம்முடைய விருப்பங்களை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டுத் தான் தயாராவோம்.

மனைவி :

மனைவி :

ஒரு நன்னாளில் கடன்களைப் பெற்று, சம்பந்தி வீட்டாரை திருப்திபடுத்தி சீரும் சிறப்புமாக திருமணம் நடந்தேறியது. திருமணம் முடிந்து விருந்து உபச்சாரங்கள் முடிந்த ஒரு வாரத்தில் சென்னைக்கு வந்து விட்டோம்.

கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையின் புரிதல் ஏற்படத் துவங்கியது.

எதிர்ப்பார்ப்புகள் :

எதிர்ப்பார்ப்புகள் :

இது கூட உங்களால நியாபகம் வச்சுக்க முடியாதா? என்பதில் ஆரம்பித்து சின்ன சின்ன மறதிக்கெல்லாம் சண்டை போட ஆரம்பித்தாள். தங்கச்சி புள்ளைங்க பொறந்த நாள் எல்லாம் நியாபகம் இருக்கு உங்க பொண்டாட்டி என் பொறந்த நாள் நியாபகம் இல்ல, கல்யாணம் ஆன நாள் எதுவும் நியாபகம் இல்லையா??

இப்போ ஏன் பணம் கொடுக்குறீங்க.... நீங்க தான் போய் பஸ் ஏத்தி விடணுமா என்று என் செயல்கள் ஒவ்வொன்றையும் கேள்வி கேட்க பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.

சோபி :

சோபி :

மகள் பிறந்தாள். வீட்டின் சூழ்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. அதுவரை இயந்தரத்தனமாகவும் வெறுப்பாகவும் இருந்த சூழல் மாறி கொஞ்சம் அன்பும் சிரிப்பும் சூழ்ந்திருந்தது.

பிரசவ கால விடுமுறைக்கு பின் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். குழந்தையை பார்த்துக் கொள்ள அம்மா வந்து தங்க ஆரம்பித்தார்.

மாமியார் மருமகள் :

மாமியார் மருமகள் :

இதன் பிறகு மாமியார் மருமகள் பிரச்சனையைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? அடிக்கடி சண்டை, வாய்த்தகராறு முற்றி இருவருக்கும் பேச்சு வார்த்தையே இன்றி கிடந்தார்கள். நாளுக்கு நாள் பிரச்சனை முற்றவே இரண்டு வயது முடியும் முன்னரே மகளை ஃப்ரீக்கேஜி சேர்த்தேன் அம்மாவை ஊருக்கு அனுப்பினேன், வீட்டு வேலைக்கும் மாலையில் மனைவி வரும் வரை குழந்தையை பார்த்துக் கொள்ளவும் ஒரு ஆளை நியமித்தேன்.

வீடியோ :

வீடியோ :

எப்டியோ நல்லா இருந்தா சரிடா என்று அம்மா கிளம்பிவிட்டார். அவ்வப்போது போன் பேசும்போது வீட்டுக்கு வாம்மா என்று தங்கைகளை அழைக்கும் போது, அட போண்ணே, அண்ணிய பாத்தாவே பயமாயிருக்கு.

சோபி என்ன பண்ணுது? பேசுதா? என்று ஆச்சரியப்பட்டு இயலாமையில் கேட்கும் உறவுகளுக்கு மகள் பேசும் வீடியோவை அனுப்பி வைப்பேன்

சந்தேகம் :

சந்தேகம் :

என்னை விட மனைவி சற்று நிறம் கம்மி, அதனாலோ என்னவோ தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை அவளுக்கு அதிகம்.எப்போது சண்டை நடந்தாலும் இந்த நிறத்தைப் பற்றி பேச்சு வராமல் இருக்காது.

அதனாலேயே.... குறிப்பாக தான் கருப்பாக இருப்பதால் நான் விட்டுச் சென்றுவிடுவேனோ அல்லது, அவளை வெறுத்துவிடுவேனோ என்ற பயம் இருந்தது, அந்த பயத்தின் விளைவாக எனக்கு வேறு பெண் யாருடனோ தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகமும் அவளுக்கு தொடர்ந்து வலுத்துக் கொண்டே போனது.

மகளும் :

மகளும் :

யார் செய்த பாவமோ மகளும் என்னைப்போலவே இருக்க, மகளையும் வெறுக்க ஆரம்பித்தாள், வீட்டு வேலைக்கு வருகிற வேலைக்காரியில் ஆரம்பித்து சோபியின் பள்ளி ஆசிரியை, உடன் பணியாற்றும் நண்பனின் மனைவி, காலையில் பசும்பால் வீட்டிற்கே வந்து ஊற்றும் அக்கா, எதிர் வரிசையில் இருக்கும் பலசரக்கடை அக்கா, இட்லிக்கடை அக்கா என எல்லாருடனும் எனக்கு கள்ளத்தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் அவளுக்கு.

ஏழு மணியைத் தாண்டி தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் நான் விளக்கம் சொல்ல வேண்டும்.

என்ன செய்ய ? :

என்ன செய்ய ? :

எத்தனையோ முறை அவளிடம் விளக்கம் கொடுத்துவிட்டேன், உன்னை விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன் என்று பல முறை சத்தியமும் செய்துவிட்டேன். சத்தியம் செய்த சில நாட்கள் அமைதியாய் இருப்பாள் பின் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடும்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நான் நேசித்த குடும்பம், பிறந்தது முதல் வாரி அணைத்து வளர்த்தெடுத்த தங்கைகளும், அவர்களின் குழந்தையையும் விட்டுவிட்டு ஒரு சிறை வாழ்க்கையை வாழ்வது போலத்தான் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நரக வேதனை :

நரக வேதனை :

இது தான் என்னுடைய வாழ்க்கை என்று தீர்மானமாகிவிட்ட பிறகு புதிய வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு வாழ பழகிவிட்டிருக்கிறேன். அவ அப்டித்தான் எப்ப பாத்தாலும் கத்திட்டே இருப்பா என்று விலக ஆரம்பித்துவிட்டேன் என்பது நன்றாக தெரிகிறது.

தொடர்ந்து சந்தேகப்பட்டு தன்னையும் வறுத்தி, என்னையும் குழந்தையையும் வதைக்கும் மனைவியை எப்படி அணுகுவது என்ன சொல்லி நம்ப வைப்பது என்று தெரியாமல் தினம் தினம் நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: relationship marriage my story
English summary

Man Shares His Marriage Life Experience

Man Shares His Marriage Life Experience
Story first published: Friday, March 9, 2018, 16:10 [IST]