For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைக் வைத்து சூதாட்டம் ஆடிய மாப்பிள்ளை my story #248

திருமணம் செய்து கொண்டு வெளியூருக்குச் சென்ற பெண் அங்கே பல உண்மைகளை கண்டு திடுக்கிடுகிறார். அதைவிட கணவர் ஓர் கேடுகெட்ட சூதாட்டக்காரன் என்பதை அறிந்து அங்கிருந்து தப்பித்து வருகிறார்.

|

பிறந்து வளர்ந்தது எல்லாமே திருச்சிக்கு அருகில் உள்ள கிராமத்தில். பள்ளிப்படிப்பு வரையிலும் உள்ளூரிலும் பக்கத்தூரிலுமே தாட்டிவிட்டோம். அப்பாவிற்கு ஒரு ஜவுளிக்கடையில் வேலை. எங்கள் வீட்டில் உள்ள நால்வரின் பசியாற்றவே போதாது. இன்னிலையில் எங்கிருந்து என்னை கல்லூரிக்கு அனுப்ப?

வேலைக்குப் போ கரஸ்ல படிச்சிக்கோ, கல்யாணத்துக்கு வேற பணம் சேக்கணும் உன்னையெல்லாம் படிக்க வைக்க செலவு பண்ண முடியாது என்றார் அப்பா. அழுது அடம்பிடித்தேன் வெளியூர் கல்லூரியென்றால் தங்குவதற்கே நிறைய செலவாகும் என்று யோசித்தார். பலரின் உதவியால் ஒரு வழியாக ஒரு கல்லூரியில் பி.காம் சேர்ந்தேன். வீட்டில் இருந்த ஐந்து பவுன் நகை,வண்டி,வெள்ளி குத்துவிளக்கு,அம்மாவின் தோடு,தங்கையின் கொலுசு என எல்லாம் விற்கப்பட்டது. மூன்று வருட படிப்பு முடிவதற்குள் எங்களிடமிருந்த உடையையும் சில தட்டுமுட்டு சாமான்களையும் தவிர எல்லாத்தையும் இழந்திருந்தோம்.

என்ன இருந்தாலும் படிப்பதற்காகத்தானே செலவழித்திருக்கிறோம். வேல கிடச்சுட்டா எல்லாம் சம்பாதிச்சிடலாம் என்றே அம்மா தன்னையும் எங்களையும் சமாதானப்படுத்தினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமணப் பேச்சு :

திருமணப் பேச்சு :

சென்னையில் வேலை கிடைத்தது. கிடைக்கிற பன்னிரெண்டாயிரத்தில் என் செலவுகளை எவ்வளவு தூரம் சுருக்க முடியுமோ சுருக்கிக் கொண்டு கடனை அடைக்கவும் வீட்டுச் செலவுக்கும் என பணம் அனுப்பி வைத்தேன். நான் பட்ட கஷ்டம் என் தங்கை பட்டுவிடக்கூடாது என்பதற்காக என் முதல் மாதச் சம்பளத்திலிருந்தே கல்லூரிக்காக என்று பணத்தை சேமிக்க ஆரம்பித்தேன்.

மூன்று ஆண்டுகள் இப்படியே இறுக்கிபிடித்து ஓடியது. தங்கை கல்லூரி முதலாம் ஆண்டு அடியெடுத்து வைத்தாள். கடன் எல்லாம் அடைத்து விட்டிருந்தோம். எனக்கும் சம்பளம் சற்றே கூடியிருந்தது. இந்த நேரத்தில் தான் அம்மா என்னுடைய திருமணப் பேச்சை எடுத்தார்.

என்ன சொல்றது? :

என்ன சொல்றது? :

வார விடுமுறைக்காக ஊருக்குச் சென்றிருந்த போது என்னிடம் சொல்ல, ம்ம்மா ஒரு பிஜி கோர்ஸ் படிக்கணும் அப்பறம் ஒரு எக்ஸாம் எழுதினா எனக்கு மேனேஜர் போஸ்ட் கிடைக்கும். சம்பளம் நிறைய கிடைக்கும். ரெண்டு வருஷம் ஆகட்டும். ரெண்டு வருஷத்துல அவளும் படிப்பு முடிச்சிருவா அவளும் வேலைக்கு போய்ட்டானா சம்பளம் வரும். இப்பவே ரொம்ப டைட்டா இருக்கு.. என்றேன்.

ம்ம்ம்... நாங்க என்ன ஒத்த புள்ளையா பெத்து வச்சிருக்கோம் இல்ல திரியட்டும்னு விடறதுக்கு என்ன ஆம்பளப்புள்ளையவா பெத்து போட்ருக்கோம். ரெண்டும் பொம்பளப்புள்ள இந்தா உனக்கு முடிச்ச அடுத்த ரெண்டு வருஷத்துல அந்த புள்ளைக்கு கல்யாணம் கட்டணும்.

வரன் :

வரன் :

அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அம்மாவே கேட்கவில்லை எனும் போது அப்பா எங்கிருந்து கேட்பது மூன்று மாதம் இப்படியே ஓடியது. ஜாதகமும் போட்டோவுமாக அம்மாவும் அப்பாவும் அலைந்தார்கள். இறுதியாக ஒரு வரன் முடிவானது. கழுத்தை நெருக்கும் அவ்வளவு நெருக்கடியான சூழலில் திருமணம் செய்யவே எனக்கு விருப்பமில்லை அம்மா சொல்வதற்கு எல்லாம் உம் கொட்டினேன்... அவர்கள் சம்மதம் என்று நினைத்து விட்டார்கள்.

வீட்டிற்கு பெண் பார்க்க வந்தார்கள்.... பேரம் பேசப்பட்டது இரண்டு மாதங்களில் நிச்சயதார்த்தம் முடிவானது. முகநூலில் அறிமுகமாகி போனில் பேச ஆரம்பித்தோம்.

நிச்சயதார்த்தம் :

நிச்சயதார்த்தம் :

நாளாக நாளாக எனக்கே தெரியாமல் அவர் மீது நான் காதல் வயப்பட்டுவிட்டேன். தினமும் காலை எழுவதிலிருந்து இரவு என்னையறியாமல் கண்ணயர்ந்து தூங்குவது வரையிலும் சாட் ஓடிக் கொண்டிருக்கும்.இந்த திருமணமே வேண்டாம் வேண்டாம் என்று நினைத்துக் கொண்டிருந்தோமே.... ஆனால் எனக்கு இவ்வளவு அழகான, அன்பு செலுத்துகிற கணவன் கிடைத்திருக்கிறானே அதுவும் பெங்களூருவில் பணியாற்றுகிறவர். எங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு சென்னை தான் அவர்களைப் பொறுத்தவரையில் பெரிய நகரம் அதையும் தாண்டி பெங்களூருக்கு திருமணம் முடித்து செல்லப்போகிறேன் என்று நினைக்கையிலேயே மிகவும் பெருமையாக இருந்தது.

மகளை பெரிய இடத்தில் கட்டிக் கொடுக்கப் போகிறோம் என்ற சந்தோஷம் அம்மா அப்பா இருவரையும் துருதுருவென்று வேலை பார்க்க வைத்தது

நெருக்கம் :

நெருக்கம் :

நாளுக்கு நாள் எங்களுக்கிடையில் நெருக்கம் அதிகரித்தது. வெளியூரில் இதுவரை நாங்கள் யாருமே நினைத்துக்கூட பார்க்காத ஊரில் பணியாற்றுவதனாலோ என்னவோ அவர் மீது எனக்கு பிரம்மிப்பு இருந்தது அந்த பிரம்மிப்பு நாங்கள் பேச ஆரம்பித்த ஒரு மாதத்திற்கு பிறகும் தொடர்ந்தது.

நிச்சயதார்தத்திற்கு பத்து நாட்கள் முன்பாக திடீரென்று அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. நான் அனுப்பிய எந்த மெசேஜுக்கும் ரிப்ளை அனுப்பவில்லை. நூறு முறை போன் செய்தும் எடுக்கவில்லை. ஒரு நாள் இரண்டு நாட்கள் எதாவது காரணம் இருக்கும் என்று சமாதான சொல்லிக் கொள்ளலாம். ஆனால் ஒரு வாரம் கடந்தும் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை எனும்போது உள்ளுக்குள் பயம் தொற்றிக் கொண்டது. மெயில்,முகநூல் என எதிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதுவரை அவ்வளவு நெருக்கமாக இருந்துவிட்டு திடீரென்று இல்லை என்பது மிகவும் துயர் மிகுந்ததாகவே இருந்தால் என்னால் இயல்பாகவே இருக்க முடியவில்லை.

அந்தக் கேள்வி :

அந்தக் கேள்வி :

நிச்சயதார்த்தத்திற்கு இரண்டு நாட்கள் முன்பாக அவராகவே லைனுக்கு வந்தார். குரலைக் கேட்டதும் தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தேன். எங்க போன ஏன் இவ்ளோ நாள் பேசல என்று எந்தக் கேள்வியும் கேட்கத் தோன்றவில்லை அவன் திரும்ப கிடைத்துவிட்டான், அவனுடைய குரலை கேட்டுவிட்டேன் என்பதுவே எனக்கு போதுமானதாக இருந்தது.

எதேதோ காரணங்களைச் சொன்னான். பின் சகஜமாக என்னிடம் பேச ஆரம்பித்தான். மறுநாள் நான் கேக்குறேன்னு தப்பா நினைக்காத.... கோச்சுக்க மாட்டில்ல என்ற ஏகப்பட்ட பீடிகைகளுடன் தொடர்ந்தான்

அப்படி என்ன கேட்டுவிடப்போகிறான் என்று நினைத்தபடியே நீ என்ன கேட்டாலும் நான் கோச்சுக்கமாட்டேன் என்றேன்.

நீண்ட நேரத்திற்கு பின்..... ஆர் யூ வெர்ஜின்? அனுப்பியிருந்தான்.

விர்ஜின் :

விர்ஜின் :

படித்த மாத்திரத்தில் திக்கென்றது. இப்போது ஏன் இந்தக் கேள்வி, எதை நினைத்து இப்படி கேட்கிறான்.... இவ்வளவு நாட்களாக இல்லாமல் நிச்சயதார்த்தத்திற்கு முந்தைய நாள் இப்படி கேட்பதற்கு என்ன காரணம்? அவன் என்னை ஏமாற்றப் பார்க்கிறானா என்று எக்கச்சக்க கேள்விகள் அதை விட அவன் என்னை சந்தேகப்படுகிறானா? என்றும் தோன்றியது.

இந்த யோசனையில் இருந்ததினால் அவனுக்கு பதிலனுப்பவில்லை அதற்குள்ளாக இரண்டு முறை ரிப்ளை.... வாட் ஹேப்பண்ட் என்று அனுப்பியிருந்தான். இப்படி ஏன் அவசப்படுத்துகிறான் என்று புரியாமல் ஏன் கேக்குற என்று கேட்டேன். நீ மொதோ பதில் சொல்லு என்றான். உன்னிடம் சொல்ல வேண்டிய, நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்ல என்று அவன் முகத்தில் காரி உமிழும் அளவிற்கு கோபம் வந்தது ஆனால் என்ன செய்ய குடும்பம்,சூழல் எல்லாம் என்னை தடுத்துவிட்டது.

யெஸ் ஐ ம் விர்ஜின் என்று அனுப்பினேன். அடுத்த நொடி தேங்க் காட் என்று அனுப்பினான்.

திருமணம் :

திருமணம் :

அடுத்த மாதமே திருமண தேதி குறிக்கப்பட்டது. என்னால் பழையபடி அவனிடம் பேசமுடியவில்லை நன்றாக பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று என்னிடம் ஏன் அப்படிக் கேட்டான் என்று மனதில் தோன்றும்.... இப்போ இவ்ளோ பாசமா பேசுறான் ஆனா அன்னக்கி ஏன் அப்டி கேட்டான்? என்னுள்ளேயே கேட்டுக் கொண்டேன்.

ஒரு வழியாக இருவருக்கும் திருமணம் முடிந்தது. முன்பை விட என்னிடம் நெருங்கவே தயங்கினான். விருந்து, சம்பிரதாயங்கள் எல்லாம் முடித்து ஒரு வாரத்திற்கு பின் பெங்களூருக்கு வந்தோம்.

என்ன பண்றதுன்னு தெர்ல :

என்ன பண்றதுன்னு தெர்ல :

இரண்டு நாட்கள் வீட்டை செட் செய்து, கிட்சன் செட்,டிவி துணிகள் என ஷாப்பிங் சென்று வீட்டை ஓரளவுக்கு செட் செய்தேன். சில நாட்கள் வேலைக்குச் சென்று வந்தான். ஒரு நாள் அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வந்துவிட்டான். தலையில் கைவைத்து பீன் பேகில் உட்கார்ந்தவனிடம் என்ன கேட்பது என்ற குழப்பத்தில் கீழே அவனருகில் போய் உட்கார்ந்து கொண்டேன்.

நானாக சரியாப் போகும் என்றேன். நிமிர்ந்து என்னைப் பார்த்தவன் கன்னங்களை ஏந்தி சில நொடிகள் கண்களைப் பார்த்தான் பின் தலையை குனிந்தபடி என்ன பண்றதுன்னு தெர்ல என்று முணுமுணுத்தான்.

 சொல்லு இப்போ :

சொல்லு இப்போ :

என்ன பிரச்சன? என்ன ஆச்சு என்றேன்.... நீண்ட மௌனத்திற்கு பிறகு வாயைத் திறந்தான் அவன் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெருப்பு பிளம்பாய் கொதித்தது எனக்கு. என்னவருக்கு சூதாட்டத்தில் பெரும் ஆர்வம் கொண்டவர். வார இறுதி நாட்களில் மதுவிடுதிகளுக்குச் செல்வேன் அங்கே நண்பர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு இரண்டு பெக் அடித்துவிட்டு வந்துவிடுவேன் என்று என்னிடம் சொன்ன கதையில் சின்ன திருத்தம்.

அந்த சிறிது நேரம் பேசும் நேரத்தில் தான் சூதாட்டம் நடந்திருக்கிறது. பணத்தை அங்கே இங்கே என்று புரட்டி சூதாடியிருக்கிறார். ஆரம்பத்தில் இரட்டிப்பாக பணம் கிடைத்ததை தொடர்ந்து அதிக பணம் கொட்ட ஆரம்பித்திருக்கிறார். போடும் அளவினை விட இரண்டு மடங்கு பணம் எடுக்கலாம் என்ற நப்பாசையில் தொடர்ந்து பணத்தை இழந்திருக்கிறார். இப்படி அவர் இழந்தது மட்டும் பத்து லட்சம். இதைத்தவிர செல்ஃபோன்,வாட்ச், லேப்டாப், உட்பட தன்னிடமிருந்த சாமன்கள் வைத்து எல்லாம் சூதாடியிருக்கிறார். வைத்திருந்த பைக்கையும் இழந்து இப்போது ஒரு ஸ்கூட்டியில் தான் சென்று கொண்டிருக்கிறார்.

இதுக்கு தானா? :

இதுக்கு தானா? :

கடந்த ஆறு மாதங்களாக பேசிக் கொண்டிருக்கிறோம். அம்மாவும் அப்பாவும் தேடி சலித்து நல்லவன் என்று சர்டிஃபிக்கேட் கொடுத்தவனா இவ்வளவு விஷயங்களை செய்திருக்கிறான். இதுவரையிலும் இப்படி ஒரு விஷயம் நடப்பதாகவே எங்களுக்கு தெரியவில்லையே எவ்வளவு சாமர்த்தியமாக என்னிடமிருந்து மறைத்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டேன்.

சரி விடு.... நானும் வேலைக்குப் போறேன், வாடகை கம்மியா வேற வீட்டுக்குப் போகலாம் . சீக்கிரம் கடன அடச்சிடலாம் இதுக்கெல்லாம் தலைல கைய வச்சிட்டு உக்காருவியா எந்திரி வா சாப்டு என்றேன்.

அதில்லடி என்று எழுந்த என் கையை பிடித்து இழுத்தான்.

திகில் இரவு :

திகில் இரவு :

அன்னக்கி மாசக்கடைசி கைல காசில்ல க்ளப்புக்கு போய்ட்டேன் மௌனமானான்... சரி என்ன பண்ண? உன்கிட்ட கூட கேட்டேனே ஒவ்வொரு வார்த்தையும் இடைவேளி விட்டு வந்து விழுந்தது. என்ன கேட்ட என்று நினைவுப்படுத்தி விர்ஜினான்னு கேட்டத சொல்றியா என்றதும் ம்ம்ம் ஆமாமா என்றான்.

அதுக்கென்ன இப்போ... அதுல தான்.

ஒரு பக்கம் அதிர்ச்சியாகவும் இன்னொரு பக்கம் சொல்ல வருவதை தெளிவாகச் சொல்லாமல் இழுத்தடிப்பதால் எரிச்சலாகவும் இருந்தது. என்ன சொல்ல வர்ற தெளிவாச் சொல்லு கத்தினேன்.

இதுல நான் தோத்துட்டா.... இல்ல நான் தோக்க மாட்டேன்ற நம்பிக்கையில உன் விர்ஜினிட்டி மேல பெட் கட்டினேன். எப்டியாவது ஜெயிச்சிடலாம்னு நினச்சேன். கடைசி செக்கண்ட்ல.... போச்சு என்று முடிக்கையில் அவனை விட்டு ஒரு அடி விலகியிருந்தேன்.

யாரோ :

யாரோ :

அவன் தலையில் கை வைத்து உட்கார்ந்திருப்பதன் காரணம் புரிந்தது. கத்தி அழ மட்டும் தான் முடிந்தது. ஏய் நான் எப்டியாவது ஜெயிச்சிடலாம்னு தான் நினச்சேன் ஆனா இப்டி என்று எதையோ சொல்ல வந்து நிறுத்தினான். இனி இவனிடம் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்று சொல்லி படுக்கையறைக்குச் சென்று விட்டேன்.

அப்படியே கண் அயர்ந்திருந்தேன். திடிரென்று விழிப்பு வந்தது. மணி இரண்டைக்காட்டியது. நைட் லேம்ப் வெளிச்சத்தில் அறையைப் பார்த்தேன். அருகில் அவர்... அட இல்லை யாரோ வேறு யாரோ என்று கத்தி அலறி எழுந்தேன். லைட் ஆன் செய்தால் ஆம் என்னருகில் யாரோ படுத்திருந்தான்.

ஏய் யார்ரா நீ என்று கத்தினேன். உடனே அவன் எழுந்து கணவரிடம் வெளியில் சென்றுவிட்டான்.

விவாகரத்து :

விவாகரத்து :

எதோ மொழியில் கணவரிடம் கண்டிப்பான முறையில் உளறினான். கையில் பாட்டிலுடன் தள்ளாடியபடி வந்த என் கணவரானவர் அவனிடம் கெஞ்சி மன்றாடிக் கொண்டிருந்தார். இங்கே இன்னமும் இருந்தால் என் உயிருக்கு கூட ஆபத்தாய் முடியும் இனியும் கணவர்,குடும்பம்,ஊர்ல இருக்குறவங்க என்ன நினைப்பாங்க என்று நினைத்துக் கொண்டிருந்தால் நம் உயிரை இழப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்த மறுநொடி வீட்டை விட்டு வெளியேறினேன். வெளியேறுகையில் மூன்று பேருக்கும் கைகலப்பு ஒருவனுக்கு ஒரு எத்து இன்னொருவனின் கையை பலமாக கடித்து அங்கிருந்து தப்பித்தேன்.

வீட்டினருக்கு விஷயம் தெரியவந்தது. நல்ல வேளையாக வாழாவெட்டியா வந்துட்டா தங்கச்சிய யாரு கட்டிப்பா அட்ஜஸ்ட் பண்ணிட்டு தான் வாழணும் என்று பாடமெடுக்காமல் என்னைத் தேற்றினார்கள். எதையும் நினைக்காதம்மா மொதோ அவனுக்கு டைவரஸ் கொடு என்றார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Husband Plays Gambling With Wife Virginity

Husband Plays Gambling With Wife Virginity
Desktop Bottom Promotion