For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தக் கல்யாணம் வேண்டாம் கடைசி நிமிடத்தில் மணமகளின் திடீர் முடிவு! my story #235

பெண்ணொருவர் தன்னுடைய திருமண நிச்சியதார்த்தத்தை வேண்டாம் நிறுத்தி விடுங்கள் என்கிறார். இதனால் பெரும் பிரச்சனை வெடிக்கிறது. திருமணம் நிச்சயதார்த்தம் வேண்டாம் என்றதற்கு என்ன காரணம்

|

கல்லூரி படிக்கும் போது ஒரு ஒன்சைட் லவ் இருந்தது.ஆனால் அதை என் நண்பர்களிடம் கூட சொல்லவில்லை அந்த அளவிற்கு பயந்த சுபாவம் கொண்டவன் நான். பயம் என்பதவிட ஒரு பெண்ணிடம் நேரடியாக சென்று பேச எனக்கு மிகவும் தயக்கமாய் இருந்தது.

அதோடு காதல் என்று பேச்சைக் கேட்டாளே அறிவாளை தூக்கி கொள்ளும் குடும்பத்தில் பிறந்ததாலும் அப்பா மிகவும் கண்டிப்பானவர் என்பதாலும் எனக்கு காதலிக்கவே தோன்றவில்லை என்றும் சொல்லலாம். நான் கல்லூரி செல்லத் துவங்கிய பிறகும் அப்பா எங்களை கை ஓங்குவதை நிறுத்தவில்லை நாங்கள் அவருக்கு பயந்து நடுங்குவதை தவிர்க்க முடியவில்லை. நாங்களே நானும் தம்பியுமே இப்படி பயப்படுகிறோம் என்றால் அம்மாவைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

அப்பாவைத் தேடி எப்போதும் ஆட்கள் வந்து கொண்டேயிருப்பார்கள். கிட்டத்தட்ட எங்கள் பகுதியின் முக்கிய பிரமுகராகவே இருந்தார். அவருடைய மகன் என்பதால் எங்களுக்கும் வெளியில் ஏக மரியாதை கிடைக்கும். மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தும் அப்பாவின் சிபாரிசுனாலேயே இவ்வளவு பெரிய கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நண்பர்கள் :

நண்பர்கள் :

வாரம் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது எனக்கு பாக்கெட் மணியாக கிடைக்கும், பணத்தேவைக்கு எந்த பஞ்சமும் இல்லை பைக், வீக்கெண்ட் பார்ட்டி என்று மிகவும் ஆடம்பரமாகத்தான் கழிந்தது என் கல்லூரி வாழ்க்கை. என்ன மச்சி உனக்கு இன்னும் செட் ஆகலை என்று உசுப்பேற்றுவதற்கு என்றே என் பின்னால் ஒரு கூட்டம் சுற்றியது.

நண்பர்களை இதில் நாம் எந்த குத்தமும் சொல்ல முடியாது. அவர்களிடத்தில் எனக்கு பெண்களிடத்தில் பேச தயக்கமாய் இருக்கிறது என்று சொல்லமுடியுமா? அதனால் வெட்டி டயலாக்குகளை பேசி டாப்பிக்கை மாற்றிவிடுவேன்.

ஆசை :

ஆசை :

இந்த பாழாப்போன காதல் ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது. உடன் படிக்கும் நண்பர்களின் கதைகள், சினிமாவில், என எங்கு திரும்பினாலும் காதல் ஒரு போதையாகவே எனக்குள் ஏறிக் கொண்டிருந்தது. காதல் ஆசை எனக்குள்ளும் துளிர்விட்டது. ஒரு பொண்ண பாக்கணும் பிடிக்கணும் உசிருக்கு உசிரா லவ் பண்ணனும் செல்லமா சண்ட போட்டுக்கணும் அப்பறம் கல்யாணம் பண்ணிக்கணும்.

இந்த உலகத்துல எனக்குனு ஒருத்தி, என்று நினைக்கும் போதே அவ்வளவு ஆனந்தமாய் இருந்தது.

கனவு :

கனவு :

அடிக்கடி கனவு வரும். கல்லூரியில் என்னுடைய க்ரஷ்ஷாக இருந்த பெண்ணிடம் காதலைச் சொல்வது போலவும் அவளும் ஏற்றுக் கொள்வது போலவும் அதன் பிறகு அவளுடன் நான் கனவுலகிலேயே வாழ ஆரம்பித்தேன். அவளை எப்படியெல்லாம் தாங்குவேன் என்பதை நான் கற்பனை செய்து கொண்டேயிருப்பேன்.

அதனாலேயே அடிக்கடி தனிமையை தேடிச் செல்ல ஆரம்பித்தேன். காமமும், காதலும் கலந்த அந்த கற்பனை வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அப்பா என்ன சொல்வாரு? :

அப்பா என்ன சொல்வாரு? :

எல்லாமே நல்லபடியாக கடந்து போகும் இறுதியில் திருமணம் என்னும் பேச்சு எடுக்கும் போது தான் அப்பாவின் முகம் நினைவுக்கு வரும் அப்பாவிடம் என்ன சொல்வது? திருமணம் செய்து கொண்டு எங்காவது ஓடிப் போய்விடலாமா? ஒரு மணி நேரத்தில் அப்பா நானிருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுவார்.

ஒரு வேளை நான் திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கே வந்து அப்பா அவள் முன்னால் என்னை அடித்து விட்டாரென்றால்? இப்படி பல கேள்விகள் எழும் ஒரு பக்கம் கோபாம், அழுகை, தாழ்வு மனப்பான்மை என ஒரு பயித்தியமாய் சுற்றினேன். சில நேரங்களில் இந்த கற்பனை வாழ்க்கையை நினைத்துப் பார்த்தால் எனக்கே சிரிப்பாய் இருக்கும்.

வேலை :

வேலை :

படிப்பு முடிந்தது இறுதி வரையில் அவளிடம் என் காதலைச் சொல்லவேயில்லை.... நாட்கள் ஓடியது அவளுக்கு திருமணமாகிவிட்டதாக நண்பர்கள் சொன்னார்கள் எனக்கு வெளியூரில் வேலை கிடைத்தது. அங்கே ஒரு சில பெண் தோழிகள் கிடைத்தார்கள் என்றாலும் காதலியாக யாரும் அமையவில்லை.

ஒரு வேலை என்னுடைய பயமும் தயக்கமுமே எனக்கு வேலியாக இருந்திருக்கலாம்.

வரன் :

வரன் :

அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எனக்கு வரன் பார்த்தார். யாரென்றே தெரியாத ஒரு பெண்ணிடம் எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்று தயங்கி நின்றேன். மச்சி உனக்கு தான் எந்த பொண்ணும் செட் ஆகலலடா.... பேசாமா வீட்ல சொல்ற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோடா என்றான் நண்பன்.

அவள் வந்து விட்டாள் :

அவள் வந்து விட்டாள் :

பெண் பார்க்க போகலாம் என்று சொல்லி அம்மா ஊரிலிருந்து அழைத்தாள். நான் அம்மா அப்பா உறவுக்கார பெரியம்மா மற்றும் தாத்தா எல்லாரும் சென்றோம். பெண் வீட்டார் அப்பாவிற்கு ஏக மரியாதை அளித்தார்கள். உங்க சம்மந்தம்னு சொன்னதுமே நான் ஒகே சொல்லிட்டேன்.

உங்க வீட்ல சம்மந்தம் வச்சுக்குறதுல நமக்கு ரொம்ப சந்தோசமுங்க.... என்று வாசலுக்கே வந்து வரவேற்றார்.

அம்மா போலாம்மா :

அம்மா போலாம்மா :

ஏனோ தெரியவில்லை எனக்கு ரொம்பவுமே தயக்கமாய் இருந்தது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் நான் நெளிந்து கொண்டே உட்கார்ந்திருந்தேன். அப்பாவும் அந்த பெண்ணின் தந்தையும் எதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். தலைமுறைகளின் பெயர்களைச் சொல்லி சொந்தம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

என சகவயதுக்காரனான தம்பி இருந்தாலவது சற்று ஆறுதலாய் இருந்திருக்கும், அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை இங்கே சிக்கிக் கொண்டேன். அம்மா போலாம்மா என்று அம்மாவை இழுத்தேன்.

பொண்ண வரச் சொல்லுங்க :

பொண்ண வரச் சொல்லுங்க :

டேய் என்ன சின்ன பையனா நீ? இங்க எதுக்கு வந்திருக்கோம் போலாங்குற என்று முறைத்தார். மொக்கையான ஒரு ஜோக்கை சொல்லிவிட்டு மனைவியிடம் மகளை அழைத்து வரச்சொன்னார்.

ஒரு அமைதி.... கொலுசு சத்தம் கேட்டது. கேட்ட மறுகணம் நான் தலையை குனிந்து கொண்டேன். காபி தட்டு முதலில் அப்பாவிடம் காண்பித்தாள், பிறகு என்னிடம் அடுத்து அம்மாவிடம் என கடந்து சென்றாள்.

லட்சணமா இருக்கா :

லட்சணமா இருக்கா :

பொண்ணு நல்லா லட்சணமா இருக்கால்லக்கா அம்மாவும் பெரியம்மாவும் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். இந்தப் பக்கம் இரண்டு அப்பாக்களும் சேர்ந்து வரதட்சனையையும் சொத்தையும் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் தனியாக அவள் கொடுத்த காபியை சுவைத்துக் கொண்டிருந்தேன். அப்போதும் குனிந்த தலை நிமிறவில்லை.

காபியை நீட்டிய போது அவள் என் முன்னால் வந்து நின்ற நொடியை திரும்ப திரும்ப கொண்டு வந்து அவளது உருவம் எப்படியிருக்கும் என்பதை மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு முறை பார்த்துவிடேன் :

ஒரு முறை பார்த்துவிடேன் :

கைகளில் மருதாணி இட்டிருந்தால், மோதிர விரலிலும், ஆள்காட்டி விரலிலும் மோதிரம் அணிந்திருந்தாள். நகங்கள் அழகாக இருந்தது. குனிந்து காபித் தட்டை நீட்டும் போது மார்பில் விழுந்திருந்த தங்க காசு மாலை சிறிது நேரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

சிகப்புக்கல் வைத்த வளையல் இரண்டு கைகளிலும் அணிந்திருந்தால். முதல் பார்வையில் என்னால் கவனிக்க முடிந்தது இவ்வளவு தான். இதைத்தாண்டி எவ்வளவு முயன்றும் அவளது முகமோ அல்லது வேறு அடையாளமோ எதுவுமே நினைவுக்கு வரவில்லை.

அடடா அழகே :

அடடா அழகே :

ஒரு முறை பார்த்துவிடேன் ஏன் இவ்வளவு தயக்கம் இந்தப் பெண் உனக்கானவள் தான், இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதால் அப்பா எதுவும் சொல்லமாட்டார் அப்பா ரொம்பவே சந்தோஷப்படுவாங்க ஒரு தடவ மட்டும் முகத்த பாரு என்று உள்ளுக்குள் என்னை நானே திட்டிக் கொண்டேன்.

நீண்ட முயற்சிக்குப் பிறகு நிமிர்ந்து அந்த முகத்தைப் பார்த்தேன்.

 முதல் புன்னகை :

முதல் புன்னகை :

பார்த்ததுமே அதிர்ச்சி. மகாராணி போல இருந்தாள். என்ன தான் நான் சொன்னாலுமே நான் மிகவும் அதிகப்படியாக சொல்வது போலத்தோன்றிடும் அதனால் இதோடு முடித்துக் கொள்கிறேன்.

அவளை மிகவும் பிடித்துவிட்டது, அவள் அம்மாவுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தாள்.என்னைப் போல தலையை குனிந்து கொண்டு எல்லாம் இல்லை அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டு மிக இயல்பாய் இருந்தால் தன்னை பெண் பார்க்க வந்திருக்கிறார்கள் என்ற எண்ணமே அவளிடம் இல்லை.

சிறிது நேரத்தில் எங்களது பார்வை நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது. டக்கென சிரித்தாள். நான் தலையை குனிந்து கொண்டேன் பின் பல்லைக் கடித்துக் கொண்டு தலைநிமிர்த்தி அவளைப் பார்த்து சிரித்தேன்.

கவிதைகள் :

கவிதைகள் :

அதன் பிறகு கவிதைகள் எழுதுவதென்ன, என்ன ப்ரோஃபைல் பிக் மாற்றுவதென்ன ரெக்கை கட்டி பறந்தேன். எனக்கு இப்டியெல்லாம் எழுத வருமா? என்று அப்போது தான் கண்டுணர்ந்தேன். முகநூலில் நண்பர்களானோம். எந்நேரமும் சாட்டிங் தான் அதன் பிறகு இருவரும் பேச ஆரம்பித்தோம். மிகப்பெரிய அளவில் நிச்சயதார்த்தம் நடந்தது. மூன்று மாதம் கழித்து திருமணம் முடிவு செய்திருந்தார்கள்.

ஆரம்பத்தில் சில தயக்கங்கள் இருந்தாலும் பின் இருவருமே மிக சகஜமாக பேசினோம்.

 பிரச்சனை :

பிரச்சனை :

அவள் எனக்கானவள், இதுவரை காலமும் கற்பனையில் வாழ்ந்த வாழ்க்கை இனி நிஜமாகப் போகிறது என்று நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டேன். வேலை காரணமாக நான் வெளியூருக்கு செல்ல வேண்டி வந்தது அப்போதெல்லாம் எப்போதும் என்னுடன் போன் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பேன்.

நிமிடத்திற்கு ஒரு முறை போன் செய்து விசாரிப்பேன். நான் செலுத்துகிற அன்பு அதேயளவு எனக்கும் திரும்ப வர வேண்டும் என்று நினைத்த கணத்திலிருந்து எங்கள் இருவருக்குள்ளும் சண்டைகள் வர ஆரம்பித்தது.

டார்ச்சர் :

டார்ச்சர் :

இப்பதான பேசிட்டு வச்ச அதுக்குள்ள திருப்பி ஏன் கால் பண்ற? ஆன்லைன்ல இருந்தா எப்பவும் உனக்கு பதில் சொல்லிட்டே இருக்கணுமா? ஒரு ஐஞ்சு நிமிஷம் நிம்மதியா தூங்க விடுறியா? ஏன் இப்டி டார்ச்சர் பண்ற என்று ஒரு முறை கேட்டுவிட்டாள். அப்போதும் நான் சுயநினைவுக்கு வரவில்லை. அன்பைக் காட்டுகிறேன் என் வாழ்க்கையில் எதிர்ப்பார்த்த நீண்ட நாள் ஏங்கிய ஒன்று என் கைகளுக்கு வந்துவிட்டது. அதற்கு நான் என் அன்பு மொத்தத்தையும் என் சகலத்தையும் கொடுக்கப்போகிறேன் என்று முடிவு செய்திருந்தேன்.

 இந்த கல்யாணம் வேண்டாம்ப்பா :

இந்த கல்யாணம் வேண்டாம்ப்பா :

ஆனால் இந்த அன்பு ஒரு கட்டத்தில் டார்ச்சராக மாறும் என்று எனக்கு தெரிந்திருக்க வில்லை. காதல் என்பது மூடி வைத்து அடைகாப்பது அல்ல சுதந்திரமாக பறக்க விடுவது என்று எனக்கு தெரியவில்லை. அன்பை வெளிக்காட்டும் வழி இது ஒன்று தான் என்று நினைத்த எனக்கு அந்த ஒன்று விரைவிலேயே பிடிக்காமல் போகும் டார்ச்சராக மாறும் என்று தோன்றவில்லை.

ஒரு கட்டத்தில் என்னுடன் பேசுவதை தவிர்த்தாள். அவளிடம் கெஞ்சி கெஞ்சி ஒரு கட்டத்தில் கோபப்பட ஆரம்பித்தேன். கோபத்தில் வார்த்தைகள் எல்லாம் எக்குத்தப்பாய் வெளிவந்திருக்கும் போல அதன் பிறகு என்னுடன் பேசுவதை முற்றிலுமாக நிறுத்தினாள். விஷயம் பெரியவர்களுக்குச் சென்றது.

மன்னிக்கணும் :

மன்னிக்கணும் :

அவளின் அப்பா எங்கள் வீட்டிற்கு வந்தார். ஐய்யா.... மன்னிக்கணும் பொண்ணு இந்த சம்மந்தம் வேண்டாங்குது நல்ல இடம் தம்பி நல்லா படிச்சிருக்கு வெளியூர்ல வேலை பாக்குது உன்னைய ராணி மாதிரி வச்சுப்பாங்கன்னு எவ்ளவோ சொல்லிப் பாத்துட்டேன் ஆனா அது கேக்க மாட்டேங்குது.

நிச்சியதார்த்தம் அன்னக்கி நீங்க பாப்பாவுக்கு போட்ட நாப்பது பவுன் நகை இதுல இருக்கு என்று தயங்கி நின்றார். அப்பாவினால் மறு வார்த்தை பேச முடியவில்லை. பத்திரிக்கை எல்லாம் கொடுத்தாச்சு கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் கூட இல்லை இப்ப வந்து நிறுத்திரலாம்னா என்ன அர்த்தம்?

இந்த விவகாரம் பெரும் பஞ்சாயத்து ஆனது. ஊர் பெரியவர்கள் பங்காளிகள் எல்லாம் வந்து பேசினார்கள். பொண்ணு வேண்டாம்னு சொல்றா நான் கட்டாயப்படுத்த முடியாதுங்க என்று உறுதியாக சொல்லிவிட்டார். இருவரின் பிரச்சனை இரு வீட்டு பிரச்சனையானது. பின் இரண்டு இனத்திற்கான பிரச்சனையாக உருவெடுத்து கைகலப்பு வரை சென்றுவிட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Girl Want To Cancel Her Betrothal

Girl Want To Cancel Her Betrothal
Story first published: Thursday, April 19, 2018, 16:23 [IST]
Desktop Bottom Promotion