திருமணத்தின் போது வெளி வந்த காதலனைப் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்! my story #251

தன் உறவுக்கார பையனை நீண்ட நாட்களாக காதலித்து திருமணத்திற்கு சம்மதம் கேட்கப்போகும் போது அவனைப் பற்றிய திடுக்கிடும் உண்மைகளை தெரிந்து கொண்ட காதலியைப் பற்றிய கதை.

வாழ்க்கையில் சில நேரங்களில அவசரப்பட்டு முடிவெடுத்து வாழ்நாள் முழுவதும் சிரமங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். காதல் என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால் இந்த உலகம் எப்படியிருக்கும்? இந்த உலகம் ஏன் நான் எப்படியிருப்பேன் என்று அடிக்கடி யோசிக்கத்தோன்றுகிறது.

காதலென்றால் கொண்டாட்டமாக, சந்தோசமாக பார்க்கும் ஒரு கூட்டம், பொண்ணூங்கனாலே இப்டித்தான், பசங்கல நம்பவே கூடாது... என்று மாறி மாறி குறை சொல்லிக் கொண்டு திரிவார்கள். ஆனால் நான் இரண்டுக்கும் நிற்காமல் காதலினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகி என் வாழ்க்கையே தொலைத்து நிற்கிறேன்.

அன்பு செய்ய எனக்கு யாராவது இல்லையா என்கிற ஏக்கம் ஒரு பக்கம், வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னரே குடும்ப பொறுப்புகள் என் மீது விழ திண்டாடிக் கொண்டிருக்கிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என் குடும்பம் :

என் குடும்பம் :

சாதரண மிடில் கிளாஸ் குடும்பம். என்னையும் தம்பியையும் அரசுப் பள்ளியில் தான் அப்பா படிக்க வைத்தார். படித்து பெரிய டாக்டராகவேண்டும் என்ற கனவெல்லாம் கிடையாது.

அப்பாவிற்கு என்னை கல்லூரிக்கு அனுப்பவே விருப்பமில்லை, விருப்பமில்லை என்பதை விட கல்லூரிக்கு பணத்தைக் கட்டி என்னை படிக்க வைப்பது என்பது வீண் செலவாக தெரிந்தது.

எப்டியும் இன்னொரு வீட்டுக்கு போற பொண்ணு தான... அது மட்டுமில்லாம கல்யாணத்துக்கும் செலவு பண்ணி படிக்க வைக்கணும் என்ற எண்ணம்.

ஆனால் எனக்கு பெயருக்கு பின்னால் ஒரு டிகிரி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையிருந்தது.

அத்தைப் பையன் :

அத்தைப் பையன் :

எங்கள் வீட்டிற்கு இரண்டு தெரு தள்ளி தான் சுதாகரின் வீடு இருந்தது. அப்போது அவன் சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். விடுமுறைக்கு வரும்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கும் வருவான், சிறுவயதிலிருந்தே அவனை மாமா என்று அழைத்தே பழக்கப்படுத்தியிருந்தார்கள். அவன் வந்தால் எங்கள் வீட்டில் எப்போதும் நல்ல கவனிப்பு இருக்கும்.

அப்போது நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். நல்லா படி சென்னையில பெரிய காலேஜா பாத்து சேர்த்து விடுறேன் என்று சொல்ல....

என்னை எப்டி மாமா அவ்ளோ தூரம் அனுப்புவாங்க எங்கப்பா ஸ்கூல் முடிச்ச கையோட கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன்னு பேசிட்டு இருக்காரு.... அப்ப என்னைய கட்டிக்க நான் உன்னைய மேல படிக்க வைக்கிறேன் என்றான்.

முதல் காதல் :

முதல் காதல் :

போ மாமா... நீ சும்மா விளையாட்டுக்கு சொல்ற என்றேன். அவனும் சிரித்தபடி அங்கிருந்து சென்றுவிட்டான். அதன் பின்னர் எனக்கு மட்டும் ஸ்வீட்,டிரஸ்,வாட்ச் என்று எதாவது வாங்கி வந்து கொடுத்துக் கொண்டேயிருப்பான். அடிக்கடி செலவுக்கு வச்சுக்கோ என்று சொல்லி பணம் கொடுத்துவிட்டுச் செல்வான்.

வீட்டினருக்குத் தெரியாமல் செல்போன் வாங்கிக் கொடுத்தான். நானும் அவனும் அதில் மணிக்கணக்காக பேசுவோம். பேசும் போதெல்லாம் காதல் வசனங்கள் தான் தூக்கலாக இருக்கும்.

உன்னைய விட்டு போக மாட்டேன் :

உன்னைய விட்டு போக மாட்டேன் :

இவ்ளோ நாள் உன்னைய எப்டி மிஸ் பண்ணேன்னு தெர்ல உன்கிட்ட பேச ஆரம்பிச்ச பிறகு தான் நான் இங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கேன்... ஏன்னு தெர்ல உன்னைய எனக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு நீ எப்ப இங்க வருவ உன்னைய நான் ராணி மாதிரி வச்சு பாத்துக்குறேன் நீ நினச்சதெல்லாம் படிக்க வைக்கிறேன். உன்ன சந்தோஷமா வச்சுப்பேன் என்று ஏதேதோ சொல்வான்.

என்னையறியாமலேயே ஒரு கட்டத்தில் அவனை காதலிக்க ஆரம்பித்திருந்தேன்.

அந்த இரவு :

அந்த இரவு :

பாட்டியின் மறைவுக்கு பத்து நாட்கள் இங்கே வந்து இருந்தான். அப்போது எங்கள் வீட்டிலும் அவன் வீட்டிலும் ஆட்கள் இருந்து கொண்டேயிருந்ததால் நாங்கள் அவ்வளவாக பேசிக் கொள்ளவில்லை.

பாட்டி இறந்த ஐந்தாம் நாள் எதோ சம்பிரதாயம் செய்ய வேண்டும் என்று சொல்லி எல்லாரும் வேனில் கிளம்பினார்கள்.

எங்கள் வீட்டிற்கு பின் பக்கம் தான் வந்தவர்கள் எல்லாருக்கும் சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது. அதனால் வீட்டை பூட்டி விட்டு வரமுடியாது என்பதால் நான் இங்கேயே இருக்கிறேன் என்று சொல்லி விட்டேன்.

இரவு ஏழு மணியிருக்கும் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன், திடீரென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். ஏய் நீ அவங்களோட போகலயா என்று கேட்டேன் என்னை தள்ளிக் கொண்டு உள்ளறைக்குச் சென்று கதவைத் தாழிட்டான்.

நீ தான் என் பொண்டாட்டி :

நீ தான் என் பொண்டாட்டி :

மொதோ கதவ திறங்க மாமா அம்மா வந்திரப்போறாங்க... பின்னாடி வேற ஆளுங்க சமச்சுட்டு இருக்காங்க என்றேன். யாரும் வரமாட்டாங்க என்று சொல்லி என்னை கட்டியணைத்துக் கொண்டான். முதலில் மறுத்து வெளியே செல்ல வேண்டும் என்று அடம்பிடித்தவள் பின் சம்மதித்தேன்.

அந்த நாளுக்குப் பிறகு அவனை முழுதாக என் கணவராக ஏற்றுக் கொண்டேன். அடிக்கடி நாங்கள் உறவு கொள்ள ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இப்படியே ஓடியது. இந்நிலையில் அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள்.

என்ன மாமா உனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சுடாங்களாம் என்றேன்.... அதுக்குள்ள தகவல் உனக்கு வந்திடுச்சா? காலைல தாண்டி எங்கம்மா சொன்னா என்றான்.

அப்போ உங்கம்மாட்ட நம்ம விஷயத்த சொல்ல வேண்டியது தான... இன்னும் ரெண்டு மாசத்துல பரிட்சை முடிஞ்சுரும் அப்பா எனக்கும் மாப்ள பாக்க ஆரம்பிச்சுடுவாங்க... என்றேன்.

ம்ம்ம்... பேசலாம்.

சின்ன புள்ள :

சின்ன புள்ள :

அதன் பிறகு சில நாட்கள் என்னுடன் சரியாகவே பேசவில்லை கேட்டபோதெல்லாம் வேலை... அலைச்சல் என்று சொல்லி என்னுடன் பேசுவதையே தட்டிக் கழித்துக் கொண்டே வந்தான்.

அவன் தான் பேசமாட்டான் என்கிறான் நானே வீட்டில் சொல்லலாம் என்று நினைத்து முதலில் அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தேன். அம்மா நம்ம ஆளுங்க நிறைய பேரு சொந்த காரங்ககுள்ளேயே கட்டிப்பாங்கல்ல? அது தான் தெரியுமா பிரச்சனையில்ல....

என் பிரண்டோட அக்காவ வெளியூர் மாப்பிள்ளைக்கு கொடுத்துட்டு தினமும் அவ வந்து புலம்புறா தெரியுமா என்று நிறைய கதைகளை அவிழ்த்துவிட்டேன்

ஒவ்வொன்றுக்கும் அம்மா சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். கடைசியாக ஆமா... சுதாகர் மாமாக்கு கூட பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டாங்க போல என்று நிறுத்தினேன்...

ஆமா பொறுக்கிப்பய.. எந்தப் பொண்ணு வந்து மாட்டி சீரழியப்போறாளோ...

அதிர்ச்சி :

அதிர்ச்சி :

கேட்ட நொடியில் திக்கென அதிர்ச்சியாய் இருந்தது.... காதலுக்கு சம்மதம் வாங்க வந்த இடத்தில் இது என்ன புதுப்புரளியாய் இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டு... ஏன்ம்மா மாமா திட்டுற அதுக்கென்ன நல்லா படிச்சு வெளியூர்ல வேலை பாக்குது என்றேன்.

நாயி கிழிச்சான். அவங்க அம்மா வர்றப்ப எல்லாம் இவனப்பத்தி நினச்சி தான் அழுவாங்க. இங்க பள்ளிகூடம் படிக்கும் போதே டீச்சருங்கள பாத்து அசிங்கமா பேசினான்னு தொறத்திவிட்டானுங்க ரெண்டு ஸ்கூல் மாத்தியும் படிப்பு ஏறல அப்பறம் மளிகை கடைக்காரரோட பேத்திய கரும்பு காட்டுக்கு தூக்கிட்டு போனான், குடிச்சிட்டு வரான், வீட்ல இருந்து நகைய பணத்த எல்லாம் திருடிட்டுப் போறான்னு நிறைய சொன்னாங்க.

அவன் அப்பன் மூஞ்சிக்கு எதுவும் கேக்காம இருந்தாங்க கடைசில வெளியூர்ல ஹாஸ்டல்ல சேத்து படிக்க வைக்கப்போறேன்னு இவரு அப்பன் கிளம்பினாரு.

வாழ்க்கையே முடிந்தது :

வாழ்க்கையே முடிந்தது :

அங்க எதோ டிப்ளமோ சேத்து விட்டிருப்பாரு போல.... கொஞ்ச நாள் சும்மா இருந்திருக்கான் அங்கயும் எதோ பிரச்சனை பண்ணி போலீஸ் கேஸுன்னு எல்லாம் ஆச்சு... அக்கா கூட ஊருக்கு போறேன்னு சாவிய நம்ம விட்டுல கொடுத்துட்டு கொடுத்துட்டு போகுமே...

எக்கேடோ கெட்டுப் போறான் சனியன்... பெத்தவங்கள நிம்மதியா இருக்கவிடாம எவ்ளோ டார்ச்சர்....

அதற்கு மேலும் அங்கே உட்கார்ந்து அம்மாவின் வார்த்தைகளை கேட்க முடியவில்லை எழுந்து வந்துவிட்டேன். அழக்கூட முடியவில்லை அவனைப் பற்றி தான் அம்மா சொல்கிறாளா?

உண்மையில் அவன் அவ்வளவு மோசமானவனா அவனை திருமணம் செய்து கொள்ள எப்படி சம்மதிப்பார்கள்? அதைவிட அவனை நான் காதலிக்கிறேன் என்று எப்படிச் சொல்வது....

இனி :

இனி :

கொஞ்சம் கொஞ்சமாக என்னைத் தவிர்த்தவன் முழுதாக என்னைத் தவிர்த்திருந்தான். அதை அவனிடமும் கேட்க முடியாமல் பெற்றோரிடமும் நடந்த விஷயத்தை சொல்ல முடியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருந்தேன்.

என்னை ஏமாற்றிவிட்டானே இதை எப்படி அம்மாவிடம் சொல்வது... இனி என்னை யார் ஏற்றுக் கொள்வார்கள்.... வாழவே எனக்கு தகுதியில்லை என்று என்னை நானே வறுத்திக் கொள்ள ஆரம்பித்தேன்.

பன்னிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண் வெகுவாக குறைந்தது. பிரம்மை பிடித்தது போலவே கிடந்தேன். அடிக்கடி எனக்கெல்லாம் வாழவே தகுதியில்ல என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன்.

ஒரு கட்டத்திற்கு மேல் என் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டு கோவில்,மருத்துவமனை என்று அலைந்து என்னை சகஜ நிலைக்கு திருப்பினார்கள் வீட்டினர்.

இப்போது அந்த நினைவுகளிலிருந்து மீண்டு விட்டாலும் அதே குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, May 9, 2018, 12:43 [IST]
Desktop Bottom Promotion