Latest Updates
-
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்களை காதலிக்க எல்லோரும் ஆசைப்படுவார்களாம் - நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா? -
எச்சரிக்கை! இந்த 5 பழங்களை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா முகப்பரு அதிகமா வந்துடும்.. -
இந்தியாவில் மது விற்பனையில் முன்னணியில் உள்ள டாப் 5 மாநிலங்கள் - தமிழ்நாடு முதல் இடத்தில் இல்லையாம் தெரியுமா? -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
கோவக்காய் வாங்குனா இந்த மாதிரி ஹோட்டல் ஸ்டைலில் பொரியல் பண்ணுங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
வெண்டைக்காயை இப்படி மசாலா அரைச்சு பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு சாப்பிடுவாங்க.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
International Yoga Day 2026: தொப்பையை குறைக்கணுமா? அப்ப தினமும் இந்த 6 யோகாவை செய்யுங்க போதும்! -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம்
கணவன் - மனைவி உறவில் தினமும் தீண்டுதல் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன?
தினமும் கணவன் - மனைவி உறவில் தீண்டுதல் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது!
தீண்டாமை ஒரு பாவச்செயல்... ஜாதி, மதத்தில் மட்டுமில்ல, உறவுகளிலும் கூட. மனதில் உண்டான தீக்காயங்களுக்கு தீண்டுதல் தான் ஒரு அருமருந்து. கணவன் - மனைவி உறவில் தீண்டல் அன்றாட வாழ்வியலில் ஒன்றாக கலந்திருக்க வேண்டியது அவசியம்.
இல்லறத்தின் ஆரம்பத்தில் இருந்த அன்பு, காதல், 30 வயதுக்கு மேல் காணாமல் போவதற்கும் தீண்டாமை தான் காரணம். உடலுறவு மட்டுமே இன்பதை அளித்துவிடாது, சில அன்பு கலந்து தீண்டுதல்கள் இருக்க வேண்டும். அதில் அரவணைப்பு சற்றே கூடுதலாக இருக்க வேண்டும்...

காரணம் #1
நீங்கள் 100 முறை ஐ லவ் யூ மெசேஜ் அனுப்புவதற்கும், ஒரு முறை மென்மையாய் தீண்டி அரவணைப்பதும் சமம் தான். கணவன் - மனைவி உறவில் பந்தத்தை, இருவர் மத்தியிலான பாலத்தை பலப்படுத்துவது இந்த தீண்டல் தான். அரவணைப்பு கூடிய ஒரு மெல்லிய தீண்டல் தான் காதலின் அஸ்திவாரம்.

காரணம் #2
பல கருத்துகணிப்புகளில், அடிக்கடி துணையை தீண்டிடாத உறவுகளில் தான் அதிகம் சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.

காரணம் #3
தீண்டுதல் மூலமாக தான் நீங்கள் உங்களது உணர்ச்சியை உங்கள் துணையிடம் வெளிக்காட்ட முடியும். இதை விட வேறு எளிய வழி இருக்கிறதா என்ன?

காரணம் #4
கட்டியணைப்பதை காட்டிலும் உங்கள் அன்பை, உங்கள் காதலை வேறு எவ்வழியில் காட்டிவிட முடியும். இது கணவன் - மனைவி இருவரும் உறவை இலகுவாக உணரவும், ஒருவர் மீது ஒருவர் அதிக காதல் கொள்ளவும் காரணமாக இருக்கிறது.

காரணம் #5
தீண்டுதல்கள் தான் மனதில் உண்டான காயங்களை குணப்படுத்த உதவும் சிறந்த மருந்து. இது இதயத்தில் உண்டான காயங்களை உடனே சரிசெய்யும்.

காரணம் #6
உறவில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, புரிதல் உண்டாக, இருவர் உணர்வு ரீதியான இணைப்பு உண்டாக தீண்டுதல்கள் உதவுகின்றன. உங்கள் உணர்ச்சி மேலோங்கி, உங்கள் இருவருக்குள்ளன உலகை அழகாக்குவது இந்த தீண்டுதல்கள் தான்.

காரணம் #7
மனதில் ஏற்பட்ட காயங்களை மட்டுமல்ல, கணவன் - மனைவி மத்தியிலான சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு சிறந்த கருவி இந்த தீண்டுதல். இது மனதை ஒரே நொடியில் மாற்றிவிடும்.



Click it and Unblock the Notifications