மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள கணவன் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒருசில விஷயங்களை நீங்கள் கடைபிடித்து வந்தால், நீங்களும் கூட, "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.." என மனம் மகிழ்ந்து பாடும் நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

கணவன், மனைவி உறவு என்பது ஒரு தனி உலகம். அதில், இருவரும் இரு துருவங்கள். ஒரு துருவம் தன்னிலை இழந்தாலும், அழிவு தான் முடிவு என்பதை கணவன், மனைவி முதலில் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கீழ்வரும் பத்து விஷயங்களை நீங்கள் (கணவன் - மனைவி) இல்லற வாழ்வில் கடைபிடித்து வந்தால்... வீடு சொர்கமாக இருக்கும். வாழ்க்கை நிம்மதியாக பயணிக்கும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மதிப்பு!

மதிப்பு!

கணவன், மனைவி இருவருக்கும் ஒவ்வொரு கருத்து, விருப்பு, வெறுப்புகள் இருக்கலாம். ஆனால், அதை எல்லாம் தவிர்த்து, ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் மதிப்பளிக்க வேண்டியது அவசியம்.

இதை நீங்கள் சரியாக கடைபிடித்து வந்தால் இல்லறத்தில் காதல் வற்றாத ஜீவநதியாக இருக்கும்.

கர்வம்!

கர்வம்!

வீட்டில் கணவன் மட்டுமே சம்பாதிக்கும் நபராக இருந்தால், என்னால் தான் நீ, நான் இல்லையேல் இந்த குடும்பமே கிடையாது என்பது போன்ற மனோபாவத்தை வெளிப்படுத்த கூடாது.

நீங்களே பொருளாதாரத்தின் மூலதனமாக இருப்பினும் அதை கர்வத்துடன் வெளிப்படுத்த கூடாது. இது உறவை சிதைக்கும் மூலகருவியாகலாம்.

என்னாலும் தான்...

என்னாலும் தான்...

ஒருவேளை கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்தால், ஏதேனும் பிரச்சனை வரும் காலங்களில் நானும் தான் வேலைக்கு போறேன்.. எனக்கு வேண்டியத செஞ்சுக்க எனக்கு தெரியும், நான் யாரிக்கிட்டையும் கெஞ்சல... என்பது போல கோப வார்த்தைகளை மனைவிகளும் உபயோகப்படுத்த கூடாது.

பொய் வேண்டாம்!

பொய் வேண்டாம்!

இந்த சின்ன விஷயத்தை கூட அவள் பெரிதாக எடுத்துக் கொள்வாள் / வார். இதனால் வீட்டில் பிரச்சனை தான் அதிகரிக்கும் என்ற எண்ணம் துணை மீது உருவாகும் படியாக நடந்துக் கொள்ள வேண்டாம். அச்சம் அதிகரிக்கும் உறவில் அஸ்திவாரம் இடியும் வாய்ப்புகள் உண்டு.

மரியாதை!

மரியாதை!

கணவன், மனைவிக்கு மத்தியில் எழும் சண்டையில், இரு குடும்பத்தாரின் மரியாதை கெடும் படியாக நடந்துக் கொள்ள கூடாது. முக்கியமாக, அவர் குடும்பத்தை நீங்களும், உங்கள் குடும்பத்தை அவரும் திட்டும்படியான நிகழ்வு உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் சண்டை பலமடங்கு அதிகரிக்க தான் செய்யும்.

சல்லாபம்!

சல்லாபம்!

மனைவி ஒதுக்குகிறாள் என்பதால், கணவன் தனது ஆசை மற்றும் சல்லாபத்தை வேறு பெண்கள் மீது திருப்ப கூடாது. இதே தவறை பெண்கள் செய்தால் ஆண்கள் ஒப்புகொள்வார்களா? கள்ள உறவு சேர்த்தல் கூடாது.

முழுமனம்!

முழுமனம்!

பெரும்பாலும் கணவன்மார்கள் செய்யும் தவறு, மனைவி வீட்டு சொந்தத்தை தனது சொந்தம் போல காணதிருப்பது தான். ஆனால், மனைவியை மட்டும் சரியாக இருக்க கூறுவார்கள். எனவே, மனைவி வீட்டு சொந்தத்தையும் தன் வீட்டு சொந்தமாக கருதி அணுகும் முறையை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

சுதந்திரம்!

சுதந்திரம்!

கணவன், மனைவி இருவரும் ஒருவர், மற்றொருவர் சுதந்திரத்திற்கு தடையாக இருக்க கூடாது. நான் மட்டும் எப்போது வேண்டுமானாலும் நண்பர்களுடன் ஊர் சுற்றிவிட்டு வருவேன். ஆனால், நீ கூண்டுக்கிளியாக மட்டுமே இருக்க வேண்டும் என கூறுதல் தவறு.

நேரம் காத்தல்!

நேரம் காத்தல்!

வீட்டில் இருந்து கணவன், மனைவி தனித்தனியாக வெளியே வெவ்வேறு இடங்களுக்கு சென்றிருந்தால், குறித்த நேரத்திற்கு இருவரும் வீடு திரும்ப வேண்டியது அவசியம்.

அதே போல, சூழ்நிலை காரணமாக நேரதாமதம் ஆனால், அவர்கள் கூறும் காரணத்தை முதலில் காது கொடுத்து கேளுங்கள். வந்த உடனே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சண்டைப்பிடிக்க வேண்டாம்.

உணவு!

உணவு!

உணவு என்பது உயிர் வாழ மட்டுமே. உலகில் அனைவருக்கும் ஒரே கைப்பக்குவம் இருக்காது.எனவே, அம்மா போல சமைக்க தெரியவில்லை என குற்றம் கூற வேண்டும். மனைவியை சமையல்காரர் போல ட்ரீட் செய்ய வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Tips To Make Your Love Life Super Happy!

Ten Tips To Make Your Love Life Super Happy!
Subscribe Newsletter