என் மனைவி குழந்தை பெற்றுக் கொள்ளவே பயப்படுகிறாள்! என்ன செய்வது?

Written By:
Subscribe to Boldsky

எனக்கு 35 வயதாகிறது. எனக்கு 32 வயதில் தான் திருமணமானது. இந்த வயதில் திருமணம் என்பது கொஞ்சம் தாமதம் தான். இப்போது எனக்கு என்ன பிரச்சனை என்றால், எனது பெற்றோர்கள் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள். என் விருப்பமும் அதே தான். எனது மனைவிக்கு இப்போது 31 வயது ஆகிறது. ஆனால் அவள் குழந்தைக்கு மறுப்பு தெரிவிக்கிறாள்.

அவள் குழந்தை பிறந்தால் நிறைய பொருப்பு வந்துவிடும் என்று அவள் பயப்படுகிறாள். எனது மனைவிக்கு தன் வாழ்க்கையில் வரும் புதுப்புது மாற்றங்களையும் மனிதர்களையும் ஏற்றுக் கொள்ள தயங்குகிறாள். நான் இதனை அவளுடன் பழகிய மூன்று வருடங்களில் புரிந்து கொண்டேன். எங்களது திருமணத்தின் போதும் கூட அவளுக்கு இந்த திருமணம் வேண்டுமா? வேண்டாமா என்று பயம் இருந்தது. அவளுக்கு இந்த பயம் புதிய வேலைக்கு செல்வது போன்ற பெரிய மாற்றங்களின் போது கூட இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தை

குழந்தை

இந்த வயதில் கண்டிப்பாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. இனிமேலும் காலம் தாழ்த்தக் கூடாது என்பது எனது கருத்தாகும். நாங்கள் பொருளாதார ரீதியாகவும் நல்ல நிலையில் இருக்கிறோம். குழந்தையை பற்றி எனது மனைவியிடம் பேச்சு எடுத்தாலே அவள் கோபமடைகிறாள். வேறுயாராவது குழந்தை பற்றி என் மனைவியிடம் கேட்டாள் கூட கோபமடைந்து விடுகிறாள். இதனால் தான் நான் அமைதியாக இருக்கிறேன் குழந்தையை பற்றி என் மனைவியிடம் பேசுவதற்கு பயந்து..

எனக்கு எனது மனைவியை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எங்களுக்கு என்று ஒரு குடும்பம் வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் நான் செய்வது?

தீர்வு

தீர்வு

உங்களுடைய சூழ்நிலை புரிகிறது. நீங்கள் குழந்தைகள் வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிறீர்கள். இது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசை தான். ஆனால் உங்களது மனைவி பொருப்புகளை சுமக்க பயம் கொள்கிறார் என்பதும் புரிகிறது.

முடிவு எடுக்க பயம்

முடிவு எடுக்க பயம்

உங்களது மனைவிக்கு வாழ்க்கையில் முடிவுகளை எடுப்பதில் தயக்கம் உள்ளது என்பது நீங்கள் கூறியதில் இருந்து தெரிகிறது. அவர்கள் இந்த பொருப்புகளுக்கு தயாராக சிறிது காலம் அவருக்கு தேவைப்படுகிறது.

உணர்வுகளை பகிருங்கள்

உணர்வுகளை பகிருங்கள்

நீங்கள் அவருடன் பேசுங்கள். உங்களது உணர்வுகளை அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு குழந்தையின் மீது உள்ள ஆசை போன்றவற்றை ஒளிவு மறைவின்றி உங்களது உணர்வுகளை பகிருங்கள். அவர் தன்னை மாற்றிக் கொள்ள சிறிது காலம் கொடுங்கள். அவருக்கு கர்ப்பமாவது, குழந்தை பெற்றுக் கொள்வது போன்றவற்றில் பயம் இருக்கும். பெண்கள் இதற்காக உடல் மற்றும் மனதளவில் அதிகமாக தயாராக வேண்டும். இது மிகப்பெரிய பொருப்பாகும்.

காலம் தேவை

காலம் தேவை

அவரது உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். அப்போது தான் அவரக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் உள்ள தயக்கத்தை அவர் உங்களுக்கு தெரிவிப்பார். நீங்கள் அவரது பயத்தை போக்குங்கள். உங்களது உணர்வுகளை அவர் கண்டிப்பாக புரிந்து கொள்வார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

My wife scared to have a baby

My wife scared to have a baby
Story first published: Friday, October 27, 2017, 17:58 [IST]