For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

25 ஆண்டுகால இல்லறத்தில், எங்களுக்குள் ஒரே ஒரு முறை தான் 'அது' நடந்தது... - My Story #100

|

மகிழ்ச்சி பணத்தில் இல்லை, நல்ல உறவுகளில் தான் இருக்கிறது என்பதை மிக சிறிய வயதிலேயே அறிந்தவள் நான். அப்பாவிற்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது, அந்த பெண் மூலமாக இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதை அம்மா அறிய வந்தவுடன் அதிர்ச்சி அடைந்தார். ஆனால், என் அம்மா அந்த காலத்து பி.எச்.டி என்பதால் ஓர் ஆணை நம்பி தான் இருக்க வேண்டும் என்ற நிலையை உடைத்தெறிந்துவர்.

என் அப்பாவின் முகம் மனதில் பதியும் முன்னரே... அம்மாவுக்கும், அப்பாவுக்கும் விவாகரத்து நடந்துவிட்டது. நான் வளர்ந்தது எல்லாம் அம்மாவின் அரவணைப்பில் தான். எங்கள் வீடு கூட்டுக் குடும்பம் என்பதால் எப்போதும் வீட்டில் பத்து, இருபது பேர் இருப்பார்கள். எனது மாமா மகளுக்கும் எனக்கும் ஏகப்பொருத்தம் இருந்தது. பார்ட்னர் இன் க்ரைம் என்று சொல்வார்களே அப்படி தான். அவள் (அக்கா) என்னைவிட ஐந்து வயது மூத்தவள்.

அவளுக்கு திருமணமாகும் வரை நான் தனிமையை உணர்ந்ததே இல்லை. அப்பா துணை இல்லாமல் வளர்ந்தவள் என்பதால், என்னை ஒருபோதும் தனிமையை உணரவிட்டதும் இல்லை அவள். எப்போதாவது, எனது பள்ளி தோழிகள் அப்பாவுடன் நடந்த விஷயங்கள் குறித்து பேசும் போதும், அப்பா தான் என் ஹீரோ என கூறும் போதும் அப்பா பற்றிய எண்ணங்கள் வரும். அம்மாவிடம் போய் ஒரே ஒரு முறை அப்பாவை பார்க்க ஆசை என கேட்டுள்ளேன். நான் கேட்கும் போதெல்லாம் அம்மாவிடம் கோபம் மட்டுமே அதிகம் வெளிப்படும்.

சில சமயங்களில் எனது வருத்தத்தை உணர்ந்து, சரி ஒரு நாள் பேசி, நேரில் பார்க்க ஏற்பாடு செய்கிறேன் என கூறுவார். ஆனால், அப்படி ஒரு ஏற்பாடு என் வாழ்நாளில் நடக்கவே இல்லை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அக்காவிற்கு திருமணம்!

அக்காவிற்கு திருமணம்!

பார்ட்னர் இன் க்ரைம் அக்காவுக்கு திருமணம் ஆனது. அவளது கணவர் மிகவும் கண்ணியமானவர். அவர்கள் திருமணமான புதிதில் எங்கே சென்றாலும், உடன் என்னையும் அழைத்து செல்வார்கள். மாமா (அக்கா கணவர்) என்னை ஒருபோதும் தொல்லை என நினைத்ததில்லை. அவருக்கு உடன் பிறந்த தங்கை இல்லை என்பதால், என்னை தங்கை போல பாவித்துக் கொண்டார்.

கல்யாணம் பெஸ்ட்!

கல்யாணம் பெஸ்ட்!

அக்கா என்னை விட்டு பிரிந்து போனதாக எனக்கு கவலையே வரவில்லை. வார நாட்களில் பள்ளி. வார இறுதி நாட்களில் அவர்களுடன் வெளியே சினிமா, பார்க், பீச், பிடித்த ஹோட்டல்களில் விதவிதமான உணவுகள், சில சமயங்களில் வெளியூர் கோவில் பயணங்கள் என என் வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.

தடுப்பணை!

தடுப்பணை!

என் மகிழ்ச்சிக்கு தடுப்பணையாக அமைந்தது அந்த நாள். எப்போதும் போல காலை பள்ளி சென்றேன். 11 மணியளவில் என் அத்தை பள்ளிக்கு வந்து என்னை அழைத்து சென்றார். என்ன காரணம் என தெரியவில்லை. செல்லும் வழியில் தான் என்னை பெண்பார்க்க வந்துள்ளனர் என்ற சேதி அறிந்தேன். அப்போது எனக்கு 16 வயது தான். இன்று இருப்பது போல அன்றைய திருமண சட்டங்கள் வலுவாக இல்லாத காரணத்தால். அன்றைய நாளே நிச்சயம் ஆனது, எனது படிப்பு பாதியில் நின்றது. ஓரிரு மாதங்களில் திருமணமும் ஆகி முடிந்தது.

நல்லவர்!

நல்லவர்!

அக்கா கணவரின் செயல்களை கண்டு, திருமண வாழ்க்கை என்றால் இப்படி தான் இருக்கும், இப்படி நடந்துக் கொள்வார்கள் என நானொரு கணக்கிட்டு இருந்தேன். என் கணவரும் மிக நல்லவர் தான். என்ன, எனக்கும் வருக்கும் 12 வருட வயது வித்தியாசம். நான் சிட்டியில் பிறந்து வளர்ந்த பெண். அவர்களது ஊர் வரப்பட்டிகாடு.

wherevertheneed

கொடுமை!

கொடுமை!

அங்கே கழிவறை கிடையாது, குளியலறை கிடையாது. ஊருக்குள் ஒருவர் வருகிறார் என்பது அவர் பேருந்து விட்டு இறங்கும் போதே, ஊருக்குள் செய்தியாக வந்துவிடும். அரசல்புரசலாக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவார்கள். அனைத்திற்கும் மேலாக அந்த ஊரின் வெயில் கொடுமை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ImageCredit : tantric-goddess

இணைப்பு!

இணைப்பு!

எங்களுக்குள் ஓர் இணைப்பே இல்லை. திருமணமான புதியதில் எனக்கு தாம்பத்தியம் குறித்தோ, இல்வாழ்க்கை குறித்தோ எதுவும் தெரியாது. மஞ்சப்பையில் நோட்டு புஸ்தகங்கள் தூக்கி சென்ற என் கழுத்தில் திடீரென மஞ்சள் கயிறு ஏறினால் வேறு எப்படி இருக்கும்? பல சந்தேகங்கள், பல கேள்விகள், உறவுக்காரர்கள் என்ற பெயரில் என்னை சுற்றி தெரியாத முகங்கள் பலவன. கொஞ்சநஞ்சமல்ல என கூறும் அளவிற்கு அவ்வளவு அச்சம் என்னை சூழ்ந்திருந்தது.

பெரியவர்கள் அட்வைஸ்!

பெரியவர்கள் அட்வைஸ்!

ஒரே முறையில் கருவுற முடியாது, தாம்பத்திய உறவில் தொடர்ந்து ஈடுப்பட்டால் தான் கருவுற முடியும் என வீட்டு பெரியவர்கள் பலர் என்னிடம் திருமணமான முதல் மாதத்தில் இருந்தே கூறிக் கொண்டிருந்தனர். திருமணமான முதல் மாதமே கருத்தரிக்க வேண்டும் என விரும்பும் மக்கள் அவர்கள். ஆனால், எதுவுமே நடக்கவில்லை என்பது எனக்கு மட்டும் தானே தெரியும்.

கருவுற்றேன்!

கருவுற்றேன்!

திருமணமான ஆறு மாதங்களில் கருவுற்றேன். அந்த ஆறு மாதங்களில் எங்களுக்குள் அது நடந்தது அந்த ஆறாவது மாதத்தில் ஒரு முறை தான். கருவுற்ற பெண்கள் பப்பாளி சாப்பிடக் கூடாது என்று கூட தெரியாமல், பப்பாளியை ருசிக்க முயன்றேன். ஒருவேளை அன்று எனது மாமியார் அதை தடுக்காமல் இருந்திருந்தால். என் வாழ்வில் கொஞ்சமாவது நிம்மதி இருந்திருக்குமோ என அவ்வப்போது எண்ணியதுண்டு.

மகன்!

மகன்!

எப்படியோ கடவுள் புண்ணியத்தில் மகன் பிறந்தான். ஒற்றை ஆளாக என்னை வளர்க்க என் தாய் பட்ட கஷ்டமும், அப்பா இல்லாத மகளாக நான் வளர்ந்த போது பட்ட கஷ்டமும் என் கண்முன் வந்து கொண்டே இருந்ததால். மகள் மேல் எனக்கு விருப்பமில்லை. ஆண் குழந்தை என்றாலே வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அனைவரும் அப்படி தான் இருந்தார்கள். ஆனால், என் கணவரை தவிர. ஆரத்தழுவி அவர் தன் மகனை கொஞ்சியதே இல்லை.

ஆய்வுப்பணி!

ஆய்வுப்பணி!

குழந்தை பிறந்த ஓரிரு மாதங்களில் ஆய்வு பணி மேற்கொள்ளவிருக்கிறேன் என வெளிநாடு சென்றுவிட்டார். திரும்பி வர மூன்று ஆண்டுகள் ஆகும் என கூறினார். அதுனால் வரை நான் என்ன செய்வது. எனக்கு அப்போது 18 வயது இருக்கும். அவர் திரும்பி வந்த போது வயது 21.

வெற்றி!

வெற்றி!

அவரது ஆய்வு பணிகள் வெற்றிகரமாக முடிந்தது. ஆங்கிலேய ஆய்வாளர்கள் கண்டு வியக்கும் படி தாவரவியலில் ஒரு புதிய கூற்றை கண்டுபிடித்து நாடு திரும்பினார். மிகவும் எளிமையானவர். தான் சாதித்தது குறித்து என்றும் தம்பட்டம் அடித்துக் கொண்டதே இல்லை. நானாவது நால்வரிடம் பார்க்கும் போதெல்லாம், அவர் அப்படி செய்தார், இப்படி செய்தார் என கூறுவேன். அவர் அப்படி எதுவும் கூறியது இல்லை.

நெருக்கம்?

நெருக்கம்?

அவர் நாடு திரும்பியதில் இருந்து இன்று வரை எங்களுக்குள் நெருக்கம் என்ற ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. 22 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. சில நேரம் வெளிநாட்டில் ஏதேனும் தவறான உறவில் இருந்திருப்பாரோ என்ற சந்தேக எண்ணங்கள் எழும். ஆனால், அவர் அப்படி தவறு செய்பவரல்ல என்பதையும் நன்கு அறிந்தவள் நான்.

குறைந்தபட்ச அன்பு!

குறைந்தபட்ச அன்பு!

நான் என்ன பாவம் செய்தேன்? அனைத்து கணவர்களை போல கோபம் வந்தால் திட்டும் குணம் உண்டு. ஆனால், நல்ல சூழல்களில் பாராட்டுவதோ, கொஞ்சுவதோ, இணக்கம் காட்டுவதோ என ஏதும் எங்களுக்குள் நடந்தது இல்லை. தாம்பத்தியம் தான் ஒரு பெண் விருப்பம் என்றில்லை. குறைந்தபட்ச அன்பாவது கிடைத்திருந்தால், இந்த 22 ஆண்டுகளில் என் கண்களில் கொஞ்சம் ஆனந்த கண்ணீரும் வந்திருக்கும்.

சொத்துக்கள்!

சொத்துக்கள்!

அவர் தான் சம்பாதிக்கிறார். ஆனால், அவர் பெயரில் ஒரு சொத்து கூட இல்லை. அவர் வாங்கிய அனைத்து சொத்துக்களும் என் பெயரில் தான் இருக்கிறது. ஆனால், வீடு, தோட்டம், வங்கியில் சேமிப்பு மட்டும் போதுமா...? அன்பும், அக்கறையும் , அரவணைப்பும் தான் நான் வேண்டியது எல்லாம். என் வாழ்வில் ஓர் ஆணிடம் இருந்து கிடைக்கும் அரவணைப்பு எனக்கு கடைசி வரை கிடைகக்வில்லை.

மனைவியின் சந்தோஷம்!

மனைவியின் சந்தோஷம்!

அப்பாவின் முகமே தெரியாது, கணவன் கண் முன் இருந்தாலும், அகத்தை உணர்ந்ததில்லை. அவரது மனோபாவம் என்ன? அவர் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார்? என்பவை எல்லாம் புரியாத புதிராக இருக்கும்.

அவர் ஒன்றும் 24x7 கோபக்காரர் எல்லாம் இல்லை. என் வீட்டாரை கேலி, கிண்டல் செய்ய வேண்டும் என்றால் பத்து சந்தானத்திற்கு சமமாக உருவெடுப்பார். ஆனால், ஒரு கணவனாக... மனைவியை எப்படி சந்தோஷப்படுத்த வேண்டு என்பதை மட்டும் அவர் கடைசி வரை அறியவே இல்லை.

ரிட்டையர்ட்!

ரிட்டையர்ட்!

இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வேலையில் இருந்து ரிட்டையர் ஆகவிருக்கிறார். ஆனால், எங்களுக்குள்ளான உறவு ரிட்டையர்ட் ஆகி இருபது ஆண்டுகள் ஆகிறது. குறைந்தபட்சம் ஐம்பதிலும் காதல் வரும் என்ற பாடலை போல, ரிட்டையர் வாழ்க்கையிலாவது, வீட்டிலேயே இருக்கும் காலத்தில்... என் மீது கொஞ்சம் அன்பை காட்டினார் என்றால்... குறைந்தபட்ச நிம்மதியோடு என் கட்டை சந்தோஷமாக வேகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

My Story: In This Long Lasting Relationship, We Just Had Intercourse Only Once!

My Story: In This Long Lasting Relationship, We Just Had Intercourse Only Once!
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more