கடந்த காலம் தெரிந்தும் வாழ்க்கை கொடுத்த என் முறைமாமன்! - உண்மை கதை!

Written By:
Subscribe to Boldsky

என் சின்ன சின்ன சிறு வயதில் அவனுடன் விளையாடியதாக ஒரு நியாபகம்... அவன் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தான். எப்போதாவது அவனது ஊருக்கு செல்வேன்.. புதுப்புது கிராமத்து விளையாட்டுகளை எனக்கு சொல்லி தருவான். நான் ஜெயிக்க அவன் விட்டுக் கொடுப்பான். நானும் ஒரு பெரிய நகரத்து பெண் எல்லாம் இல்லை... நான் ஒரு கிராமத்து பெண் போல கண்டிப்புடன் தான் என் வீட்டில் வளர்க்கப்பட்டேன்.

பட்டாம் பூச்சி பிடித்து திரிந்த காலம் போய், தாவணிப் பருவத்திற்கு வந்தேன். அவனும் நானும் சின்னஞ்சிறு குழந்தைகளாக ஓடியாடிய காலங்கள் மாறின.. தாவணி அணிந்ததும், அவனும் முன் போல பேசி பழக ஏனோ மனம் வரவில்லை... அவனும் சற்று விலகி கொண்டான். ஆனால் அத்தை மகள், மாமன் மகன் என்ற ஒரு பந்தம் எங்களுக்குள் இருக்க தான் செய்தது.. முதல் காதல் உணர்வு என்பது அப்போது எல்லாம் தனது முறை பெண், முறை பையன் மீது தானே வரும்.. அதே போல ஒரு உணர்வு தான் எங்களுக்குள்.. வாய் பேசவில்லை என்றாலும்.. உரிமையும், காதலும் கண்களில் தெரிந்தது...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரசிய காதல்

இரசிய காதல்

ஏதேனும் விஷேசங்கள், திருவிழாக்கள் என்றால் தான் நாங்கள் பார்த்துக் கொள்வோம். அவனது ஊருக்கு செல்ல போகிறோம் என்ற செய்தி கிடைத்த நாள் முதலாக என் மனதிற்குள் ஒரு திருவிழா நடக்க ஆரம்பித்து விடும். அவனுக்கு இது போன்ற உணர்வுகள் இருந்ததா என்று எனக்கு தெரியவில்லை... அவனது ஊரில் இருக்கும் அந்த ஒன்றிரண்டு நாட்கள்... நான் நானாகவே இருக்க மாட்டேன்.. என்னை அழகாக அழங்கரித்து கொள்வேன்.. அவன் நிற்கும் இடங்களில் சாதாரணமாக உலாவுவேன். அவனை காணாத சிறு நிமிடங்களில் வருத்தம் கொள்வேன்.. அவன் சாப்பிட அமரும் போது, நான் பரிமாறுகிறேன் என்று வேலையில் ஆர்வம் காட்டுவேன்.. அவன் என்னுடன் பேச வேண்டும் என்பதற்காகவே, அவனது இலைக்கு எதுவும் வைக்க மாட்டேன்.. அவன் என் பெயர் சொல்லி அழைப்பானா அழைப்பானா என்று காத்திருப்பேன். இவ்வாறாக எனது காதல் மனதிற்குள் யாருக்கும் தெரியாமல் சத்தமின்றி கிடந்தது....

மாப்பிள்ளை பார்த்தல்

மாப்பிள்ளை பார்த்தல்

தாவணிப் பருவம் கடந்து சேலைப்பருவம் வந்தது... எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள்.. எனது இரண்டு அக்காக்களுக்கும் அரசாங்க மாப்பிள்ளைகள் தான்... எனக்கும் அப்படியே பார்த்தார்கள்.. அந்த சமயத்தில் எனது மாமா தனது பையனுக்காக என்னை பெண் கேட்டு வந்தார்... எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.. அப்போது கூட அவன் என்னை காதலித்தானா இல்லையா என்று எல்லாம் எனக்கு தெரியாது... என் மாமா தான் சொந்தம் விட்டு போக கூடாது என்று என்னை பெண் கேட்டு வந்தார் என்று கேள்விப்பட்டேன்...

திருமணம் ஆனது!

திருமணம் ஆனது!

ஆனால் எனது அப்பா, எனது மாமாவிடம் மறுப்பு தெரிவித்துவிட்டார்... அதற்கு பின்னரும் என் மாமாவும் அத்தையும் ஓயவில்லை.. நெருங்கிய சொந்தம் தான்.. பலமுறை பலரின் மூலமாக என் அப்பா, அம்மா மனதை மாற்ற முயற்சி செய்தார்கள் ஆனால் எதுவும் எடுபடவில்லை... என் மாமாவின் மகன் விவசாயி என்பதற்காக மறுப்பு தெரிவித்து விட்டார்கள். அதோடு எனக்கு ஒரு தொழில் அதிபரையும் பல மையில்கள் தாண்டிய ஒரு நகரத்தில் இருந்து பேசி முடித்து வைத்து விட்டார்கள்... எனக்கு கஷ்டமாக இருந்தது... ஆனால் என் தாய், தந்தை சொல்லை மீறி பேசாதவள் என்பதால் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன். மகிழ்ச்சியாக எங்களது திருமணமும் நடந்தது...

மகிழ்ச்சியான வாழ்க்கை

மகிழ்ச்சியான வாழ்க்கை

சொந்த கிராமத்தை விட்டு, பல மையில்கள் கடந்த நகர வாழ்க்கை...! எனது வாழ்க்கை மாறியது..! என் கணவனை முழு மனதோடு நேசிக்க ஆரம்பித்தேன்... அடிக்கடி வெளியே சென்று சாப்பிடுவது, வாரத்தில் இரண்டு முறை மிகப் பெரிய திரை அரங்குகளில் திரைப்படம் காண்பது, ஷாப்பிங் செல்வது என நான் காணாத உலகத்தை எல்லாம் என் கண் முன்னே நிறுத்தினான் என் கணவன்..! என் தாய் வீட்டையே மறந்து மகிழ்ச்சியாக வாழ தொடங்கி விட்டேன்!

உண்மை முகம்

உண்மை முகம்

ஒரு மாதம் கடந்து, எங்களது திருமண வாழ்க்கை இரண்டாவது மாதத்தில் காலடி எடுத்து வைத்தது... அப்போது தான் என் கணவனின் உண்மையான முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டது. சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் எனது கணவனில் பேல்ட் எனது உடலில் கோலம் போட்டது... ஒரு மாதமாக சுவைத்த எனது சமையல், இப்போது தான் சுவையே இல்லாமல் போனது போல என் மீது சூடான சோற்றை வீசி எறிந்தான்.. அவரது நடவடிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது.. பல பெண்களுடன் தொடர்பில் இருந்தான்... சிலரை வீட்டிற்கும் அழைத்து வந்தான்.. அவர்களுக்கு என்னை பணிவிடை செய்ய சொன்னான்... அதை எல்லாம் என்னால் சகித்துக் கொள்ள இயலவில்லை.. வீட்டில் சொல்லவும் வழியில்லை...

உதவிக்கு யாருமில்லை!

உதவிக்கு யாருமில்லை!

தட்டிக் கேட்க எனது மாமனார், மாமியாரும் உடன் இல்லை... சரி அவர்களை சந்திக்கலாம் எனது இரயில் ஏறினேன்.. எனக்கு எதுவுமே தெரியாது.. எப்படியோ தத்தளித்து, பல பிரச்சனைகளுக்கு பின்னர் என் மாமனார், மாமியாரிடம் சென்று நடந்தவற்றை கூறினேன்.. அவர்கள் தனது மகனுக்கு தான் சாதகமாக பேசினார்கள்... நீ ஒழுக்கமா இருந்தா அவன் ஏன் இப்படி பண்ண போறான்னு என்னை திட்டி தீர்த்தார்கள்... எனது குடும்பத்தையும் இழிவாக பேசினார்கள்... புருஷன் கிட்ட சொல்லாம இவ்வளவு தூரம் வந்து இருக்க.. உனக்கு எவ்ளோ தைரியம் என்று கடும் தீயென சொற்களை என் மீது வீசினார்கள்.. நான் என் கணவரின் வீட்டிற்கு திரும்பினேன்.. அன்று நான் அழுத அழுகை மிகவும் அதிகம்...

கடுமையான நாட்கள்

கடுமையான நாட்கள்

ஒருநாள் எனது கணவர் என்னை ஒரு பார்ட்டிக்காக வெளியே அழைத்து சென்றார்... அப்போது பல பெண்களுடன் மிகவும் நெருக்கமாக பழகினார். நான் அவரது மனைவி என்ற நினைப்பு அவருக்கும் இல்லை.. அவருடன் பழகிய பெண்களுக்கும் இல்லை.. அனைவரும் என்னை ஒரு குப்பை போல பார்த்தார்கள்... இதை எல்லாம் சகித்துக் கொள்ள முடியாமல் அவரிடம் வீட்டிற்கு வந்து நான் அனுபவித்த அனைத்து கஷ்டங்களையும் கூறி அழுதேன்.... இதை எல்லாம் சகித்துக் கொண்டு ஒரு வார்த்தை கூட என் வீட்டாரிடம் கூறாமல் இருப்பது, அவர்களை கஷ்டப்படுத்த கூடாது என்பதற்காக தான் என்று கூறினேன்.. ஆனால் எனது அழுகையை எல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.. என் வேதனையை கண்டு சிரித்தார்...! பாட்டு பாடி என்னை கேலி கிண்டல் செய்தார். எனக்கு கோபம் பெருகியது...! என்னை அவர் வரதட்சனைக்காக தான் திருமணம் செய்து கொண்டதாக கூறினார். அதன் பின் எனது நகைகளை எல்லாம் விற்று விட்டதாகவும் கூறினார். அவர் கூறிய அந்த நொடி அந்த நகைகளை வாங்க என் பெற்றோர் பட்ட துயரம் தான் கண் முன் நின்றது....! நான் தட்டி கேட்டேன்!

வாழ்க்கை பறிபோனது!

வாழ்க்கை பறிபோனது!

நான் அவரை எதிர்த்து பேசி பிரச்சனைகள் செய்ததால், என்னை இரயில் நிலையத்தில் கொண்டு சென்று விட்டார் கட்டிய புடவையுடன்! பல லட்சங்களில் வரதட்சணை கொண்டு வந்தவள் நான்...! நான் இரயில் நிலையம் என்று கூட பார்க்காமல் கதறினேன்.. காலில் விழுந்தேன்.. ஆனால் என்னை எட்டி உதைத்து விட்டு, என்னை தெரியாதவன் போல சென்றான் என் கணவன்... என் ஊர் காரர் ஒருவர் என் நிலையை கண்டு ஓடி வந்து, என்னை அழைத்துக் கொண்டு எனது ஊருக்கே சென்றார். என் பெற்றோரை கண்டதும் கட்டி அணைத்து அழுதேன்...! அது தான் என் வாழ்வில் அழுத கடைசி அழுகை! எனக்கு அவனுடன் விவாகரத்து ஆனாது...!

மறுமணம்

மறுமணம்

அதே சூட்டுடன், மீண்டும் எனக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார்கள்! என்னை பல முறை பெண் கேட்ட எனது மாமா வீட்டிற்கே சென்று மாப்பிள்ளை கேட்டார்கள். அவர்களது வீட்டிலும் எந்த தடையும் இன்றி ஒப்புக் கொண்டார்கள்...! அவர்கள் சம்மதம் சொன்ன அந்த சமயம் எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை...! நான் நிலை தடுமாறி போனேன்! என் முறை மாமன் உடன் பேச வேண்டும் என்று துடித்தேன்..! ஆனால் என்ன பேசவது என்று தெரியவில்லை...! பேச சந்தர்ப்பமும் அமையவில்லை.. எங்களது திருமணம் கோலாகலமாக மணமகன் ஊர் மலைக் கோவிலில் நடந்தது!

தெய்வம்!

தெய்வம்!

எனக்கு என்ன தான் சந்தோஷமான ஒரு வாழ்க்கை அமைந்தாலும் கூட, திருமணமாகிய பத்து ஆண்டுகளில் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை! அனைத்து வகையான சிகிச்சையும் எடுத்து விட்டோம். என் கணவர் அவரது வீட்டில் ஒரே மகன். ஆனாலும் கூட, எங்களது குழந்தை இல்லாதது எங்களது திருமண வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை... இரண்டாவது திருமணம், குழந்தை இல்லை போன்றவற்றை அவர் எனது குறைகளாக பார்க்கவில்லை! என்னிடம் இதற்காக எல்லாம் கோபப்பட்டதும் இல்லை..! அவர் எனது கணவர் இல்லை..! என் தெய்வம்! என் வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய பரிசு! இப்போது நாங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து அன்புடன் வளர்த்து வருகிறோம்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

living new life with my husband real life story

living new life with my husband real life story