இந்த உண்மைக் கதை உங்கள் வாழ்க்கையையே மாற்றக் கூடும்!!

Subscribe to Boldsky

அம்மா அப்பாக்கு இன்னும் சொல்லப்போன ஒரு பொண்ண சுத்தி இருக்கிற குடும்பத்தாருக்கு எல்லாமே அந்த பொண்ணோட திருமணம் தான் பெரிய மைல் கல்லா இருக்கும். கல்யாணத்துக்கு முன்னாடி அலசி ஆராய்ந்து தேடி கட்டிக் கொடுத்தாலும் திருமண வாழ்க்கை எல்லாருக்கும் சந்தோசமானதா தான் இருக்கும்னு சொல்ல முடியாது.

ஒருத்த சந்தோசத்தோட உசரத்துக்கு கொண்டு போறதும் அப்டியே இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்கையவே திருப்பி போடவைக்கிறதுமான்னு பெரிய ரங்கராட்டினம் தான்.

நான்... இந்த கதைய உங்ககிட்ட சொல்லப்போற என் பேரு முனிபா.முனிபா மஹாரி கல்யாணம் ஆன இந்தப்பொண்ணுகிட்ட என்ன கத இருக்கும். புருஷன் அடிச்சா.. மாமியார் கொடுமக்காரின்னு பொறுத்து பொறுத்து பார்த்தேன் இப்போ நான் வீட்டு விட்டு வெளிய வந்தேன்னு சில டெம்ப்ளேட் கதையாத்தான இருக்கும்னு நினைக்காதீங்க. இது அந்த மாதிரியான கதை கிடையாது. இந்த கதையோடு முடிவுல ஒரு சின்ன அதிர்வையாச்சும் கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்யாணம் :

கல்யாணம் :

மிகவும் கன்சர்வேட்டிவான குடும்பம் எங்களுடையது. எனக்கு பதினெட்டு வயதாகும் போதே எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நல்ல பெண்கள் தங்கள் வீட்டினர் எடுக்கும் எந்த முடிவுக்கும் நோ சொல்லமாட்டார்கள் தானே. அதனால் நானும் நோ சொல்லவில்லை.

இனிதே திருமணம் நடந்தது. சம்பிரதாயம் கருதி அப்பா கேட்டார் அப்போதும் திருமணத்தில் சம்மதமா என்று என் விருப்பத்தை கேட்கவில்லை.... இந்த திருமணத்திற்கு உனக்கு சம்மதம் தானே என்று உறுதிப்படுத்திக் கொண்டார். அப்பாவின் மகளாய் ஆம் அப்பா என்று சொல்லிவைத்தேன். ஆனால் மனதளவில் அந்த திருமணம் எனக்கு பிடிக்கவில்லை.

Image Courtesy

விபத்து :

விபத்து :

திருமணம் முடிந்து இரண்டாண்டுகள் உருண்டோடியது. பெரிதாக மறக்க முடியாத சம்பவங்களாக ஏதுமில்லை வழக்கமாக போய்க்கொண்டிருந்தது. அன்று , என் கணவரும் நானும் காரில் போய்க்கொண்டிருந்தோம்.

காரை அவர் தான் ஓட்டிக்கொண்டிருந்தார் லேசாக கண்ணயர்ந்து விட்டாரோ என்னவோ எங்கள் கார் பெரிய டிச்சுக்குள் நுழைந்து விபத்திற்குள் சிக்கியது.

கார் விபத்தில் சிக்கப்போகிறது என்று சுதாரித்த கணவர் கண்ணிமைக்கும் நேரத்தில் காரிலிருந்து வெளியே குதித்து தன் உயிரை காப்பாற்றிக் கொண்டார்.

நான் உள்ளேயே மாட்டிக் கொண்டேன். நகரக்கூட முடியாத அளவிற்கு கிடந்தேன். சுயநினைவுடனே இருந்ததால் எப்படியாவது வெளியே வந்து விட மாட்டோமா என்று என்னால் முடிந்த அளவுக்கு முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

வலது கை, தோள்ப்பட்டை,காலர்போன்,முதுகுத்தண்டு வடம் எலும்புகள் எல்லாம் உடைந்து நொறுங்கியது. எப்படியோ ஒரு வழியாக உள்ளிருந்து ஒரு மூட்டையைப் போல் என்னை தூக்கி மீட்டார்கள். முதலுதவி எல்லாம் கொடுத்து மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டேன். கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் மருத்துவமனையிலேயே இருந்தேன்.

Image Courtesy

மருத்துவரின் அதிர்ச்சி தகவல் :

மருத்துவரின் அதிர்ச்சி தகவல் :

தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனியறைக்கு மாற்றப்பட்டிருந்தேன். என்னை பார்க்க வந்த மருத்துவர், இப்போது தேறி விட்டீர்கள் போலயே என்று சிரித்துக் கொண்டே கேட்டார். ஆம் டாக்டர் என்று நானும் சொன்னேன்.

நல்லது. உங்களுக்கு ஒரு ஓவியராக வேண்டும் என ஆசைப்பட்டீர்கள் ஆனால் திருமணத்தால் அந்த கனவு தடைப்பட்டு போய்விட்டது என்று கேள்விப்பட்டேன் என்று நிறுத்தினார்.

எனக்கோ என் ஆசை சிறுவயதில் எனக்குள் இருந்த கனவு இப்போது ஏன் சொல்கிறார் என்று கொஞ்சம் ஆச்சரியமாய் இருந்தது.பின் அவரே தொடர்ந்தார்.

உனக்கு ஒரு கெட்ட செய்தியை சொல்லப்போகிறேன். மனதை திடப்படுத்திக் கொள்... உன்னால் மீண்டும் ஓவியத்தை வரைய முடியாது என்றார்.

Image Courtesy

அடுத்தடுத்து அதிர்ச்சி :

அடுத்தடுத்து அதிர்ச்சி :

கேட்டதையே ஜீரணிக்க முடியாமல் படுத்துக்கிடக்க அடுத்த சில தினங்களில் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது அதே மருத்துவர் மீண்டும் வந்தார்...

நலம் விசாரித்து விட்டு உன்னுடைய முதுகுத்தண்டு மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதால் இனி உன்னால் எழுந்து நடக்க முடியாது என்றார். சரி, நடந்தது நடந்து விட்டது. இதிலிருந்து எப்படியாவது மீண்டு வந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அதற்கடுத்து இரண்டு நாட்களில் மீண்டும் வந்தார்.... கடவுளே இம்முறை எந்த அதிர்ச்சியான தகவலையும் எனக்கு சொல்லிடக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன்.

ஆனால் அவர் என்னை உலுக்கிப் போடும் ஒரு தகவலுடனே தான் வந்திருந்தார். முதுகில் ஏற்ப்பட்டிருக்கும் பாதிப்பினால் இனிமேல் உங்களால் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என்றார்

Image Courtesy

ஏன் உயிருடன் வாழ வேண்டும் ? :

ஏன் உயிருடன் வாழ வேண்டும் ? :

என் ஆசையான ஓவியத்தை தொடர முடியாது. சரி என் குடும்பத்தினர் நினைப்பது போல திருமண வாழ்க்கையை தொடரலாம் என்றால் உன்னால் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என்றும் அணை கட்டிவிட்டார்கள். வாரிசு கொடுக்க முடியாத மருமகளை எந்த மாமியார் தான் ஏற்றுக் கொள்ளவார்கள்.? இவை எல்லாவற்றையும் விட உன்னால் இனி எழுந்து நடக்கவே முடியாது என்றல்லவா மருத்துவர் சொல்லியிருக்கிறார்.

இன்னும் நான் உயிருடன் தான் இருக்க வேண்டுமா? நான் உயிரோடு இருந்து என்ன செய்யப் போகிறேன் என்று யோசித்தேன்.

Image Courtesy

மன அழுத்தம் :

மன அழுத்தம் :

ஒரே அறை, வெள்ளையுடையில் செவிலியர்கள் அவ்வப்போது வந்து செல்லும் மருத்துவர்கள் என எனக்கு மிகவும் அந்த வாழ்க்கை சலிப்புத்தட்டியது. என் சகோதரனிடம் இங்கே இருக்கப் பிடிக்கவில்லை.

என் மனதை மாற்றிக் கொள்ள வேண்டும் எனக்கு சில வண்ணங்களையும் கேன்வாசும் கொண்டு வா எதாவது செய்கிறேன் என்னால் முடிந்தளவு முயற்சிக்கிறேன் என்றேன் அவனும் கொண்டு வந்து கொடுத்தான்.

மருத்துவமனையில் மரணப்படுக்கையில் கிடந்தபடி என்னுடைய முதல் ஓவியத்தை வரைந்தேன், நல்ல மாற்றம். அற்புதமான தெரபி என்றே சொல்வேன். என்னுள் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது.

Image Courtesy

 எனக்காக நான் :

எனக்காக நான் :

தொடர்ந்து வரைய ஆரம்பித்தேன். என் மனதில் தோன்றுவதையெல்லாம் ஓவியமாம பிரதிபலிக்க ஆரம்பித்தேன். பலரும் என்னை பாராட்டினார்கள். என் சிந்தனனையை போற்றினார்கள்.

அந்த ஒரு நாளில் நான் முடிவு செய்தேன். யாருக்காக இல்லையென்றாலும் எனக்காக நான் வாழ வேண்டும். ஆம் எனக்காக....

யாரோ ஒருவருக்கு நான் சிறந்தவளாக இருக்கவேண்டாம். இன்னொருவரிடம் நான் சிறந்தவள் என்று பட்டம் வாங்க வேண்டும். எனக்காக நான் எனக்குள் இருக்கும் நான் சிறந்தவளாக தோன்றவேண்டும்.

Image Courtesy

 பயம் :

பயம் :

எனக்குள் நான் சிறந்தவளாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. பயம்.. ஆம், எனக்குள் எழும் பயங்களை எல்லாம் வீழ்த்த வேண்டும்.

அந்த பயங்களை எல்லாம் வென்றெடுக்க வேண்டும். அதற்காக என் இயலாமைகளை, பயங்களை எல்லாம் ஒரு தாளில் எழுதிக்கொண்டேன்.

எப்படியாவது இவை ஒவ்வொன்றையும் நான் வென்றெடுக்க வேண்டும். இப்போது முடியாவிட்டாலும் என்னுடைய தொடர் முயற்சியினால் என்றைக்காவது ஒரு நாள் வென்றெடுத்தே தீர்வேன் என்று உறுதி செய்து கொண்டேன்.

Image Courtesy

விவாகரத்து :

விவாகரத்து :

அப்போது எனக்கிருந்த மிகப்பெரிய பயம் என்ன தெரியுமா? விவாகரத்து தான். குடும்பத்தினர் என்ன நினைப்பார்கள் இந்த சமூகம் என்னை எப்படிப் பார்க்கும் என்று யோசித்து யோசித்து குழம்பியது போது.

நான் எனக்காக வாழ்கிறேன். எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்னை இந்த நிலையில் ஏற்றுக் கொள்வதும் அவர்களுக்கு பிடிக்காது. மனதளவில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன்.

என்ன நடந்தாலும் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டேன். விவாகரத்திற்கு சம்மதித்தேன். நான் எதிர்ப்பார்த்தது போலவே அவர்களும் உடனேயே சம்மதம் தெரிவித்தார்கள்.

Image Courtesy

 இரண்டாவது திருமணம் :

இரண்டாவது திருமணம் :

என்னை விவாகரத்து செய்த சில மாதங்களிலேயே என் கணவருக்கு இரண்டாவது திருமணம் நடந்தது. அந்த நாளில் அவருக்கு இரண்டாவதாக திருமணம் நடக்கிறது என்று தெரிந்த நாளில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் என்று அனுப்பினேன் . என்னுடைய வாழ்த்தினை அவர் ஏற்றுக் கொண்டிருப்பார் என்று நிச்சயமாக நான் நம்புகிறேன்.

Image Courtesy

குழந்தைகள் :

குழந்தைகள் :

இரண்டாவதாக எனக்கிறந்த பயம். பயம் என்பதைவிட இயலாமை என்று சொல்லலாம். என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று அந்த மருத்துவர் சொன்ன விஷயம்.

அந்த விஷயம் தான் என்னை மெல்ல அரித்துக் கொண்டேயிருந்தது. ஒரு கட்டத்தில் நான் உணர ஆரம்பித்தேன்.

இந்த உலகத்தில் எத்தனையோ அனாதைக்குழந்தைகள் இருக்கிறார்கள்,அவர்கள் தங்களை யாராவது ஏற்றுக் கொள்ளமாட்டார்களா என்று தானே ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.

அவர்களை ஏற்றுக் கொள்வோம் என்று முடிவு செய்தேன். குழந்தையில்லையே என்று நினைத்து அழுதுகொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று உணர்ந்து கொண்டேன்.

Image Courtesy

மகன் :

மகன் :

நான் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள விரும்புகிறேன் என்று சொல்லி பல தொண்டு நிறுவனங்களில் என் பெயரை பதிவு செய்து வைத்தேன் .

இரண்டு வருடங்கள் கழித்து பாகிஸ்தானின் சிறிய நகரத்திலிருந்து எனக்கு ஒரு போன் வந்தது. என் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

இங்கே ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.தத்தெடுத்து கொள்கிறீர்களா என்று கேட்டார்கள்.

இழந்த சந்தோசத்தை எல்லாம் மீண்டு எனக்கு கிடைத்தது போல உணர்ந்த தருணம் அது.. ஆம்... ஆம் நான் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னேன். இரண்டு நாள் குழந்தையாக மகனை ஏற்றுக் கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

Image Courtesy

சக்கர நாற்காலி :

சக்கர நாற்காலி :

நடக்க முடியாது என்று அந்த மருத்துவர் சொன்னதை வென்றெடுக்க வேண்டுமல்லவா? சர்க்கரநாற்காலிக்கு மாறினேன். இந்த சக்கர நாற்காலியில் உட்காருவதில் இருக்கும் சிக்கல் என்ன தெரியுமா?

இந்த சமூகம் உங்களை ஏற்றுக் கொள்ளது. உங்களை சமமமாக பாவிக்காது. அவர்களை பொறுத்தவரையில் நாங்கள் எல்லாம் குறையுடைய மனிதர்கள்.

நாங்களும் உங்களைப் போலத்தான் இந்த சக்கர நாற்காலியில் உட்காருவதாலேயே எங்களுக்கு எந்த குறையும் வந்து விடவில்லை என்று எல்லாருக்கும் உணர்த்தும் வகையில் நிறைய வெளியே செல்ல ஆரம்பித்தேன்.

பாருங்கள் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே உங்களைப்போலவே எல்லா வேலைகளும் என்னாலும் செய்ய முடிகிறது என்று அவர்களுக்கு புரியவைக்க நினைத்தேன்.

நிறைய ஓவியங்களை வரைந்தேன், கண்காட்சிகள் நடத்தினேன். டிவி சேனல் ஒன்றில் அறிவிப்பாளராக என்னை மெருகேற்றிக்கொண்டேன்.

Image Courtesy

நான் :

நான் :

இப்போது நான் பாகிஸ்தான் பெண்களுக்கான ஐ.நா உறுப்பினர் பெண்கள் மற்று குழந்தைகளின் உரிமைக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

2015 ஆம் ஆண்டு பிபிசியின் 100 பெண்கள் பட்டியலில் நான் இடம்பெற்றேன். 2016 ஆம் ஆண்டில் 30 வயதிற்குள் சாதனை படைத்த சாதித்த 30 பெண்கள் பட்டியல் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது அதில் இடம்பெற்றேன்.

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று உங்களை ஏற்றுக் கொள்கிறீர்களோ அப்போது தான் நீங்கள் உங்களை வென்றெடுக்க ஆரம்பிக்கிறிர்கள் . அப்போது தான் இந்த உலகம் உங்களை அங்கீகரிக்கும்.

Image Courtesy

வாழ்க்கை :

வாழ்க்கை :

எல்லாருக்கும் வாழ்க்கை குறித்து தங்களது எதிர்காலம் குறித்தெல்லாம் ஒரு ஃபேண்டசியான கற்பனை மனதிலிருக்கிறது. என் வாழ்க்கை இப்படி தான் நடக்க வேண்டும் இப்படியான அடுக்குகளில் அடுத்தடுத்து என் பயணம் இருக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் திட்டமிடுகிறார்கள் இதில் எதேனும் ஒரு இடத்தில் சறுக்கினால் கூட சோர்ந்து அங்கேயே உட்கார்ந்து விடுகிறோம் .

இந்த வாழ்க்கை என்பது சோதனைமுயற்சி கிடையாது. இறுதிப்பரிட்சை போன்றது. ஆம், இறுதிப்பரிட்சை அதனை நாம் எளிதாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது தவறு. என்ன கஷ்டம் வந்தாலும் முட்டி மோதி இதனை வென்றெடுக்க வேண்டும்.

Image Courtesy

தோல்வி :

தோல்வி :

எல்லாமே எளிதாக நடக்கவேண்டும். முயற்சியும் எளிமையானதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வெற்றி மட்டும் பிரம்மாண்டமானதாக இருக்க வேண்டும் என்றால் எப்படி முடியும்?

பயம், அழுகை, காதல்,துரோகம், நம்பிக்கை,தோல்வி என நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் அத்தனையுமே நீங்கள் அடுத்துப் பயணிக்கப் போகும் வாழ்க்கைக்கான வழித்தடங்கள்.

ஒரு போதும் எனக்கு தோல்வியே வரக்கூடாது . எல்லாமே வெற்றியாக இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்று நினைக்காதீர்கள். வெற்றியை நெருங்க நமக்கு தோல்விகளும் அவசியம்.

உங்களைக்கொண்டாடுங்கள். உங்களுடைய வாழ்க்கையை கொண்டாடுங்கள். ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வாழ்ந்திடுங்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  English summary

  Inspiring Story about a woman who got divorced had a major accident

  Inspiring Story about a woman who got divorced had a major accident
  Story first published: Friday, October 27, 2017, 14:12 [IST]
  இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more