ஜோசியக்காரனை நம்பி, கணவனை இழந்த பெண் - My Story #121

Posted By:
Subscribe to Boldsky
How Astrology Believe Killed My Cousin's Marriage Life - Real Life Story!

விமலா எனக்கு மாமா மகள். எங்கள் தலைமுறையில் குடும்பத்தில் அதிகம் படித்தவளே அவள் தான். 80-களிலேயே பி.எட் படித்து பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்தாள். எங்கள் குடும்பத்தின் மூத்த அக்காவிற்கு நீண்ட காலம் திருமணமாகாத காரணத்தால் இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தனர். ஆகையால், விமலாவுக்கும் திருமணமாக தாமதாமனது.

பெரிய அக்காவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்ததில் விமலாவுக்கு ஒப்புதல் இல்லை. தனக்கும் அப்படி ஒரு நிலை வந்துவிடும் என்ற அச்சம் இருந்தது. ஆகையால், பெற்றோரிடம் நேரடியாக, எனக்கு மாப்பிள்ளை பார்த்து நேரம் வீணடிக்காமல் தங்கை, தம்பிகளுக்கு திருமணம் செய்யும் வழியை பாருங்கள். நான் ஒண்டிக் கட்டையாகவே கூட இருந்துக் கொள்வேனே தவிர, இரண்டாம் தாரமாக தள்ளிவிட நினைக்க வேண்டாம் என கூறிவிட்டாள்.

ஆனால், விமலாவுக்கு கவர்மென்ட் உத்தியோகம் பார்த்து வந்த நல்ல வரன் அமைந்தது. திருமணமும் விரைவில் முடிவானது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இருவரும் படித்தவர்கள்!

இருவரும் படித்தவர்கள்!

இப்போது ஒரு வீட்டில் கணவன் - மனைவி இருவரும் படித்தவர்கள் என்பது பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனால், அன்று அது மிகப்பெரிய ஆச்சரியம். இருவரும் சம்பாதிப்பதை கண்டால் ஊர் கண்ணேப் பட்டுவிடும் என்பார்கள். அப்படி தான் விமலாவின் திருமண வாழ்விலும் பல ஊரார் கண் பட்டது போல. விமலாவின் ஆரம்பக் கால வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக தான் சென்றது.

திமிர்!

திமிர்!

விமலா அக்கா படித்தவள் என்பதால் எதையும் ஆராய்ந்து தான் செய்வாள். மூடத்தனமாக ஏதேனும் செய்வதை அவளுக்குப் பிடிக்காது. மற்றவர்களை காட்டிலும் இவள் பெரியவர்களின் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேசியது கணவர் வீட்டாருக்கு பிடிக்கவில்லை. ஆகையால் விமலாவை திமிர் பிடித்தவள் எனக் கூற ஆரம்பித்தனர்.

குழந்தை!

குழந்தை!

இதுப் போக, விமலா அக்காவுக்கு திருமணமாகியும் இரண்டாண்டுகள் குழந்தைகள் இல்லாமல் இருந்தது. இதைக் காரணம் காட்டி அவளுக்கு திமிர் அதிகம், அதனால் தான் அந்த ஆண்டவன் குழந்தைப் பாக்கியம் கொடுக்கவில்லை என விமலாவின் மனம் புண்படும்படி கூறினார்கள். இதனால் பள்ளியிலும் சரியாக கவனம் செலுத்த முடியாமல் தவித்தாள் விமலா.

ஆன்மிகம்!

ஆன்மிகம்!

இதன் காரணத்தால் கொஞ்சம், கொஞ்சமாக கோவிலுக்கு செல்வதை அதிகரித்தால் விமலா அக்கா. அங்கே பூசாரிகள் சொல்வது, அங்கு வரும் மற்ற பெண்கள் கூறுவது, பரிகாரம் என அனைத்தையும் செய்ய ஆரம்பித்தாள் விமலா. காலப் போக்கில் புதியதாக விமலாவுடன் பழகுபவர்களுக்கு அவளது ஆரம்பக் கால வாழ்க்கை எப்படி இருந்தது, அவளது குணாதிசயங்கள் என்னென்ன என்பது தெரியவே தெரியாது. ஓரிரு வருடங்கள் கழித்து அவளை கண்ட பள்ளி, கல்லூரி தோழிகள் எல்லாம் அவளை முற்றிலும் வேறு பெண்ணாக கண்டனர்.

ஜோதிடம்!

ஜோதிடம்!

அதிகமாக ஆன்மீகத்தில் மூழ்கிய விமலாவுக்கு ஜோதிடத்தின் மீதும் அதிக நம்பிக்கை வந்தது, இதற்காக சிறப்பு வகுப்புகளில் எல்லாம் சேர்ந்தாள். அப்போது விமலாவுக்கு திருமணமாகி மூன்று வருடங்கள். அப்போது தான் அவள் கருத்தரித்தாள். விமலா கருவுற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அவளது கணவர் அனைவரிடமும் கூறி மகிழ்ந்தார்.

நம்பிக்கை!

நம்பிக்கை!

ஆன்மீகமும், ஜோதிடமும் தான்.... தான் கருத்தரிக்க காரணம் என நம்ப துவங்கினாள் விமலா. மருத்துவ பரிசோதனைகள், மருந்துகளுடன், ஆன்மீகமும், ஜோதிடமும் தனது ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது என முழுமையாக கருதினாள் விமலா. கர்ப்பமாக இருந்த போதிலும் தான் செய்யும் எந்த பூஜையும் தடைப்படாமல் செய்து வந்தாள். எப்போதும் போல வாரம் தவறாமல் அனைத்துக் கோவிலுக்கும் சென்றுவிடுவாள்.

நாள் நெருங்கியது...

நாள் நெருங்கியது...

மருத்துவர் கூறிய பிரசவ நாள் நெருங்க துவங்கியது. ஆகையால், அதிகமாக கடின வேலைகள் செய்ய வேண்டாம். வெளிய அலைவது கூடாது என அனைவரும் விமலாவிற்கு அறிவுரை கூறினார்கள். ஆனால், அவர் பூஜைகள் செய்ய வேண்டும், கோவிலுக்கு சென்று வர வேண்டும் என அடம் பிடித்தாள். நீ இதுவரை செய்த பூஜைகளுக்கான பலன் தான் இந்த குழந்தை. கவலைப் படாதே, இந்த நாட்களில் நீ கஷ்டப்படுவதை எந்த கடவளும் கூட விரும்பமாட்டார் என கூறினார்கள்.

அசம்பாவிதம்!

அசம்பாவிதம்!

குழந்தை நல்லப் படியாக தான் பிறந்தது. ஆனால், பிறந்த ஒருசில மணி நேரங்களிலேயே குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அனைவரம் பதட்டம் அடைந்தனர். விமலா தனது குழந்தையை சரியாக பார்க்க கூட இல்லை. அவள் மயக்க நிலையில் இருந்தாள். மருத்துவர்கள் கடினமாக போராடினார்கள். அப்போது பெரிய அளவில் நவீன வசதிகள் இல்லாமல் போன காரணத்தால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. பிறந்த ஒரு சில மணி நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது.

கதறி அழுதாள்...

கதறி அழுதாள்...

பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை முத்தமிடக் கூட விமலாவுக்கு கொடுத்து வைக்கவில்லை. அவள் முழு நினைவுடன் பார்த்த போது குழந்தை மரணித்திருந்தது. ஓரிரு மாதங்கள் விமலா யாருடனும் சரியாக பேசக் கூடவில்லை. ஒருவேளை தான் கடைசியில் அந்த பூஜைகளை சரியாக செய்திருந்தால் குழந்தைக்கு இந்த நிலை வந்திருக்காது என கருதினாள் விமலா.

இதனால் அனைவர் மீதும் கோபம் கொண்டாள்.

விரதங்கள்...

விரதங்கள்...

அதன் பின், விமாலா ஆன்மீகத்தில் இன்னும் அதிகமாக மூழ்கினாள். அப்போது தான் ஒரு ஜோசியக்காரர் ஒருவனின் அறிமுகம் கிடைத்தது விமலாவுக்கு. தனது வாழ்க்கை அனுபவங்களை அவனுடன் பகிர்ந்துக் கொண்டாள் விமலா. அவன் விமலாவின் அதீத மூட நம்பிக்கையை வைத்து பணம் பறிக்க திட்டமிட்டான். ஆகையால், பல புதிய பூஜைகள் குறித்து விமலாவிடம் கூறி, அதை செய்தால் வாழ்க்கை சிறக்கும். மீண்டும் குழந்தை பிறக்கும் என ஆசை வார்த்தை கூறினான்.

யாரிடமும் கூறாதே...

யாரிடமும் கூறாதே...

ஒருவேளை, இந்த முட்டாள் தனத்தை பற்றி வெளியே யாரிடமாவது கூறினால், பணம் பறிக்க முடியாதோ என கருதி, விமலாவிடம் இந்த பூஜை முற்றிலும் முடியும் வரை, உனக்கு பலன் கிடைக்கும் வரை யாரிடமும் கூறாதே என எச்சரித்தான். அதனால், கட்டிய கணவனிடமும் கூறாமல் அந்த ஜோதிடக்காரன் கூறிய பூஜைகளை செய்து வந்தாள் விமலா.

அவன் வீட்டிலேயே...

அவன் வீட்டிலேயே...

தன் வீட்டில் பூஜைகள் செய்தால் மற்றவர்களுக்கு தெரிந்துவிடும் என கருதி, அந்த ஜோதிடக்காரனின் வீட்டிலேயே பூஜைகள் செய்து வந்தாள் விமலா. ஆனால், இதை யாரோ விமலாவின் கணவரிடம், விமலா வேறு ஆணுடன் தகாத உறவில் இருப்பதாக கூறிவிட்டனர். மேலும், பூஜை செய்ய விமலா சென்று வருவதை, நேரில் காண்பித்து, இப்படி தான் இவள் நடத்தை மாறிவிட்டது என கூறி பிரச்சனையை பூதாகரம் ஆக்கினார்கள்.

சண்டை!

சண்டை!

விமலா எத்தனையோ தன்னைக் குறித்து கூறியும் விமலாவின் கணவரும், அவரது உறவினர்களும் விமலாவின் பேச்சை கேட்பதாக இல்லை. தவறு விமாலாவின் பக்கமும் இருந்தது. அவள், கணவநிடமாவது கூறியிருக்க வேண்டும். சண்டை முற்றியது. இருவரின் இல்வாழ்க்கை நீதிமன்ற படியேறியது.

விவாகரத்து!

விவாகரத்து!

யாரும், யாருடைய பேச்சையும் கேட்பதாக இல்லை. விவாகரத்து மட்டுமே விமலாவின் திருமண வாழ்விற்கு முடிவாக இருந்தது. ஜீவனாம்சம் எவ்வளவு வேண்டும் என நீதிபதி கேட்டதற்கு, நான் படித்திருக்கிறேன். எனக்கு வேலை இருக்கிறது. என் பேச்சை காது கொடுத்துக் கேட்க நேரமில்லாத யாருடைய உதவியும் எனக்கு தேவையில்லை என கூறி, விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டாள் விமலா.

80-களில் ஆன்மிகம், ஜோதிடம் என கண்டதை நம்பி வாழ்க்கையை பல வகையில் இழந்த பல விமலாக்கள் இருந்தனர். இன்றும் கூட இப்படி சில விமலாக்கள் வாழ்க்கையை தொலைத்து சமூகத்தில் கேள்விக்குறியாய் நின்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Astrology Believe Killed My Cousin's Marriage Life - Real Life Story!

How Astrology Believe Killed My Cousin's Marriage Life - Real Life Story!