மனைவியை பிரிந்த பிறகு குடியை கைவிட்ட பிரபல நடிகர்!

Posted By:
Subscribe to Boldsky

ஹாலிவுட்டின் ஹாட் அன்ட் ரொமான்ஸ் ஜோடியாக திகழ்ந்தவர்கள் பிரட் பிட் மற்றும் ஏஞ்சலினா ஜூலி. பிள்ளைகள் பெற்றுக் கொள்வதில் மட்டுமின்றி, தத்தெடுத்துக் கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டிய தம்பதி இவர்கள்.

பெற்றால் தான் பிள்ளையா... என்ற வாசகத்திற்கு பொருத்தமாக வாழ்ந்து காட்டிய இவர்களது இல்லற வாழ்க்கையில் யார் கண் பட்டதோ, இருவரும் பிரிந்து விட்டனர். இதற்கு பிராட் பிட்டிற்கும், வேறு ஒரு நடிகைக்கும் இடையே இருந்த உறவு தான் காரணம் என சிலர் கூறுகின்றனர்.

தன் ஆசை மனைவியை பிரிந்த பிறகு, தன்னை பாடாய்ப்படுத்தி வந்த புகை மற்றும் குடியை கைவிட்டுள்ளார் பிராட் பிட்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் முறையாக...

முதல் முறையாக...

ஏஞ்சலினா ஜூலியை பிரிந்த பிறகு முதன் முறையாக தங்கள் விவாகரத்து குறித்து வாய் திறந்து பேசியுள்ளார் பிராட் பிட்.

தனது அதிகப்படியான குடி மற்றும் புகை பழக்கமும் தன்னை எமோஷனலாக பலரிடம் இருந்து பிரித்துவிட்டது என கூறியுள்ளார்.

பேட்டி!

பேட்டி!

இந்த தகவலை ஜி.கியூ ஸ்டைல்க்கு அளித்த பேட்டியில் 53 வயதை கடந்த ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன் கிழமை நடந்த நிகழ்ச்சியில், புகை மற்றும் மது பழக்கத்தில் இருந்து வெளிவர சிறப்பு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக பிராட் பிட் கூறியுள்ளார்.

பிராட் பிட் கூறியதாவது...

பிராட் பிட் கூறியதாவது...

நான் இப்போது தான் தெரபியை ஆரம்பித்துள்ளேன். நான் இந்த தெரபியை விரும்புகிறேன், அதிகமாக விரும்புகிறேன்.

இந்த தெரபியை துவங்கும் முன் இரண்டு நிபுணர்களை சந்தித்தேன், அதில் சிறந்த ஒருவரை தேர்வு செய்து சிகிச்சை பெற்று வருகிறேன் என பிராட் பிட் கூறியுள்ளார்.

குடும்பம்!

குடும்பம்!

பிராட் பிட்டை பிரிவதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜூலி அறிவித்தார். இவர்களுக்கு ஆறு பிள்ளைகள் இருக்கின்றனர்.

மேலும், பிட்டை குழந்தைகளை கோபத்தின் காரணத்தால் துன்புருத்தினாரா? என விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி மாதம் பிராட் பிட் அனைத்து குற்றச்சாட்டுகளையும் கடந்து வந்தார். ஜூலியும், இவரும் விவாகரத்து பெற்றனர்.

மாற்று!

மாற்று!

தான் ஒயின் மற்றும் வோட்கா விரும்பு குடித்து வந்ததாகவும். இப்போது மது மற்றும் புகையில் இருந்து வெளிவரும் சிகிச்சையில், இவற்றுக்கு மாறாக பிராட் பிட் கிரான்பெர்ரி மற்றும் ஃபிஸ்ஸி ஜூஸ் குடித்து வருவதாக கூறியுள்ளார்.

கைவிடுங்கள்!

கைவிடுங்கள்!

மது மற்றும் புகை தற்காலிகமான போதை. ஆனால், அவற்றால் உங்கள் இல்லறத்தில் உண்டாகும் பிரச்சனை நிரந்தரமான பிரிவு அல்லது ஆறாது வடுக்களை பரிசளித்து செல்ல கூடியவை.

எனவே, மது மற்றும் புகையை கைவிடுவது குறித்து இப்பழக்கம் இருக்கும் ஆண்கள் நன்கு பரிசீலனை செய்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hollywood Actor Brad Pitt Quits Drinking After split with Angelina Jolie

Hollywood Actor Brad Pitt Quits Drinking After split with Angelina Jolie
Story first published: Saturday, May 6, 2017, 14:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter