For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அம்மூ... அப்பா வேண்டாமாடா உனக்கு.... மனதை உருக்கும் சம்பவம்!

மகளின் காதலுக்கு அப்பா ஒத்துக் கொள்ளவேயில்லை மீறி மகள் திருமணம் செய்து கொள்ள அதற்கான பதிலை அப்பா பேஸ்புக் லைவ் வழியாக கொடுக்கிறார்.

|

மகள் விடுமுறையில் வரப்போகிறாள் என்று சொன்னாலே அப்பாவுக்கு தலைகால் புரியாது. என்ன உங்கப் பொண்ணு ஊருக்கு வர்றாள என்று தெருவில் செல்வோரும் கண்டுபிடித்திடும் அளவிற்கு வீடே தடபுடலாய் இருக்கும். அப்பா ட்ரைன் ஊருக்கு வர இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு என்று மகளின் தகவல் கிடைத்ததுமே ரயில்வே ஸ்டேசன் வாசலில் சென்று காத்துக்கிடப்பார்.

ஒரே மகள். தன் உயிரின் மிச்சம் அன்பின் மொத்த உருவாய் கண்ணெதிரே நிற்கிறாள். எப்போதுமே இந்த அப்பா மகள் உறவுக்கு செண்ட்டிமெண்ட் அதிகம், பெண் குழந்தைகள் தங்கள் அப்பாவிடம் அதிகம் செல்லம் கொஞ்சுவதும் அப்பாக்கள் மகளுக்கு தனி இடம் ஒதுக்குவதும் காலங்காலமாக நடந்து வருகிறது.

இந்த உறவுச்சிக்கலில் சிக்கித்தவிக்கும் உறவுகளில் இவர்களும் அடக்கம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகள் :

மகள் :

ஒரே மகள். ஊரிலேயே பெரிய பள்ளிக்கூடத்தில் கல்வி , தன் உழைப்பில் சிறுகச் சிறுக சம்பாதித்து கட்டிய வீட்டை அடகு வைத்து கல்லூரிப் படிப்பை படிக்க வைத்தார். யார் சொன்னார்களோ உள்ளூரில் படிப்பதை விட வெளியூரில் படித்தால் மதிப்பு அதிகம் என்று தன்னால் முடியாவிட்டாலும் மகள் வெளியூரில் படிப்பதற்கு போதுமான வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அப்பா மகள் விஷயத்திற்கு நடுவே அம்மா நுழையவே முடியாது.

கஷ்டப்படுகிறாய்... உன்னால் முடியாது தேவையில்லாமல் செலவை இழுத்துப் போடாதே என்று யாராவது அட்வைஸ் சொன்னால் இந்த அப்பா அவர்களிடம் கேட்கிற ஒரே கேள்வி.

ஆம் கஷ்டப்படுகிறேன் தான் இல்லையென்று நான் சொல்லவேயில்லையே. இந்த சிரமங்கள் என் மகளுக்காகத்தானே.

மகளுடை எதிர்காலத்திற்காகத்தானே இன்று நாங்கள் இப்படிச் சிரமப்படுகிறோம் என்று சொல்லி வாயடைத்துவிடுவார்.

அப்பா மகள் அன்பு :

அப்பா மகள் அன்பு :

நடுத்தெரு, கோவில், கல்லூரி, திருமண மண்டபம், மார்க்கெட்,பஸ் ஸ்டாப் என்று எந்த இடமாக இருந்தாலும் அப்பா இருந்தால் மகளுக்கு தலைகால் புரியாது.

ஏதோ தன்னிடம் அபிரிதமான சக்தி கிடைத்தது போல உணர்வாள் அப்பாவுக்கோ உலகையே வென்றுவிட்டு பெருமை முகத்தில் தெரியும்.

அப்பாவை அணைத்து முத்தமிட மகளுக்கு தனியாக நேரம் காலம் எல்லாம் தேவையில்லை. நினைத்த போதெல்லாம் அப்பா லவ் யூ என்பாள் மகள் லவ் யூ என்று சொல்லும் போது அப்பா மட்டும் சும்மா இருப்பாரா என்ன? மகள் கோபித்துக் கொள்ளக்கூடாதே என்று இவர் பம்முவதும்,

இது மட்டும் தெரிஞ்சா எங்கப்பா செம்ம டென்சனாகிடுவாரு என்று மகள் பயப்படுவதும் நேசித்தலின் ஓர் அங்கம் அது.

கதையின் கதை :

கதையின் கதை :

திருமணம் குறித்து முடிவெடுக்கும் போது எல்லாரும் கொஞ்சம் தடுமாறவே செய்வார்கள். அந்த தடுமாற்றம் சிலருக்கு நேர்மறையான விளைவுகளையும் சிலருக்கு வாழ்க்கையையே திருப்பி போட்டு விடும் அப்படி வரும் சூழலை எதிர்கொள்ள திராணியற்றவர்கள் என்ன செய்கிறார்கள் அவர்களது வாழ்க்கை எப்படி அமைகிறது என்பது தான் இந்த கதை.

வரவேற்பு :

வரவேற்பு :

வெளியூரில் தங்கிப் படிக்கும் மகளுக்கு தன் சீனியருடன் காதல். காதலனை கரம் பிடிக்க பெற்றோரின் சம்மதம் வாங்க சொந்த ஊருக்கு வருகிறார். கல்லூரிப்படிப்பு இன்னும் சில மாதங்களில் முடியப்போகிறது.

இனி என் மகள் என்னுடனே இருப்பாள் என்று பெரும் மகிழ்வுடன் மகளை வரவேற்க ரயில்நிலையத்தில் இரண்டு மணி நேரம் காத்திருந்து அழைத்து வருகிறார்.

வீட்டில் மகளுக்கு பிடித்த உணவை சமைத்து வைத்து அம்மா காத்திருக்கிறாள்.

மனதில் நின்ற காதல் :

மனதில் நின்ற காதல் :

என்ன நீ வந்ததுல இருந்து போனவே நோண்டிட்டு இருக்க, எதாவது ப்ராப்ளமா ரொம்ப டிஸ்ட்ரப்டா இருக்குற மாதிரி இருக்கு என்று அம்மா ஆரம்பிக்க.... என்னடா என்ன ஆச்சு ?

காலேஜ்ல எதாவது பிரச்சனையா ? சொல்றா என்று அப்பா அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார்.

இல்லப்பா ட்ராவல் டயர்ட்.... ப்ரண்ட்ஸ் எல்லாரும் ஊருக்கு போயாச்சான்னு விசாரிக்கிறாங்க அதான் எல்லாருக்கும் ரிப்ளை அனுப்பிட்டு இருக்கேன் என்று சொல்லி அப்பா தோலில் சாய்ந்து கொண்டாள்.

பராவாயில்லையே பிரண்ட்ஸ் இவ்ளோ அக்கறையா இருக்காங்க. அந்த புள்ளைகள எல்லாம் ஒரு நாள் வீட்டுக்கு வரச்சொல்லுமா என்றாள் அம்மா.

மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

கடிதம் :

கடிதம் :

விடுமுறை முடியப்போகிறது எப்படியாவது தன் காதலை வீட்டில் இருப்பவர்களிடத்தில் சொல்ல வேண்டும். எப்படி சொல்ல, அதை அப்பா எப்படி ஏற்றுக் கொள்வார் உடனேயே சம்மதிப்பாரா எதுவும் தெரியாது. ஆனால் இன்று இரவுக்குள் சொல்ல வேண்டும். என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

அப்பா, உங்களுக்கு ஒரு லெட்டர் என் ரூம்ல இருக்கு அத படிங்க என்று சொல்லி கிட்சனில் இருக்கும் ஃப்ரிட்ஜில் ஸ்டிக்கி நோட்ஸ் ஒன்றினை ஒட்டிவிட்டு இவள் தன் தோழி வீட்டிற்கு சென்று விட்டாள்.

மகளின் அறையில் இருந்த கடிதத்தில், தான் ஒருவனை காதலிப்பதாகவும் அவனையே திருமணம் செய்து கொள்ள நினைப்பதாகவும் அதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும் உங்களிடம் நேரடியாக சொல்ல எனக்கு பயமாக இருக்கிறது அதான் இந்த கடிதம் என்னை மன்னித்து விடுங்கள் என்றிருந்தது.

அப்பாவின் அனுமதி :

அப்பாவின் அனுமதி :

அப்பாவுக்கு தலைகால் புரியவில்லை, கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறாள் என்றால் அவள் இப்போ எங்கேயிருக்கிறாள் ஏதேனும் தப்பான முடிவை எட்டிவிடப்போகிறாள் என்று நினைத்து அவசர அவசரமாக மகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவளை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.

வீட்டில் மயான அமைதி.

யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பம். பையன் பேரென்ன? என்று அம்மாவே தொடக்கப்புள்ளி வைத்தார்.

அம்மாவுக்கும் மகளுக்கும் நேர்காணல் தொனியில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது அப்பா மவுனமாகவே இருந்தார் . இறுதியாக மகள் தேம்பித் தேம்பி அழ அப்பா தன் முடிவைச் சொல்லாமலேயே எழுந்து போய்விட்டார்.

திருமணத்திற்கு தயார் :

திருமணத்திற்கு தயார் :

அப்பாவுக்கு விருப்பமில்லை ஆனால் மகளிடம் அதை சொல்ல முடியவில்லை.

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.... காதலன் வீட்டில் ப்ரஷர் கொடுக்க திருமண ஏற்படாடுகள் ஆரம்பித்தது. மகள் அம்மாவிடமும் அப்பாவிடமும் மாறி மாறிக் கெஞ்சினாள். அப்பா , தனக்கு இதில் துளியும் விருப்பமில்லை என்றும் அதற்கு மேல் உன் இஷ்டம் என்றும் சொல்லிவிட்டு நகர்ந்து கொண்டார்.

அதற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளிலும் அப்பா மாறவேயில்லை. திருமண நாள் வந்தது. அம்மா நீ திருமணத்திற்கு வா அதற்கு பிறகு அப்பா தானாகவே வந்துவிடுவார் என்று மகள் சொல்ல முதலில் சம்மதிக்கவேயில்லை மகளின் காதலன் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் வற்புறுத்தவே திருமணத்திற்கு கிளம்பிவிட்டார்.

மறைந்துவிட்ட கம்பீரம் :

மறைந்துவிட்ட கம்பீரம் :

முகத்தில் சோகம் அப்பிக்கிடந்தது. நடை தளர்ந்திருந்தது. விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு கடமையே என்று ஒவ்வொரு நாளையும் கடத்திக்கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.

மார்க்கெட்டிற்கு சென்று விட்டு திரும்பிய போது வீட்டில் மனைவியைக் காணவில்லை அருகிலிருக்கும் கோவிலுக்குச் சென்றிருப்பாள் என்று நினைத்துக் கொண்டு வாசல் கதவை பூட்டாமல் லேசாக மூடிவிட்டு தன் அறையில் வந்து படுத்துக்கொண்டார்.

கண்ணைத் திறந்தால் இரண்டு மணி நேரம் ஓடியிருந்தது. இரண்டு மணி நேரமாக வரவில்லையா? என்று அதிர்ச்சியுடன் தெரு முக்கு வரை சென்று பார்த்துவிட்டு வீடு வந்து சேர்ந்தார்.

யாதர்த்தமாக பொழுது போகாமல் சிஸ்டத்தில் முகநூல் பார்க்க அங்கே இருந்தது இவரை உலுக்கியெடுத்து விட்டது.

ஃபேஸ்புக் லைவ் :

ஃபேஸ்புக் லைவ் :

ஃபேஸ்புக் லைவ் ஓடிக் கொண்டிருந்தது. மகளின் திருமணம் லைவ்வாக ஓடிக் கொண்டிருந்தது. மகளுக்கு அருகில் மனைவி நிற்கிறாள்.

தந்தை ஸ்தானத்தில் நின்று தான் நடத்தவேண்டிய சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் யாரோ ஒருவர் முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறார்.

இத்தனை காலங்களாக அன்பு செய்த மகள் உடனிருந்த மனைவி இருவருமே என்னை வேண்டாமென்று சென்றுவிட்டார்கள். என் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்னை மதித்திருந்தால் என் விருப்பங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்று நினைத்திருப்பார்கள் எப்படியாவது அப்பாவை சமாதனம் செய்திட வேண்டும் என்று நினைத்திருப்பார்கள் அந்த நினைவு யாருக்குமேயில்லை .

நான் இன்று தேவையில்லாதவனாகி விட்டேன்.

நான் இனி யாருக்கும் தேவையில்லை.... திரும்ப திரும்ப இந்த வார்த்தை ஒலித்துக் கொண்டேயிருந்தது. தன்னையும் அறியாமல் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. இவரும் ஃபேஸ்புக்கில் லைவ் ஆன் செய்தார்.

அம்மூ.... :

அம்மூ.... :

அம்மு.... உனக்கு அப்பா வேண்டாமாடா? என்று நா தழுதழுக்க கூறிக் கொண்டே கதறியழ ஆரம்பித்தார். தேம்பித் தேம்பி அழ கமெண்ட்ஸில் டேக் கேர்... என்னாச்சு என்று வரிசையாக வந்து விழ ஆரம்பித்தது.

அப்பா வாழ்ந்தது போதும் அப்பா இருந்தவரைக்கும் உனக்கு எந்த குறையும் வைக்கலன்னு நினைக்கிறேன்.... சந்தோசமா இருடா சந்தோசாமா.... என்று ஆசிர்வதிப்பது போல கையை அசைத்துவிட்டு.... கையெடுத்து கும்பிட்டு மனைவியின் சேலையை எடுத்து கட்டிலில் ஏறினார்.

முக நூல் நண்பர்கள் பலரும் பதற ஆரம்பித்தார்கள். வீட்டின் லேண்ட்லைனும் மொபைலும் போன் அடித்துக் கொண்டேயிருந்தது.

எதுவும் இவருக்கு கேட்கவில்லை. கட்டிலின் மேலே ஸ்டூலை வைத்து ஏறினார் சேலையை ஃபேனில் கட்டி தன் கழுத்தில் சுருக்கை இருக்கினார்.

கண்ணை மூடி ஒரு நிமிடம் யோசித்தார் எதிரில் மகளின் முதல் பிறந்தநாளின் போது எடுத்த குடும்ப படம் இருந்தது. பார்த்துக்கொண்டே ஸ்டூலை தட்டிவிட்டார். இரண்டே நிமிடங்களில் அப்பாவின் நாடி அடங்கியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Emotional story of father and daughter

Emotional story of father and daughter
Story first published: Tuesday, October 31, 2017, 18:47 [IST]
Desktop Bottom Promotion