‘தரமணி’ பார்த்த ஆண்கள் இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வாங்களா?

Posted By:
Subscribe to Boldsky

வழக்கமான காதல் கதையாக இருக்காது, ஆண் பெண் உறவுச்சிக்கலை பேசும். பாலியல் சார்ந்த அணுகுமுறைகளை பெண் எப்படி எதிர்க்கொள்கிறாள் என்பது போன்ற எதிர்ப்பார்ப்புகளோடு வந்த திரைப்படம் தரமணி. திரைப்படம் பற்றிய பாசிட்டிவ் நெகட்டிவ் என பல கோணங்களில் பல விமர்சனங்களை கடந்து வந்திருப்போம். இது தரமணி குறித்த விமர்சனமல்ல.

பெண்களைப் பற்றி திரையில் என்ன தான் சொல்லியிருப்பார் எதிர்ப்பார்ப்புடனும் உண்மையிலேயே அது ஆண் பெண் உறவுச் சிக்கலைப் பற்றி பேசுகிறதா என்று பார்க்கச் சென்ற ஒருவரின் கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா? ஆண்களே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன உடை அணிய வேண்டும் ? :

என்ன உடை அணிய வேண்டும் ? :

ஜீன்ஸுக்கு நீளமான டாப்,சுடிதார்,சேலை அணிந்து வரும் பெண் அபூர்வமானவள், பழங்காலத்து நடிகை என்று கிண்டல் செய்பவன், அதேப் பெண்ணை மாடர்ன் உடையில் பார்த்ததும் திட்டித்தீர்கிறான்.

இப்போது உங்கள் கூற்றுப்படி... ஒரு பெண் என்ன ஆடை அணிய வேண்டும்?

ஸ்ட்ரேஞ்சர் ஆல்தியா:

ஸ்ட்ரேஞ்சர் ஆல்தியா:

ஆல்தியாவை ஒரு ஸ்ட்ரேஞ்சராக அணுகும் போது அவளது சைஸ் சொல்லியும் அவளின் கால்களை வர்ணிப்பவன் காதலிக்க ஆரம்பித்ததும் குட்டைப் பாவடையை கொஞ்சம் நீளமாக போட்டுக் கொள்ள வேண்டும் என்கிறான்.

அப்படியானால் யாரென்று முன்பின் அறிமுகமில்லாத ஒரு பெண்ணை எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாமா?

மார்டன் கேர்ள் :

மார்டன் கேர்ள் :

மார்டனான உடையணிந்து ஒபன் மைண்டட்டாக பேசும் பெண் அதுவும் தனியாக வாழும் ஒரு பெண்ணை ஃப்லர்ட் செய்யலாம் என்று நினைத்தவன், என் வொய்ப் கொஞ்சம் ட்ரடிஷனல், எனக்கு டீன் ஏஜ்ல ஒரு பொண்ணு இருக்கா என்று பம்முகிறான்.

உன் காதலி,மனைவி,மகள், அக்கா, தங்கை, அம்மா இன்னொருவனுக்கு ஸ்ட்ரேஞ்சர் என்று எப்போது புரியும்?

கல்யாணத்துக்கு ஊர்ல இருக்குற பொண்ணு :

கல்யாணத்துக்கு ஊர்ல இருக்குற பொண்ணு :

உங்களுக்கு மட்டும் கல்யாணம் பண்ண ஊர்ல இருந்து ஒரு பொண்ணு வேணும் நான் மட்டும் சிட்டில இருக்குற பொண்ண அதுவும் ஏற்கனவே கல்யாணமாகி குழந்தயிருக்குற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கணுமா என்று வியாக்கியானம் பேசத்தெரிந்தவன் தான் அதே பெண்ணிடம் ஐ ம் இன் லவ் வித் யூ என்கிறான்.

இங்கே ஆல்தியாவை அடைய நினைத்தவனுக்கு காதல் ஒர் வழி அவ்வளவு தான்.

யாரை வேண்டுமானாலும் காதலித்துக்கொள் ஆனால் திருமணம் மட்டும் ஊரில் உள்ள பெண்ணாய் பார்த்து செய்து கொள் என்கிறீர்களா?

தவறுக்கு யார் காரணம் ? :

தவறுக்கு யார் காரணம் ? :

தவறு செய்த மனைவியை மன்னித்துவிட்டேன். என் அக்கா தங்கையென்றால் மன்னிக்க மாட்டேனா என்கிறான் ஒருவன்.

மனைவியை மன்னிக்கும் அதே பெரிய மனுஷன் தன்னுடைய தவறை உணர்ந்து திருந்தியிருக்கலாமே?? மனைவியின் தவறுக்கு தானும் ஒரு காரணம் என்று ஏன் புரியவில்லை?

துப்பாக்கி தோட்டா :

துப்பாக்கி தோட்டா :

மனைவி உடன் இருக்கும் போதே ஒரு ஆண் தன் காதலியிடம் போனில் பேசலாம், காபி சாப்பிட கூப்பிடலாம், உதவி செய்யலாம்... இதே அந்த மனைவி செய்தால் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்திடும்.

திருமணத்திற்கு பிறகு அஃப்பேர் வைத்துக்கொள்ளும் உரிமை ஆண்களுக்கு மட்டும் உண்டா என்ன? தவறென்றால் இருவருக்கும் தானே ???

உறவுச் சிக்கல் :

உறவுச் சிக்கல் :

கணவனை நாய் மாதிரி என்றும் கரெக்டா பிஸ்கெட் போடணும் என்றும் மனைவி பேசுவதாய் ஒரு சீன் வருகிறது. இப்படி திருமண பந்தத்தை கீழ்த்தரமாக காட்டியிருப்பது ஏன்? இதன்மூலமாக என்ன மகோன்னதனமான கருத்தை சொல்ல நினைக்கிறீர்கள்?

கணவன் கொஞ்சம் சுதந்திரம் கொடுத்தால் அவள் தன் கணவனை நாயாகத்தான் பார்ப்பாள் என்று நீங்கள் சொல்வது தான் ஆண்பெண் உறவுச் சிக்கல் பற்றியதா?

கேரக்டர் லெஸ் :

கேரக்டர் லெஸ் :

நான் கேன்னு தெரிஞ்சா வீட்ல செத்துருவாங்க என்று கணவன் சொல்லும் போது, நம்ம பிரிஞ்சிடலாம். நீ நல்லவன் வேணும்னா என்னோட கேரக்டர தப்பா சொல்லிக்கோ என்று சொல்கிறாள். காரணம் அவளுக்கு ஸ்ட்ராங் வுமன் என்ற முகமுடி இருப்பதால்.

ஒரு பெண் தைரியமானவள் என்றால் பிரச்சனையை அணுகும் விதம் அதனை கையாளும் விதம் பற்றியதாகத்தானே இருக்க வேண்டும்.

கேரக்டர் லெஸ் என்று சொல்லச் சொல்வது என்ன நியாயம்?

முன்னாள் காதலி :

முன்னாள் காதலி :

டீக்கடை உரையாடல் ஒன்றில், நாயகனிடம் ஒருவன், பாஸ் இது என்னோட எக்ஸ் கேர்ள் பிரண்ட் நம்பர்... நல்லா டார்ச்சர் பண்ணுங்க என்று சொல்கிறான். அருகிலிருப்பவன் எனக்கும் அந்த நம்பர் கிடைக்குமா என்று கேட்கிறான்

இது என்ன மாதிரியான கீழ்த்தரமான புத்தி?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Can Men answer for these questions?

Can Men answer for these questions?
Subscribe Newsletter