இந்த ஒரு விஷயம் தான், மனைவி உங்களை அதிகம் ஏமாற்ற தூண்டுகிறது என தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இந்த உலகில் ஆண்கள் தான் அதிகம் உறவில் ஏமாற்றுகிறார்கள், ஆணாதிக்க உலகம் அல்லவா இது என ஆண்களே கூட கூறுவார்கள். ஆண்கள், பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள் என்ற கூற்று காலம், காலமாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால், "Illiciten Counters" என்பவர்கள் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் வெளியான ஆய்வறிக்கை கூறும் தகவல்களில் பெண்கள் தான் அதிகம் ஏமாற்றும் குணம் கொண்டிருக்கிறார்கள் என்றும். அதற்கு ஒரே ஒரு காரணம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கூறி இருக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன காரணம்?

என்ன காரணம்?

பெண்கள் துணையை அதிகம் ஏமாற்ற காரணமாக இருப்பது அவர்களுடைய பெற்றோர்கள் தான் என ஆய்வின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் தாய் அல்லது தந்தை உறவில் ஏமாற்றும் குணம் கொண்டிருக்கையில் அது அந்த பெண்ணின் குணாதிசயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக அவர் அவரது பெற்றோர் வழிமுறையை பின்பற்ற துவங்குகிறார்கள்.

சதவிகிதம்!

சதவிகிதம்!

இந்த ஆய்வில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் கலந்துக் கொண்டனர். இதில் ஏமாற்றும் குணம் கொண்ட பெண்களில் 71% பேரின் தாய் ஏமாற்றும் குணம் கொண்டிருந்ததாக அறியப்பட்டது. அதேபோல, ஏமாற்றும் ஆண்களில் 45% பேரின் தந்தை ஏமாற்றும் குணம் கொண்டிருந்ததும் அறியப்பட்டது.

வரலாறு / மரபணு!

வரலாறு / மரபணு!

நல்ல குணங்கள் மட்டுமல்ல, தீய குணங்களும் கூட மரபணு, மற்றும் குடும்ப வரலாறு மூலமாக ஒருவரை பின்தொடர்கிறது என்பது இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

புள்ளி விபரம் #1

புள்ளி விபரம் #1

இந்த ஆய்வில் கலந்து கொண்ட பெண்களில் 66% பேர் தங்கள் தாய் ஏமாற்றும் குணம் கொண்டிருந்ததை தங்களுக்கான ஒரு அனுமதியாக பார்த்ததாக கூறியிருக்கின்றனர்.

புள்ளி விபரம் #2

புள்ளி விபரம் #2

தங்கள் தந்தை உறவில் ஏமாற்றுவதை கண்ட / அறிந்த ஆண்களில் 86% பேர் தவறான உறவில் ஈடுபடுவதை தவிர்பதாக கூறுகின்றனர். மேலும், அவர்களது தந்தையையும், தகாத உறவில் ஈடுபடுவதை தவிர்க்க கூறுகின்றனர்.

கருத்து!

கருத்து!

இது ஒரு சர்வதேச ஆய்வாக இருப்பினும். ஒருவரது மரபணு, குடும்ப வரலாறு ஒருவரின் மீது தாக்கத்தை உண்டாக்கலாம் என்ற போதிலும் கூட, ஒருவர் தனது மனவலிமையை அதிகரித்துக் கொண்டால் உறவுகளில் இதுபோன்ற தவறுகள் எழாமலும், தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த முன் உதாரணமாகவும் வாழ்ந்து காட்டலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This is the Single Thing Makes Your Wife to Cheat on You

This is the Single Thing Makes Your Wife to Cheat on You
Please Wait while comments are loading...
Subscribe Newsletter