Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
கல்யாணத்துக்கு முன்ன இந்த 10 விஷயத்த முதல்ல கத்துக்குங்க - இது பெண்கள் வாய்ஸ்!
திருமணம் எனும் ஆயிரம் காலத்து பயிரை அவ்வளவு எளிதாக அறுவடை செய்துவிட முடியாது. விவசாயிக்க மட்டும் தான் நெல்மணிகளின் அருமையும், மதிப்பும் தெரியும். அதேப் போல, திருமணம் செய்தவனுக்கு தான் இல்வாழ்க்கையை சண்டை சச்சரவு இன்றி நகர்த்துவது எவ்வளவு கடினம் என தெரியும்.
ஆணும், பெண்ணும் மட்டும் இல்லற பந்தத்தில் இணைவது தான் இல்வாழ்க்கை என நினைத்துவிட வேண்டாம். கணவன் மனைவி ஓர் வீடு என்றால், அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் உறவினர்கள் எனும் காம்பவுண்ட் சுவரை வலுவாக வைத்துக் கொள்வதும் அவசியம்.
இதையும் படிங்க: ஆண்களை குஷிப்படுத்தும் "இல்லற" விஷயங்கள்!!
எனவே, திருமணத்திற்கு முன்னர் உடல் ரீதியாக தயார் ஆவதற்கு முன்னர், மன ரீதியாக நீங்கள் எப்படி தயாராக வேண்டும் என தெரிந்துக் கொள்ளுங்கள்...

காதுக் கொடுத்து கேட்க வேண்டும்!
பெண்கள் நிறைய பேசுவார்கள். ஊருக்கு போய் வந்ததை கூட, மகாபாரதம் அளவிற்கு நீட்டி கூறும் குணம் பெண்களுக்கு இருக்கிறது. இது அவர்களது இயல்பு.
நீண்ட நேரம் ஒரே விஷயத்தை உட்கார்ந்து கேட்கும் பண்பு ஆண்களிடம் அறவே கிடையாது. ஆயினும், நீங்கள் கேட்க தான் வேண்டும். கேட்க பழக தான் வேண்டும்.

மொபலை நோண்ட வேண்டாம்!
உங்கள் துணையிடம் இருக்கும் போது மொபைலை நோண்டாமல் இருக்க வேண்டும். நீங்கள் அவர் மீது தான் கவனம் செலுத்த வேண்டும். மொபைல் நோண்டுவது கவன சிதறலை உண்டாக்கும் என்பதற்காக அல்ல.
அவர் அருகில் இருக்கும் போதும் நீங்கள் மொபோலை நோண்டிக் கொண்டிருந்தால் வேண்டாத சந்தேகங்கள் அவர்களது மூளைக்கும் கசியும், பிறகு சண்டை சச்சரவுகள் பிறக்கும். இதெல்லாம் தேவையா??

திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்!
நீங்கள் பிறந்ததில் இருந்து, உங்களது எதிர்கால திட்டங்கள் என்னென்ன, எதை எல்லாம் முயற்சி செய்தீர்கள், முயற்சி செய்யலாம் என எண்ணி கைவிட்டீர்கள் என ஒன்று விடாமல் கூறிவிட வேண்டும்.
பப்ளிக் லைபிரரி போல நீங்கள் ஒரு திறந்த புத்தகமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!
பெண்கள் நிறைய விஷயங்களை கூறுவார்கள். அதே போல கூறிய அனைத்தையும் (நீங்கள் கூறியதையும் சேர்த்து..) நினைவில் வைத்துக் கொள்வார்கள்.
எனவே, அவர்கள் கூறியது, நீங்கள் கூறியது என சின்ன சின்ன விஷயமாக இருப்பினும் கூட அதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நினைவுகளை பரிசளியுங்கள்!
ஒரு நாள் உங்கள் மனைவி ஓர் அழகான உடை உடுத்தினால் அதை பாராட்டுவீர்கள். அத்துடன் மட்டுமில்லாமல். ஓரிரு வாரங்கள் கழித்து, ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போதோ, படத்தில், வெளி இடங்களில் அதே வண்ணத்தில் வேறு பெண் உடை உடுத்தி சென்றாலோ, "அட, நீ அன்னிக்கி இதே மாதிரி ஒரு புடவை கட்டிருந்த-ல ரொம்ப அழகா இருந்துச்சு.." என அந்த நினைவுகளை பரிசளிக்க வேண்டும்.
நீங்கள் எப்போதுமே அவரை பற்றி தான் நினவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவருக்கு நினைவுப்படுத்திக் கொண்டே இருங்கள்.

காலை முதல் இரவு வரை!
காலை எழுந்ததும், காலை வணக்கத்துடன் ஓர் ஆசை முத்தமும், இரவு உறங்கும் முன் காதலுடன் ஓர் முத்தமும் இரண்டு வேளை அளித்து வந்தால், உங்கள் உறவு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்ப அதிர்ச்சி!
அவ்வப்போது இன்ப அதிர்ச்சி அளிக்க மறக்க வேண்டாம். பரிசுகளாக இருக்கலாம், அவர்களுக்கு பிடித்த விஷயாமாக இருக்கலாம், வெளியிடங்களுக்கு கூட்டி வருவதாக இருக்கலாம்.
ஏதேனும் ஒன்று செய்து மாதம் ஒரு முறையாவது அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வந்தால், உங்கள் இல்வாழ்க்கையில் அதிர்ச்சி இல்லாமல் பயணிக்கலாம்.

தொட்டாசிணுங்கி!
சில ஆண்களுக்கு தொட்டு பேசுவது என்றல் வியர்த்து கொட்டும். திருமணமான புதியதில் சற்று கூச்சம் இருந்தாலும், இந்த கூச்சம் நீண்ட நாள் இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

காவலன்!
ஓர் காவலனாக இருக்க வேண்டும். பயத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். உங்களுடன் இருக்கும் போது உங்கள் துணை இந்த உலகத்திலேயே பாதுகாப்பான இடத்தில் நாம் இருக்கிறோம் என உணர வேண்டும்.

படிப்பாளி!
ஓர் நல்ல படிப்பாளியாக இருக்க வேண்டும். புத்தகங்களை அல்ல, மக்களை. உறவுகளை, உங்கள் துணையின் மனதை என அனைத்தையும் படிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications
