Latest Updates
-
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத உலகின் சந்தோஷமான நாடு - இந்த நாட்ல பிறக்க கொடுத்த வைச்சிருக்கணும் -
சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க!
முகம் சிதையும் அளவு துப்பாக்கியால் சுட்ட கணவன், காதல் மாறாமல் காத்திருந்த மனைவி!
காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். ஆம், அது உண்மை தான் மனித உறவில் எல்லைக் கடந்த ஒன்று காதல் தான். நாம் மற்றவர்கள் மீது காட்டும் அன்புக்கு எல்லையும் கிடையாது, அதற்கு விலையும் கிடையாது.
அதனால் தான் உண்மையான காதலும், அன்பும் பல சமயங்களில் எளிதாக தூக்கிவிசப்பட்டுவிடுகின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் இது. கோனிக்கு நடந்த சம்பவம் இந்த உலகத்தில் யாருக்கும் நடந்துவிட கூடாது.
பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது மிகவம் கொடுமையான விஷயம். அதுவே, காதலித்து கரம்பிடித்து கணவனால் துன்புறுத்தப்படுவது அதைக் காட்டலும் கொடுமையான விஷயம்.

கோனி - தாமஸ் தம்பதியர்!
கோனி, அமெரிக்காவின் முதல் முக மாற்று சிகிச்சை செய்துக் கொண்ட நபர் என்ற வரலாற்று தடம் பதித்தவர். ஆனால், எதற்காக, ஏன் இவருக்கு முக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது என்பது ஒரு பெரிய துயர சம்பவம்.

துப்பாக்கி சூடு!
ஒரு நாள் வாக்குவாதத்தின் போது, வேறு நபருடன் பேசிக் கொண்டிருந்ததை சுட்டிக்காட்டி தான் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட கோனியை தாமஸ் கல்ப் துப்பாக்கியால் பலமுறை சுட்டார்.

சிதைந்து போன முகம்!
தாமஸ் சுட்டதில் கோனியின் மேல்வாய், மூக்கு, கண், தாடை போன்ற முக பகுதிகள் பலமாக சிதைந்து போயின. ஒரு பக்கம் கண்ணின் அருகே பெரிய குழி உண்டானது. முற்றிலும் கோனியின் முகம் தாமஸ் சுட்டதால் சிதைந்து போனது.

பதின் வயது காதல்!
15 வயதிலேயே கோனி மற்றும் தாமஸ் காதலித்தனர். இருவரும் வீட்டைவிட்டு ஓடி இணைந்த போது, வயது வெறும் 16. எல்லையில்லா காதல், ஆசைக் கணவன் என மிக சந்தோசமான வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்தார் கோனி!

தாமஸை விலக முடியாது!
தான் அறிந்த யாவும் தாமஸ் கற்றுக் கொடுத்தது. எனக்காய் எதுவும் தெரியாது. நான் எப்படி இந்த சம்பவத்திற்காக தாமஸை விலக முடியும் என கூறினார் கோனி. ஆனால், தங்கை போனியின் வற்புறுத்தல் காரணமாக தான் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து இட்டார்.

துன்புறுத்தல்!
தாமஸ் கோனியை மூளை சலவை செய்து வைத்திருந்தார் என்றும், அவரால் தான் துன்புறுத்தப்படுவதையே கோனி அறிந்திருக்க வில்லை என்றும் போனி கூறுகிறார். தாமஸ் மீது கோனி வைத்திருந்த காதலை இன்றளவும் குறையவில்லை.

மகளின் ஒற்றை சொல் மனதை மாற்றியது!
தன்னை சுட்டதற்காக 7 ஆண்டு சிறை வாசம் அனுபவித்து வந்த கணவரை கோனி ஒருபோதும் பார்க்க மறுத்தது இல்லை. அவராகவே சென்று பார்த்து வருவார். தன் மகள் காதலித்து வந்த நபர் அடிக்கடி சண்டை போடுவதால் அவனை விலகிவிடு என கோனி எச்சரித்துள்ளார்.
மகளோ, "உன் முகத்தை சிதைத்த கணவனை நீ இன்றும் விலகாத போது, இந்த சண்டைக்காக நான் ஏன் காதலனை விலக வேண்டும்" என கேட்ட கேள்வி தான், விவாகரத்து வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தை கோனி மனதில் உண்டாக்கியது.

முக மாற்று சிகிச்சை!
2004-ம் ஆண்டு இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது, கோனிக்கு முக மாற்று அறுவை சிகிச்சை நடந்த ஆண்டு 2010. தாமஸ் விடுதலை ஆன ஆண்டு 2011.

தாமஸ் கருத்து!
நான் கோனியை உண்மையாக நேசித்தேன். அந்த சம்பவம் ஒரு விபத்து. நீங்கள் அனைவரும் கூறும் அளவிற்கு நான் ஒரு மிருகம் அல்ல. நாங்கள் இருவரும் நேசித்தது உண்மை. எங்கள் காதல் பற்றி ஊடகம் மற்றும் மக்களுக்கு என்ன தெரியும் என தாமஸ் கூறியுள்ளார்.
25 வருட திருமண வாழ்க்கை விவாகரத்து பெற்று முடிவடைந்தது. கடுமையான வார்த்தைகளில் திட்டினாலே சண்டையிட்டு விவாகரத்து வாங்கும் இந்த காலப்போக்கில், தன்னை முழுவதுமாக சிதைத்த ஒரு நபரை விவாகரத்து செய்ய முடியாது எனவும், அவரை இன்றளவும் முதல்நாள் கொண்ட நேசத்தோடு தான் பார்க்கிறேன் என்றும் ஒரு பெண் கூறுவது, உண்மையான காதலின் ஆழத்தை காட்டுகிறது.



Click it and Unblock the Notifications
