உங்கள் துணையை தவறான உறவில் இணையாமல் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய 7 செயல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நமக்கு தினமும் கிடைத்து வந்த ஒன்று கிடைக்காமல் போனாலோ, அனைவருக்கும் கிடைக்கும் ஒன்று நமக்கு மட்டும் கிடைக்காமல் போனாலோ தான் நாம் அதை அடைய, பெற என்ன வேண்டுமானாலும் செய்ய துணிவோம். இது இல்லற உறவுகளுக்கும் பொருந்தும். முக்கியமாக கணவன் - மனைவி உறவுகளில்.

Seven Ways To Stop Your Partner From Cheating

கணவன் அல்லது மனைவி தங்கள் துணையை விட்டு வேறு நபரை நாட எது காரணமாக இருக்கிறது? என்ற கேள்விக்கு ஒரே பதில், கிடைக்காமல் போன ஏதோ ஒன்று தான். அந்த "ஒரு" விஷயம் ஒவ்வொருவரின் வாழ்விலும் வேறுபடலாம். இது நடக்காமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை என்னென்ன என்பது பற்றி இங்கு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயல் #1

செயல் #1

தெளிவான, ஒளிவுமறைவு இல்லாத கம்யூனிகேஷன் இருக்க வேண்டும். தெளிவாக பேச வேண்டும், உண்மையை பேச வேண்டும். ஒருவருக்கு ஒருவர் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்.

செயல் #2

செயல் #2

பேரார்வம் குறைய கூடாது. உங்கள் துணை மீது ஆர்வம் குறைந்து இருக்காதீர்கள். ஆசையை வெளிப்படுத்துதல், கொஞ்சுதல், விளையாட்டாக நடந்துக் கொள்வது என உங்கள் துணை மீதான பேரார்வத்தை வெளிப்படுத்த மறக்க வேண்டாம், மறுக்க வேண்டாம்.

செயல் #3

செயல் #3

உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். அது தான் உங்கள் மீதான ஆர்வம் உங்கள் துணைக்கு குறைந்து போகாமல் இருக்க செய்யும். அவரை நகைக்க வையுங்கள். குஷியாக, மகிழ்ச்சியாக இருக்க செய்யுங்கள். சண்டையும் அவசியம் தான். ஆனால், அதுவே தொடர் கதையாக ஆகிவிட கூடாது.

செயல் #4

செயல் #4

உடலுறவு என்பது தேவையானது தான். ஆனால் துணையாக இருந்தாலும் விருப்பதுடன் இணைவது தான் இனிமை. சரியான நேரங்களில் தவறவிடுவது மிகப்பெரிய தவறு என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

செயல் #5

செயல் #5

உணர்வுகளை வெளிப்படுத்த தயங்க வேண்டாம். அழுக தோன்றினால் அழுதுவிடுங்கள். கோபத்தை கொட்டுவது போல, மகிழ்ச்சி, அழுகை என அனைத்தையும் வெளிப்படியாக காட்டுங்கள். இது தான் உங்கள் இருவர் மத்தியிலான நெருக்கத்தை அதிகப்படுத்தும் கருவி.

செயல் #6

செயல் #6

நேரம் பங்கிட்டு கொள்ள மறக்க வேண்டாம். நேரடியாக அருகாமையில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. தொலைபேசியில், சமூக தளங்களில் என நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருடன் செலவு செய்ய மறக்க வேண்டாம்.

செயல் #7

செயல் #7

எந்த ஒரு செயலாக இருப்பினும் அதை தைரியமாக செய்யுங்கள். வேலையாக இருந்தாலும் சரி, இல்லறமாக இருந்தாலும் சரி, தைரியம் தான் உங்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும்.

இந்த 7 விஷயங்களை நீங்கள் சரியாக, சீராக கடைபிடித்து வந்தால் உங்கள் இல்லறம் என்றும் நல்லறமாக சிறக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Ways To Stop Your Partner From Cheating

Seven Ways To Stop Your Partner From Cheating
Story first published: Tuesday, December 13, 2016, 14:00 [IST]
Subscribe Newsletter