Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
சேதுபதி படத்துல இதெல்லா நீங்க கவனிச்சிங்களா?
ஒரு வடிவேலு காமெடியில் இசை எங்க இருக்கு என்பதற்கு, இதோ உங்ககிட்ட இருக்கு, அவர்ட்ட ஒருக்கு, எல்லார் கிட்டயும் இருக்கு என்று கூறுவார். அப்படி தான் உங்கள் உறவை மேம்படுத்திக் கொள்வதற்கான குறிப்புகள், ஆலோசனைகள் உங்களை சுற்றி நடக்கும் சம்பவங்களிலேயே இருக்கிறது.
மாலை நேரத்து மயக்கம் படத்துல இதெல்லா நீங்க கவனிச்சிங்களா?
உங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரர், அலுவலக தோழர், ஏன் நீங்கள் பார்க்கும் திரைப்படங்களிலும் கூட உங்கள் உறவை மேம்படுத்திக் கொள்ள அறிவுரைகள் கூறப்படுகின்றன. என்ன கொஞ்சம் உற்று நோக்க வேண்டும். அதை நீங்கள் சரியாக செய்தாலே போதுமானது.
தங்கமகன் படத்துல இதெல்லாம் நீங்க கவனிச்சிங்களா???
இந்த வகையில் சமீபத்தில் வெளியான 'சேதுபதி' திரைப்படத்தில் இருந்து காணப்படும் உறவுகள் சார்ந்த டிப்ஸ் பற்றி இனிக் காண்போம்...

நண்பனாக இருங்கள்
குழந்தைகளுடன் ஓர் நண்பனை போல பெற்றோர் பழக வேண்டும், முக்கியமாக தந்தைகள். இந்த தலைமுறை குழந்தைகள் எதிர்பார்ப்பதும் அதை தான். இல்லையேல் அவர்களும் அவர்களது பிரச்சனை மற்றும் தேவைகளை கூற மாட்டார்கள், நீங்களும் அறிந்துக் கொள்ள முடியாது.

தைரியம் புகட்டுங்கள்
ஓர் தந்தையாக உங்கள் குழந்தைக்கு நீங்கள் தான் தைரியம் ஊட்ட வேண்டும். எதற்கெடுத்தாலும் முடியாது, கடினம் என்று கூறுவதை தவிர்த்து. எப்படி தயார் செய்துக் கொள்ள வேண்டும், துணிவுடன் இருக்க வேண்டும் என கற்பிக்க வேண்டும்.

மனைவி புரிந்துக் கொள்ள வேண்டும்
கணவன் வேலை காரணமாக மன அழுத்தம் அல்லது குழப்பமான மனநிலையில் இருக்கும் போது மனைவி கணவனை புரிந்துக் கொண்டு நடந்துக் கொள்ள வேண்டும். இதில் சரியாக இருந்தாலே எந்த சண்டையும் குடும்பத்தில் ஏற்படாது.

வேலை-குடும்பம்
அதே போல கணவனும், குடும்பம், வேலையை பிரித்து பார்க்கும் மனோபாவம் கொண்டிருக்க வேண்டும். வேலையில் உள்ள கோபத்தை வீட்டில் காண்பிப்பதை குறைத்துக் கொண்டாலே, ஏராளமான மனஸ்தாபங்களை ஏற்படாமல் தடுத்துவிடலாம்.

காதல்
வேலைக்கு மத்தியில் உங்கள் மனைவிக்கு கால் செய்யுங்கள், நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதலிக்க மறக்க வேண்டாம். வீட்டிற்கு சென்ற பிறகு தான் அன்பு செலுத்த வேண்டும் என்றில்லை. இடைவேளையில் பத்து நொடிகளில் கூட காதலிக்கலாம்.

குழந்தைகளுடன் குதூகலம்
குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க மறக்க வேண்டாம். நீங்கள் கோடிகளில் தொழில் செய்துக் கொண்டிருந்தாலும் சரி, தள்ளு வண்டி வியாபாரியாக இருந்தாலும் சரி, ஓர் தந்தையாக உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவழியுங்கள்.

ஹீரோ
வெள்ளை, கருப்பு, குண்டு, ஒல்லி என எப்படி இருந்தளும், நீங்கள் தான் உங்கள் குழந்தைகளின் முதல் ஹீரோ என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே, அவர்களிடம் கோபத்தை காட்டிலும், அதிகம் அன்பு செலுத்துங்கள். உங்கள் குழந்தை முன்னர் ஓர் சூப்பர் ஹீரோ ஆகிவிடுவீர்கள்.

கவனம்
பிரச்சனைகளுக்கு தீர்வுக்காணும் போது ஆண்கள் எப்போதும் சற்று எரிந்து தான் விழுவார்கள். அந்த தருணத்தில் அவனிடம் அன்பை எதிர்பார்ப்பது கடினம் தான். எனவே, இதில் கவனமாக இருங்கள்.

மற்றவர் பேச்சை கேட்க வேண்டாம்
கணவன், மனைவிக்கு மத்தியில் எழும் சின்ன சின்ன பிரச்சனைகள் அதுவாக சரியாகிவிடும். இதன் இடையில் மூன்றாம் நபர்கள், ஏன் பெற்ற அம்மாவின் பேச்சை கேட்டு கூட சண்டையை பெரிதுபடுத்திவிடாதீர்கள்.



Click it and Unblock the Notifications