தன் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த காரணத்தை போட்டுடைத்த அமலா பால்!

Posted By:
Subscribe to Boldsky

சமீப காலமாக நட்சத்திர பிரபலங்களுக்கு மத்தியிலான திருமண பந்தம் கருத்து வேறுபாடு என்ற ஒற்றை காரணத்தை சுட்டிக்காட்டி விவாகரத்து ஆகிவருகிறது. இதில், சில மாதங்களுக்கு முன்னர் தென்னிந்தியா நட்சத்திர தம்பதிகளான அமலா பால் - இயக்குனர் விஜயும் விவாகரத்து பெற்றனர்.

இதற்கு அவர் தான் காரணம், இவர் தான் காரணம் என்று பலர் கூறி செய்திகள் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஒரு இளம் நடிகரின் பெயர் விவாகரத்து வாங்கி தரும் வழக்கறிஞர் போல சித்திரிக்கப்பட்டது.

ஆனால், உண்மையில் தனது திருமண வாழ்க்கை முற்று பெற்றதற்கான காரணத்தை அமலா பால் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமலா கூறிய காரணம்!

அமலா கூறிய காரணம்!

18 வயதில் நடிக்க வந்தேன். 23 வயதில் காதலித்து திருமணம் செய்துக் கொண்டேன். 24 வயதில் திருமண வாழ்க்கை முற்று பெற்றுவிட்டது. இதற்கெல்லாம் காரணம் நான் சிறு வயதிலேயே இல்லறத்தில் இணைந்தது தான்.

எனக்கு அறிவுரை கூற சரியான ஆட்கள் இல்லாமல் போய்விட்டனர். இதனால் தவறான முடிவுகள் எடுத்துவிட்டேன். எனது தவறுகளில் இருந்து நான் நிறைய கற்றுகொண்டேன் என்கிறார் அமலா பால்.

நிறையவே அழுதேன்!

நிறையவே அழுதேன்!

நான் இன்னும் விஜயை காதலிக்கிறேன். விவாகரத்துக்கு பிறகு நான் நிறைய முறை அழுதுள்ளேன். விஜய் எப்போதுமே எனது வாழ்க்கையில் முக்கியமான நபர். நாங்கள் பிரிந்திருந்தாலும் கூட, எங்களது காதல் உண்மையானது, என அமலா மேலும் கூறியுள்ளார்.

முதிர்ச்சி அவசியம்!

முதிர்ச்சி அவசியம்!

இன்றைய சூழலில் பல தம்பதியர் விவாகரத்து கோருவதற்கு காரணம் கருத்து வேறுபாடு என்று இருந்தாலும். அதன் பின்னணியில் இருப்பது வேலை - இல்லறம் என்ற இரண்டை சமநிலையில் கொண்டு செல்ல முடியாமல் போவதால் தான்.

வேலையா? இல்லறமா? பணமா? காதலா? என்ற கேள்விகள் எழும் போது, இன்று பலரும் வேலையும், பணமும் தான் முக்கியம் என்ற நோக்கத்திற்கு வந்திவிடுகின்றனர்.

ஈகோ!

ஈகோ!

நான் ஏன் நான் செய்யும் வேலையை விட வேண்டும் என பெண்கள் கேட்கும் கேள்வி நியாயம் தான். நமது சமூகத்தில் மனைவிக்கு நல்ல வேலை, வேறு ஊரில் கிடைத்திருக்கிறது என கூறி, தனது வேலையை விட்டு, இடம் மாற்றம் செய்துக்கொள்ள துணிந்த ஆண்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

ஈகோ என்ற பூதத்தின் பிடியில் சிக்கி, இல்லறத்தையும், மனைவியையும் இழப்பது தான் கடைசியில் முடிவாகிவிடுகிறது.

தீர்வு என்ன?

தீர்வு என்ன?

இதற்கான ஒரே தீர்வு, நீங்கள் காதலிக்கும் பெண்ணின் மீது எடுத்துக் கொள்ளும் அதே அளவு அக்கறையை, அவரது வேலை, வாழ்க்கை, எதிர்காலம் மற்றும் முன்னேற்றம் மீதும் எடுத்துக் கொள்ளுங்கள். ஈகோ வளராமல், காதல் மட்டுமே வளரும். இல்லறம் சிறக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Marrying at the WRONG age was the WRONG decision I made.

Marrying at the WRONG age was the WRONG decision I made, Says Amala Paul.
Story first published: Wednesday, November 23, 2016, 14:15 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter