Latest Updates
-
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத உலகின் சந்தோஷமான நாடு - இந்த நாட்ல பிறக்க கொடுத்த வைச்சிருக்கணும் -
சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க!
உங்க உறவுல இன்பம் ஏகபோகமா பெருக, தினமும் மறக்காம இந்த 5 விஷயத்த செய்யுங்க!
எல்லாருமே சண்டை சச்சரவுகள் இல்லாத இல்லறத்தை தான் விரும்புகின்றனர். ஆனால், அது அமைகிறதா என்பது அவரவர் நடத்தையில் தான் இருக்கிறது. அதற்கென சண்டை சச்சரவே இல்லாமல் இருந்தாலும் அலுப்புத்தட்ட ஆரம்பித்துவிடும்.
சண்டை, சச்சரவுகள் உப்பு போன்றது. குறைவாக இருந்தால் இல்வாழ்க்கை எனும் உணவு ருசிக்கும். அளவுக்கு மீறினால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். உங்கள் உறவிலும் இன்பம் ஏகபோகமாக பெருக வேண்டும் என்றால் தினமும் இந்த 5 விஷயங்களை மறக்காமல் செய்யுங்கள்...

ஒப்பிக்க தவற வேண்டாம்!
தினமும் உங்கள் வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயங்களையும் ஒன்று விடாமல் அனைத்தையும் உள்ளதை / நடந்ததை மறக்காமல் உங்கள் துணையிடம் கூறும் பழக்கத்தை பின்பற்றுங்கள். இவ்வாறு செய்யும் தம்பதிகளின் உறவு இன்பமையமாக அமைகிறதாம்.

நேரம் தவறாமை!
எவ்வளவு பிஸியாக இருந்தாலும் உங்கள் துணையுடன் நேரம் செலவழிக்க தவற வேண்டாம். வெளியூர்களில் இருந்தாலும் கூட, தொலைபேசி மூலமாக தொடர்புக் கொண்டு அவருடன் நேரம் செலவழிக்க வேண்டும்.

பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள்!
சிலர் ஓரிரு நாள் தன் துணை வெளியூர் சென்றால் கூட ஏதோ உலகமே இருள் சூழ்ந்து போவது போல உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். இயல்பாக நடந்துக் கொள்ளுங்கள். அவரவர் வழியில் செல்லும் போது அவர்களுக்கான பாதையிலும் செல்ல அனுமதியுங்கள்.

பணிவு!
அதீத அக்கறை என்ற பெயரில் பெண்களும், ஆண் என்ற அதிகாரம் கொண்டு ஆண்களும் துணையின் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்க வேண்டாம். பணிவாக நடந்துக் கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் முதலில் மனிதராக மதித்து மரியாதை அளியுங்கள்.

பாராட்டு!
சின்ன, சின்ன விஷயங்களிலும் பாராட்ட மறக்க வேண்டாம். அலுவல் வேலையாக இருந்தாலும் சரி, வீட்டு வேலையாக இருந்தாலும் சரி, ஏதேனும் ஒன்றை சிறப்பாக செய்தால் அதை பாராட்ட மறக்க வேண்டாம்.

இன்பம் பொங்கும் வெண்ணிலா....
இந்த ஐந்து விஷயங்களை ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரே மாதிரி எந்த குளறுபடியும் நடக்காமல் ஒழுங்காக செய்து வந்தால் உங்கள் வாழ்க்கை முழுவதிலும் "இன்பம் பொங்கும் வெண்ணிலா..." என்ற பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்!



Click it and Unblock the Notifications
