2016-ல் விவாகரத்து செய்துக் கொண்ட திரை பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இந்த தலைமுறையில் விவாகரத்து என்பது மிகவும் அதிகரித்து வருகிறது. கருத்து வேறுபாடு என்ற ஒற்றை வார்த்தை கொண்டு திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளும் நடைமுறை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்கள் தங்கள் திருமண பந்தத்தை உதறி தள்ளியுள்ளனர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமலா பால் - விஜய்!

அமலா பால் - விஜய்!

தெய்வ திருமகள், தலைவா படங்களில் விஜயின் இயக்கத்தில் நடித்திருந்தார் அமலாபால். இருவரிடையே காதல் மலர, 2014 -ல் திருமணம் செய்துக் கொண்டனர். இரண்டே வருடத்தில் இருவரும் திருமண பந்தத்தை முறித்துக் கொண்டனர்.

ஃபர்ஹான் அக்தர் - அதுனா அக்தர்!

ஃபர்ஹான் அக்தர் - அதுனா அக்தர்!

இவர்களது 16 வருட இல்லற வாழ்க்கை, கடந்த பிப்ரவரி மாதம் முடிவுக்கு வந்தது.

ஜானி டெப் - அம்பர்!

ஜானி டெப் - அம்பர்!

கேப்டன் ஜேக் என்ற கதாபாத்திரம் மூலம் உலகின் சந்து, பொந்துகளில் இருந்த அனைவரயும் ஈர்த்தவர் ஜானி டெப். 2012-ல் இருந்து உறவில் இருந்து வரும் ஜானி டெப் - அம்பர் ஜோடி, கடந்த மே மாதம் தங்கள் பிரிவை அறிவித்தது.

நிகோல்லெட்டெ ஷெரிடன் - ஆரோன் !

நிகோல்லெட்டெ ஷெரிடன் - ஆரோன் !

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இணைந்த இந்த ஜோடி, ஒரு வருடம் கூட நிறைவடையாத தருணத்தில், கடந்த ஜூலையில் தங்கள் பிரிவை அறிவிதத்து.

ஜேம்ஸ் மெக்காவே - ஆன் மேரி டஃப்!

ஜேம்ஸ் மெக்காவே - ஆன் மேரி டஃப்!

எக்ஸ்-மென் வாத்தியார் ஜேம்ஸ் மெக்காவேவும் - ஆன் மேரி டஃப் 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்கள். பத்து வருடம் சந்தோசமாக வாழ்ந்து வந்த இந்த ஜோடி கடந்த மே மாதம் தங்கள் பிரிவை அறிவித்தது.

ட்ரூ பேரிமோர் - வில் கோப்ல்மென் !

ட்ரூ பேரிமோர் - வில் கோப்ல்மென் !

2011-ல் காதலில் விழுந்து, 2012-ல் உறவில் இணைந்த இந்த ஜோடி, கடந்த ஏப்ரல் 2-ம் தேடி தங்கள் பிரிவை அறிவித்தது.

சௌந்தர்யா - அஸ்வின்!

சௌந்தர்யா - அஸ்வின்!

சூப்பர்ஸ்டார் மகள் என்ற பெருமை கொண்டவர் அதையும் தாண்டி அனிமேஷன், தயாரிப்பு, இயக்கம் என பன்முகம் கொண்டவர் சௌந்தர்யா ரஜினி.

இவரும் அஸ்வினும் நான்கு வருட காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2010-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் ஆனது.

நேற்று திடீரென இவர் விவாகரத்து கோரியுள்ளது பலரையும் திகைக்க வைத்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrity Break-ups 2016

Celebrity Break-ups 2016, take a look on here.
Story first published: Saturday, September 17, 2016, 11:55 [IST]
Subscribe Newsletter