ஏன் 2016-ம் ஆண்டு யாரும் திருமணம் செய்யக் கூடாது? மகாமகம் பீதி!!!

Written By:
Subscribe to Boldsky

மகாமகம் பற்றிய சிறு பார்வை.....

ஒவ்வொரு முறையும் பிரம்மன் உறங்கும் போதும் உலகில் பிரளயம் ஏற்பட்டு, பெரும் அழிவு ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது. இதன் தொடர்ச்சியில் ஒருமுறை ஏற்பட்ட பிரளயத்தினால் தான் கலியுகம் தோன்றியது என்றும் கூறுகிறார்கள். கலியுகத்திற்கு முன்பு உயிர்கள் தோன்ற விதைகளும், அமுதமும் கொண்ட பானை ஒன்றை ஓர் குளத்தில் பிரம்மன் வைத்தான்.

அந்த பானையை வேடன் ரூபத்தில் வந்த சிவபெருமான் அம்பொன்றை எய்து உடைத்து உயிர்கள் பிறக்க வித்திட்டான். கும்பம் என்றால் பானை, கோணம் என்றால் உருக்குலைந்து என்று பொருள், இதனால் தான் கும்பகோணம் என்ற பெயர் வந்தது என்றும் கூறுகிறார்கள்.

இந்த கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடினால் பாவங்கள் கழியும் என ஐதீகம். ஒவ்வொரு வருடமும் மாசி மாத மகத்தின் போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வருகிறார்கள். இதே 12 வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் மகாமகத்தின் போது 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இங்கு வருகிறார்கள்.

வரும் 2016-ம் ஆண்டு மகாமகம் நடைப்பெறவுள்ளது. இந்த வருடத்தில் திருமணம் செய்தால் கேடு என்று கூறுகிறார்கள்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குருவும், சூரியனும்

குருவும், சூரியனும்

குருபகவானும், சூரிய பகவானும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நேருக்கு நேர் பார்க்கும் தருணம் தான் மகாமகம் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தின் போது சுபக் காரியங்கள் நடத்தக் கூடாது என்று ஓர் செய்தி பரவலாக தமிழகம் முழுதும் பரவி வருகிறது.

சுபமாக இருக்காது

சுபமாக இருக்காது

இந்த மகாமக வருடத்தில் திருமணம் செய்துக் கொண்டால், அந்த தம்பதிகளின் வாழ்க்கை சுபமாக இருக்காது என கூறி வருகிறார்கள். இதனால், வரும் வருடத்தில் திருமணம் செய்துக் கொள்ள காத்திருந்த மக்கள் இடையே பீதி கிளம்பியுள்ளது.

வதந்திகள்

வதந்திகள்

மாசி மாதம் மட்டுமின்றி, வரும் 2016-ம் வருடம் முழுவதுமே திருமணம் செய்துக் கொள்ள கூடாது என்றும் சிலர் வதந்திகள் பரப்பி வருகிறார்கள். சில வீட்டார்கள் மாசி மாதம் திருமண நிகழ்வுகள் நடத்துவதை நிறுத்தி, தை மாதத்தில் நடத்த திட்டமிடுகிறார்கள்.

சமூக ஆய்வாளர்கள் கருத்து

சமூக ஆய்வாளர்கள் கருத்து

இது குறித்து சமூக ஆய்வாளர்கள், கும்பகோணம் மகாமகம் தென்னகத்து "கும்ப மேளா" எனும் அளவில் பெரிதாக கொண்டாப்படுகிறது. இது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து பலதரப்பட்ட மக்கள் வந்து செல்லும் கொண்டாட்டமாக விளங்குகிறது. யாரோ வீண் வேலையாக பரப்பிய இந்த வதந்திகளை நம்ப வேண்டாம்" என கூறுகிறார்கள்.

இதற்கு முன்பு

இதற்கு முன்பு

இதற்கு முன்பு, 1992 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் கும்பகோணம் மகாமகம் நடைபெற்றது. அப்போது அனைவரும் திருமணம் செய்துக் கொண்டார்கள்,எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. திருமணங்கள் மட்டுமின்றி எல்லா சுபக் காரியங்களும் தான் நடைபெற்றன.

குருக்கள் கருத்து

குருக்கள் கருத்து

சாரங்கபாணி கோவில் மட்டுமின்றி, கும்பகோணத்தில் இருக்கும் அனைத்து கோவில்களிலும் மகாமகத்தின் போது கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. விழா ஏற்பாடு செய்தவுடன் கோவில்களில் கொடி ஏற்றி காப்பு கட்டப்படும். இதனால் இந்த நாட்களில் வேறு எந்த சுபக் காரியங்களும் நடந்தால் கவனம் சிதறும் என சாத்திரங்கள் கூறுகின்றன என கூறுகிறார்கள்.

நான்கு ராஜ வீதிகள்

நான்கு ராஜ வீதிகள்

கும்பகோணத்தை சுற்றியுள்ள நான்கு ராஜ வீதிகளிலும் மகாமகத்தின் போதான 12 நாட்களும் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடத்த கூடாது என கூறப்படுகிறது. இது கும்பகோணத்திற்கு மட்டும் தான் தமிழகத்திற்கு அல்ல. மற்றபடி யார் வேண்டுமானாலும் திருமணம் செய்துக் கொள்ளலாம். வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

கெட்டிமேளம் கொட்டட்டும்

கெட்டிமேளம் கொட்டட்டும்

இனி என்ன..., யாராவது திருமணம் செய்யக் கூடாது, சடங்கு, கேடு என்று வந்தால் நன்கு குமட்டில் குத்தி விரட்டுங்கள். அப்பறம் என்ன கெட்டிமேளம் கொட்டட்டும்!!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Should Not Get Married In Kumbakonam Magamagam Year

No one Should Get Married In Kumbakonam Magamagam Year. Kumbakonam people were shock about it.
Subscribe Newsletter