Latest Updates
-
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
தம்பதியினரின் இன்பமான வாழ்க்கைக்கு பின்னணியில் இருக்கும் அறிவியல் விவரங்கள்!!!
ஒவ்வொருவரும் அவர்களது துணையுடன் இன்பமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஆனால், சில சூழ்நிலைகளில் அவரவர் எடுக்கும் முடிவுகள் அவர்களது வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடுகிறது.
உங்க பொண்டாட்டி எப்பவும் சங்கடமாவே இருக்காங்களா? இதெல்லா நீங்க பண்ணுங்க எல்லா சரி ஆயிடும்!!
தம்பதிகளில், யார் இன்பாமாக வாழ்கின்றனர் என்று கண்டறிவது மிகவும் கடினம். இது மற்ற உறவுகளை போல வெளிப்படையானது அல்ல. வெளியில் புன்னகைக்கும் பலரது உறவுகள் புண்ணாகிக் கிடக்கும்.
இன்பமாக இருக்க தம்பதிகள் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்!!!
ஆயினும் அறிவியல் ரீதியாக சில விவரங்கள், இன்பான வாழ்கையை வாழும் தம்பதியர்கள் பற்றி "ரமணா" விஜயகாந்த் போல எடுத்துரைக்கிறது. அவை என்னென்னவென்று இனிக் காணலாம்....

எதிர்மறைப் பேச்சுக் குறைவு
எதற்கெடுத்தாலும் எதிர்மறையாக பேசுவது தான், இன்பத்தை சீர்குலைக்கும் கருவியாக செயல்படுகின்றது. இன்பமாக இருக்கும் தம்பதியர்கள் ஐந்தில் ஒருமுறை தான் எதிர்மறையாக பேசுகிறார்களாம்.

தம்பதியினருக்குள் நட்புறவு
பெரும்பாலும், நண்பர்கள் போல பழகும் தம்பதிகளுக்குள் சண்டைகளல் எழுவது குறைவாக இருக்கின்றது. எழுந்தாலும் சீக்கிரமாக சுமூகமாகிவிடுகின்றனர்..

நிறைய பேசுகின்றனர்
இன்பமாக வாழும் தம்பதியர்கள் தினமும் சேர்ந்து, ஒருவர் பற்றி ஒருவர், அன்றைய நாள், மற்றும் பொதுவான விஷயம் பற்றி நிறைய பேசுகிறார்கள்..

வாழ்த்துதல்
சின்ன, சின்ன விஷயமாக இருந்தால் கூட அதற்கு வாழ்த்துக் கூறுகின்றனர். சமையல் நன்றாக செய்தால், சமையல் நன்றாக இருக்கின்றது என்று கூறி அவர்களது துணையை மகிழ்விக்கின்றனர்.

உடலுறவு
தம்பதிகள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உடலுறவுக் கொள்கின்றனரோ, அந்த அளவு இன்பமாக வாழ்கின்றனர். சந்தோசமாக வாழும் தம்பதிகள், குறைந்தது வார இறுதியிலாவது உல்லாசமாக இருக்கிறார்களாம்.

பெருமை அடைவது
இன்பமாக வாழும் தம்பதிகள், தங்களது துணை எதிலாவது வென்றாலோ, மேன்மை அடைந்தாலோ மற்றொருவரும் அவர்களை குறித்து பெருமிதம் கொள்கிறார்கள்.

ஒற்றுமை
சமைப்பதில் இருந்து வெளியூர் செல்லும் வரை எங்கு சென்றாலும் ஒன்றாக இருப்பது, ஒன்றாக நேரத்தை செலவிடுவது தம்பதிகளுக்குள் சந்தோஷம் பெருக முக்கிய கருவியாக விளங்குகிறதாம்.

நக்கல், நையாண்டி
ஒருவரை இருவர் கேலி, கிண்டல் செய்துக் கொண்டு வாழும் தம்பதிகள் மிகவும் சந்தோசமாக அவர்களது வாழ்நாளை கழிக்கின்றனர். இதுப் போன்ற செயல்கள் அவர்களுக்கும் இருக்கும் கசப்பான விஷயங்களை மறந்து, மகிழ்வாக இருக்க உதவுகிறது.

குற்றம் குறைக் கூறுவது இல்லை
தவறு செய்வது மனித இயல்பு. இதை புரிந்துக் கொண்டு குற்றத்தைக் குத்திக் காட்டுவது கிடையாது.

சேமிப்பு
மகிழ்வாக வாழும் தம்பதிகள், பணத்தை அளவுக்கு அதிகமாக செலவழிக்காமல். பணம் சேமித்து வைக்கின்றனர்.



Click it and Unblock the Notifications
