Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
உறவின் நலன் கருதி உடனடியாக நிறுத்த வேண்டிய விஷயங்கள்!!!
உறவுகளில் பிரிவினை ஏற்பட மூன்றாவது நபர்களின் குறுக்கீடுகளை விட. அவ்வுறவில் பிணைந்திருக்கும் ஆண், பெண்ணின் சில அடமும், பிடிவாத குணமும், விட்டுக்கொடுக்காத செயல்களும் தான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
மூன்று முடிச்சு போடுவதற்கான நேரம் வந்துவிட்டது என எச்சரிக்கும் அறிகுறிகள்!!!
உறவில் இன்பம், துன்பம் அதிகரிப்பதற்கு அவரவர்கள் செய்யும் சில விஷயங்கள் தான் பெரும் பங்குவகிக்கிறது. கணவன் மனைவி உறவென்பது வாகனம் ஓட்டுவது போல. வாழ்க்கை அது போகும் சாலையை போல, சாலை நெளிவு சுளிவுகளுடனும், மேடு, பள்ளங்களுடனும் தான் இருக்கும்.
இந்தியாவில் உடலுறவுக் குறித்து வேறுப்பட்ட கருத்துகள் நிலவுவது ஏன்?
சாலைக்கு ஏற்ப கணவன், மனைவி சரியாக வளைந்து, நெளிந்து போனால் தான் பயணம் சுகமாக அமையும். இல்லையேல் ஆங்காங்கே வலிகள் ஏற்பட தான் செய்யும். எனவே, உறவின் நலன் கருதி தம்பதியர்கள் சில விஷயங்களை கைவிட வேண்டியது அவசியம்....

இறுதி எச்சரிக்கைகள்
உங்கள் துணை குற்றவாளியும் இல்லை, நீங்கள் நீதிபதியும் இல்லை. எனவே, அவர்கள் தெரியாமல் செய்யும் சில காரியங்களுக்கு உடனே, இறுதி எச்சரிக்கைகள் விடுப்பதை தவிருங்கள். அன்பாக கூறுங்கள், ஒருமுறைக்கு பல முறை கூட எடுத்து கூறுங்கள். எந்த தவறும் இல்லை.

உங்கள் வாழ்க்கை அவர் தான் என்ற எண்ணம் வேண்டும்
தம்பதி இருவருக்குள்ளும், அவரவர் துணை தான் அவர்களது வாழ்க்கை என்ற எண்ணம் எழும்புதல் வேண்டும். இந்த எண்ணம், பெரும்பாலான சண்டைகள் எழாமல் இருக்க உதவும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை ஏற்படுத்தும். உங்கள் துணைக்கு விட்டுக்கொடுக்காமல், வேறு யாருக்காக விட்டுக்கொடுத்து போவீர்கள்???

பொறாமை குணம் வேண்டாம்
சில தம்பதிகளுக்குள், சம்பளம், அறிவுத்திறன், அழகு போன்றவற்றில் கூட தங்களது துணையுடன் ஒப்பிட்டு பார்த்து பொறாமைப்படும் குணம் கொண்டிருப்பார்கள். பொறாமல் என்னும் ஆமை இல்லறதிற்குள் புகுந்தால், சந்தோசம் கழிந்துவிடும். எனவே, பொறாமையை கைவிடுங்கள்!!!

தவறுகளை பட்டியலிடாதீர்கள்
தவறு செய்யாத மனிதர்களே உலகில் இல்லை. எனவே, என்றோ செய்த தவறை, மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டிக்கொண்டே இருப்பது. உங்கள் மேல், உங்கள் துணைக்கு வெறுப்பு ஏற்பட ஆரம்பித்துவிடும். இது, சண்டையிலும், பிரிவிலும் முடிவு பெற நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

புரியாத புதிராக இருக்காதீர்கள்
ஓர் நல்ல உறவின் அடித்தளமே நல்ல புரிதல் தான். அது இன்றி இல்வாழ்க்கையில் இன்பம் நிலைக்காது. எனவே, கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் திறந்த புத்தகமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்குள் மட்டும்.

மகிழ்விக்க பழகுங்கள்
உங்கள் துணையை மகிழ்விக்க பழகுங்கள். உங்கள் சோகத்தை அவர்களிடம் அவர்களாக உணரும் வரை வெளிக்காட்டாதீர்கள். உண்மையான அன்பு ஓர் நொடியில் உங்கள் சோகத்தை புரிந்துக்கொள்ளும். பரிசுகள் கொடுத்து மகிழ்ச்சியடைய வையுங்கள். தங்கம், வைரம் தான் சிறந்த பரிசு அல்ல, பத்து ரூபாய்க்கு நீங்கள் வாங்கி தரும் மல்லிகையும், மாலையில் கணவனை மாணவி உபசரிப்பதைவிடவா பெரிய பரிசை நீங்கள் தந்துவிட முடியும்!!!



Click it and Unblock the Notifications
