Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
சனி-கேது உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் இடமாற்றங்கள் சுப மற்றும் அசுபமான கிரகச் சேர்க்கைகளை உருவாக்கி, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தற்போது சனி மற்றும் கேது ஆகிய கிரகங்கள் இணைந்து 'ஷடாஷ்டக யோகத்தை' உருவாக்கியுள்ளதாகவும், இந்த நிலை நவம்பர் 2026 இறுதி வரை நீடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கிரக அமைப்பானது சில ராசிக்காரர்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு இந்த ஷடாஷ்டக யோகம் மிகவும் நன்மை பயப்பதாக அமையும் என்றும், இதன் மூலம் அவர்கள் நவம்பர் வரை தொழில், வணிகம் மற்றும் நிதி விவகாரங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
'ஷடாஷ்டக யோகம்' மேஷ ராசிக்காரர்களுக்குச் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கலாம், தொழில் வளர்ச்சி வேகம் பெறலாம் மற்றும் பணியிடத்தில் பதவி உயரலாம். இந்த நேரத்தில், அவர்களின் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் உருவாகப்போகிறது. திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பொருளாதாரரீதியாகவும் இந்த நிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிதி நிலைமையும் மேம்படும்.
சிங்கிளாக இருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பொருத்தமான துணை கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் அனைத்து வகையான நன்மைகளையும் அடையும் நேரமிது. காதலில் இருப்பவர்களுக்கு இது ஒரு சாதகமான காலகட்டமாகும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு இந்த காலகட்டம் பொருத்தமானதாக இருக்கும்.
மிதுனம்
இந்த கிரக பெயர்ச்சியினால், மிதுன ராசிக்காரர்கள் பல்வேறு நிதி ஆதாயங்களை அடையக்கூடும். இது அவர்கள் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். இந்த காலகட்டத்தில் அவர்களின் லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். நீண்ட காலமாக அவர்கள் மனதில் இருந்த குழப்பம் இப்போது முடிவுக்கு வரும். கல்வித் துறையில், அவர்கள் நிறைய நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
வேலையில் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் சிறப்பான உறவை பராமரிக்கலாம். இது உங்கள் அவர்களின் லட்சியங்களை சிரமமின்றி அடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். பொருளாதரரீதியாகவும் இந்த காலகட்டம் அவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.
தனுசு
இந்த கிரக நிலை தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் முக்கியமான ஆசை ஒன்று இப்போது நிறைவேறும். வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களில் இந்த காலம் வெற்றிகரமானதாக இருக்கும். சமூகத்தில் அவர்களின் மரியாதை கணிசமாக அதிகரிக்கும். அவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் மேலதிகாரிகளுடன் சுமூகமான உறவை வளர்த்துக் கொள்ளலாம்.
நல்ல பேச்சு மற்றும் நடத்தை அவர்களின் உறவுகளை பலப்படுத்தும். வெளிநாடுகளுடன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபடுபவர்கள் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். மேலும் வருமானத்திற்காக பல்வேறு வருமான ஆதாரங்களைப் பெறலாம். மாணவர்களுக்கு, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக இது சரியான நேரமாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

