Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்..
கண்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்..
Fatty Liver Disease Symptoms In Tamil: நமது உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான மற்றும் பெரிய உறுப்பாகும். இந்த கல்லீரல் உண்ணும் உணவுகளில் இருந்து சத்துக்களை பிரித்தெடுக்கவும், நச்சுக்களை வடிகட்டி வெளியேற்றவும் உதவுகிறது. சமீப காலமாக இப்படிப்பட்ட கல்லீரலில் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் கொழுப்பு கல்லீரல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் இந்தியாவில் 38.6% க்கும் மேற்பட்ட பெரியவர்களிடம் இந்த நோய் காணப்படுகிறது. அதாவது, கிட்டத்தட்ட 10 பெரியவர்களில் 4 பேருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் உள்ளது.

இந்த கொழுப்பு கல்லீரல் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்தால் சரிசெய்யலாம். ஆனால் இந்த கொழுப்பு கல்லீரல் நோய் பெரும்பாலும் ஆபத்தான நிலையை அடையும் வரை வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டுவதில்லை. எனவே, அது ஒரு சாதாரண மனித உடலை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பது குறித்த உங்கள் விழிப்புணர்வை அதிகரிப்பது அவசியம்.
கொழுப்பு கல்லீரல் நோய் ஒருவருக்கு இருப்பின் அது குறிப்பிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும். முக்கியமாக கண்களில் இதன் அறிகுறிகள் தெரியக்கூடும். இப்போது கொழுப்பு கல்லீரல் நோய் இருந்தால் கண்களில் தெரியக்கூடிய சில அறிகுறிகளைக் காண்போம்.
1. மஞ்சள் நிற கண்கள்
கல்லீரல் செல்களில் கொழுப்பு சேர்ந்தால், கல்லீரலில் பிலிரூபின் அளவு அதிகரித்து, அதன் விளைவாக கண்கள் மஞ்சள் நிறமாக மாறும். பொதுவாக கண்கள் மஞ்சள் நிறமாவது மஞ்சள் காமாலை அல்லது கல்லீரல் செயலிழப்பு முற்றிய நிலையில் இருப்பதைக் குறிக்கலாம். எனவே உங்கள் கண்கள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
2. கண் வறட்சி
கண் வறட்சியுடன், கண்களில் எரிச்சலையும் சந்தித்தால், அது கல்லீரல் செயல்பாட்டு குறைபாட்டின் விளைவாக இருக்கலாம். இந்தக் கண் பிரச்சனையானது அழற்சி மற்றும் வளர்சிதை மாற்ற சமநிலையின்மையுடனும் தொடர்புடையது. எனவே கண்களில் பிரச்சனைகளை சந்தித்தால், அதை புறக்கணிக்காமல், உடனே மருத்துவரை பரிசோதனை செய்து பாருங்கள்.
3. கருவளையங்கள் அல்லது சோர்வான கண்கள்
ஒருவது கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்படும் போது, அது நாள்பட்ட உடல் சோர்வுக்கு வழிவகுத்து, கண்களைச் சுற்றி கருவளையங்களை உருவாக்கும். இப்படி கல்லீரல் பிரச்சனையால் கருவளையங்கள் வந்திருந்தால், எவ்வளவு ஓய்வு எடுத்தாலும், அந்த கருவளையங்கள் நீங்காமல் இருக்கும்.
4. கண்களைச் சுற்றி வீக்கம்
வளர்சிதை மாற்றக் கோளாறுகளால் கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் நீர் தேங்கத் தொடங்கினால், அதற்கு உங்கள் கல்லீரலில் உள்ள பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம். கண்களைச் சுற்றியுள்ள பகுதி வழக்கத்திற்கு மாறாக வீங்கியிருப்பதை நீங்கள் கவனித்தால், கொழுப்பு கல்லீரல் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள மருத்துவரை அணுகி கல்லீரல் ஆரோக்கியத்தை பரிசோதனை செய்து பாருங்கள்.
5. மங்கலான பார்வை
சர்க்கரை நோய், வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் அல்லது நோய் எதிர்ப்பு மண்டலம் சார்ந்த உடல்நலப் பிரச்சினைகள் போன்ற நாள்பட்ட நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொழுப்பு கல்லீரல் நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. சில சமயங்களில் மங்கலான பார்வைக்கும் கொழுப்பு கல்லீரல் நோய்க்கும் தொடர்பு இருக்கலாம். இதை மருத்துவ பரிசோதனை மூலம் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.
கொழுப்பு கல்லீரலை கவனிக்காமல் விட்டால் என்ன நடக்கும்?
"இந்தியாவில் 3-ல் ஒருவர் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் சர்க்கரை நோய் இருந்தால், அத்தகையவர்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. கொழுப்பு கல்லீரல் நோய்க்கு எந்த ஒரு சிகிச்சையும் மேற்கொள்ளாமல் இருந்தால், அது லிவர் ஃபைப்ரோசிஸ் ஆக மாறி, சிரோசிஸ் ஆக மாறி, பின்னர் கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் புற்றுநோய் போன்ற நிலைமைக்கு கொண்டு செல்லும் வாய்ப்புள்ளது" என்று கல்லீரல் நிபுணரான டாக்டர். அஸ்வின் கிருஷ்ணா கூறினார்.
யாருக்கெல்லாம் இந்த கொழுப்பு கல்லீரல் வரும் வாய்ப்புள்ளது?
* சர்க்கரை நோய்
* இரத்த அழுத்தம்
* கொலஸ்ட்ரால்
* உடல் பருமன்
* ஏற்கனவே கல்லீரல் சோதனையில் பிரச்சனைகள் இருந்திருந்தால், அவர்களுக்கு இந்த கொழுப்பு கல்லீரல் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று டாக்டர் கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

