Latest Updates
-
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும்
ஜூலை 04-ல் சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு பணம், புகழ், வெற்றி எல்லாம் தேடி வரப்போகுது!
Venus Transit In Leo On 04 July 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் மாதம் ஒருமுறை தனது நிலையை மாற்றுவார்.

தற்போது சுக்கிரன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் ஜூலை 04 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த ராசியில் சுக்கிரன் ஆக்ஸ்ட் 01 ஆம் தேதி வரை இருந்து, பின் கன்னி ராசிக்குள் நுழைவார்.
இப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். இப்போது சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரனால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் சுக்கிரனின் அருளால் கைக்கு வந்து சேரும். மேலும் நிலுவையில் உள்ள வேலைகளும் வெற்றிகரமாக முடிவடையும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி பிரச்சனைகள் தீரும். செல்வம் பெருகும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், இக்காலம் சாதகமாக இருக்கும். பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் பெரிய அளவில் வெற்றியைப் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான வழிகள் உருவாகும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பாராத அளவில் கணிசமான லாபம் கிடைக்கும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் உதவியால் தொழிலில் பெரிய சாதனைகளைப் படைப்பீர்கள். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் அதற்கு சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


