திருமணமான ஜோடிகள் பழைய பஞ்சாங்கமாக கருதும் 5 விதிமுறைகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

மரபுகளை பின்பற்றுவதை மிக முக்கியமாக கருதும் நாடுகள் பல உள்ளது. ஆனால் தங்களின் மரபுகளை கண்டிப்பான முறையில் பின்பற்றாத சில சமுதாயங்களும் கூட இருக்கத் தான் செய்கிறது. அவர்கள் எல்லாம் பரந்த மனமுள்ளவராக இருப்பார்கள்.

இன்றைய நாகரீக ஜோடிகள் பழைய பஞ்சாங்கமாக கருதும் 5 கொள்கைகளைப் பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சந்தோஷமான விஷயங்களில் ஈடுபடுங்கள்

சந்தோஷமான விஷயங்களில் ஈடுபடுங்கள்

உறவிற்கு இப்பவும் அப்பவும் எப்படி புத்துணர்வு அளிப்பது முக்கியம் என்பதை திருமணமான ஜோடிகள் தெரிந்து வைத்துள்ளார்கள். உங்கள் திருமணம் நீடித்து நிலைக்க வேண்டுமானால், உங்கள் துணையின் கண்களில் நீங்கள் ஒரு புதிராக காட்சி தருவது அதிமுக்கியமாகும். அதற்காக ஒவ்வொரு நாளும் நீங்கள் புதிதாக எதையும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் புதிதாக எதையாவது முயற்சி செய்து வாழ்க்கையை சந்தோஷமாக வைத்திருப்பது புத்திசாலித்தனம் ஆகும். இயல்பு வாழ்க்கையைத் தவிர்ப்பது இயலாத ஒன்று தான். ஆனால் அதை சலிப்பு தட்டாமலும், சோர்வடையாமலும் பார்த்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது.

சண்டைகள் விவாகரத்தில் போய் முடியும்

சண்டைகள் விவாகரத்தில் போய் முடியும்

பல்வேறு பிரச்சனைகள் எழலாம். அடுத்து நடப்பது என்ன? தம்பதிக்கு இடையே வாக்குவாதங்களும் சண்டைகளுமே. இது விவாகரத்து வரை போய் முடியும். ஆனால் இப்படி மட்டுமே வாழ முடியுமா? புத்திசாலியான 2 பேர் ஈடுபட்டால் தீர்க்கப்படாத எந்த ஒரு பிரச்சனையும் இருக்க முடியாது. அதற்கு விவாகரத்து சரியான தீர்வு அல்ல. உங்கள் துணையுடன் பேசி பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் தீர்வை அவருக்கு எடுத்துரையுங்கள். அவர்கள் கூறுவதை கவனிப்பவராக இருங்கள். பொதுவாக நாம் குறைவாக கேட்போம், ஆனால் அதிகமாக பேசுவோம்.

சுற்றுலா செல்லுதல்

சுற்றுலா செல்லுதல்

பல்வேறு இடங்களில் சென்று சுற்றுலாவில் செலவழிப்பது மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும். நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எவ்வளவு தான் நேசித்தாலும் கூட, உங்கள் இருவருக்கும் ஒரு இடைவேளை தேவைப்படும். ஒரு வார இறுதியின் போது உங்கள் துணையை விட்டு செல்வது ஒன்றும் ஏமாற்றுவது ஆகாது. உங்களுக்காக நீங்கள் சில மணிநேரம் செலவழிக்கிறீர்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நேரம் என்பது இயல்பான ஒன்றே. பொதுவாக இப்படி தனித்தனியாக சுற்றுலா சென்று வந்த ஜோடிகள் தங்கள் உறவு இன்னமும் சிறப்பாக மெருகேறியுள்ளது என கூறி வருகின்றனர்.

பரஸ்பர பொழுதுபோக்குகள்

பரஸ்பர பொழுதுபோக்குகள்

உங்கள் இருவருக்கும் இடையே ஒரே விஷயங்கள் மற்றும் ஒரே பொழுதுபோக்குகள் இருந்தால் சுவாரசியமாக இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட ஒற்றுமை இருக்க வேண்டிய அவசியமில்லையே. உங்கள் இருவருக்கும் உள்ள விருப்பங்கள் வேறுபடலாம் அல்லவா? அது இன்னமும் சுவாரசியத்தை ஏற்படுத்தலாம். காரணம் நீங்கள் புதிதாக எதையாவது தெரிந்து கொள்கிறீர்கள் அல்லவா? மேலும் உங்களின் துணையை பற்றியும் நீங்கள் அதிகமாக, புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் பொழுதுபோக்குகளில் உங்கள் துணைக்கு ஈடுபாடு இல்லையென்றால் அவரை கட்டாயப்படுத்தாதீர்கள்.

படுக்க செல்லும் போது கோபத்துடன் செல்லாதீர்கள்

படுக்க செல்லும் போது கோபத்துடன் செல்லாதீர்கள்

படுக்கைக்கு செல்லும் போது நேர்மறையான உணர்வுடன் இருங்கள். அதேப்போல் ஆக்கபூர்வமான சிந்தனையுடன் செயல்படுங்கள். அழிவுச் சிந்தனையுடன் இருந்தால், உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும். மேலும் உங்கள் துணையுடனான உறவும் பாதிக்கப்படும். மாலை நேரத்தில் மன அழுத்தம் குவியத் தொடங்கும். ஆனால் டென்ஷனை குறைக்க ஆயிரம் வழிகள் உள்ளது. அமைதியான இசையை கேட்பது, புத்தகம் படிப்பது, நகைச்சுவை படம் பார்ப்பது போன்ற பல வழிகள் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Rules That Married Couples Can Ignore

In the list below you can find 5 principles that are found old-fashioned by modern married couples.
Story first published: Sunday, July 12, 2015, 11:03 [IST]
Subscribe Newsletter