சிறந்த தோழியை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்பதற்கான காரணங்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

நல்ல மனைவி மட்டுமல்ல, ஓர் ஆணுக்கு நல்ல தோழி அமைவதும் இறைவன் கொடுக்கும் வரம் தான். மனைவி மட்டுமல்ல, சகோதரியும், தோழியும் கூட தாயுள்ளம் கொண்டவர்கள் தான். இவர்கள் உங்களது சோகத்தை துடைத்தெடுக்கும் மேகங்கள்.

கடைசி வரை ஓர் ஆண், பெண் தோழமையுடன் பழக முடியாதா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருக்கும். ஆனால், நல்ல தோழமை புரிதல் உள்ளவர்கள் திருமணம் செய்துக் கொள்வதால் சில நன்மைகளும் இருக்கின்றன, அவை என்னென்ன என்று இனிக் காணலாம்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நல்லது, கெட்டது இரண்டும் தெரியும்

நல்லது, கெட்டது இரண்டும் தெரியும்

உங்கள் தோழிக்கு, உங்களது நல்ல பக்கம், கெட்ட பக்கம் என இரண்டும் தெரியும். அவரால் உங்களை முழுதாய் புரிந்துக் கொள்ள முடியும். புதியதாய் ஒருவரால் அப்படி ஏற்றுக் கொள்வது சற்று கடினம் தான்.

கிறுக்கு தனத்தை சகித்துக் கொள்வார்

கிறுக்கு தனத்தை சகித்துக் கொள்வார்

நீங்கள் என்ன கிறுக்குத்தனம் செய்தாலும், அதை சகித்துக் கொள்ளும் பொறுமை உங்கள் தோழிக்கு இருக்கும்.

கடினமான நேரத்தில் உறுதுணை

கடினமான நேரத்தில் உறுதுணை

உங்கள் கடினமான நேரத்தில், உங்களை எப்படி சமாதானப் படுத்த வேண்டும். உங்களை அதிலிருந்து மீட்டெடுத்து வெற்றி பாதைக்கு கூட்டி செல்வது உங்கள் தோழிக்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

தலைவலி குறைவு

தலைவலி குறைவு

வீண் சண்டை சச்சரவு எல்லாம் இருக்காது, உங்களிடம் எந்த நேரத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என அவருக்கு நன்கு தெரியும்.

ப்ளஸ், மைனஸ்

ப்ளஸ், மைனஸ்

உங்களது ப்ளஸ் மற்றும் மைனஸ் எது என இவருக்கு நன்கு தெரியும் என்பதால், நீங்களே கிறுக்குத்தனமான முடிவுகள் எடுக்க முயன்றாலும், எங்கு உங்களை தடுக்க வேண்டும் என அறிந்து தடுத்து நிறுத்தும் எல்லைக் கோடு உங்கள் தோழிக்கு தெரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons To Marry Your Girlfriend

Reasons To Marry Your Girlfriend
Story first published: Thursday, December 10, 2015, 18:33 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter