பெண்களுக்கு ஆண்கள் இழைக்கும் 9 கொடுமைகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

ஒன்று அவரை காதலிக்கலாம் அல்லது அவரை வெறுக்கலாம், ஆனால் அவரை புறக்கணிக்க முடியாது. ஆம், நாங்கள் கூறுவது உங்கள் வாழ்க்கை துணையான உங்கள் கணவரைப் பற்றி தான். சொல்லப்போனால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் விரும்பும் நபராக இருக்கக்கூடும்.

ஆனால் அவர் உங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட வகையில் கொடுமைப்படுத்தவும் கூட வாய்ப்பு உள்ளது. அப்படி, பெண்களுக்கு ஆண்கள் இழைக்கும் கொடுமைகளைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிகப்பெரிய ஈகோவை கொண்டிருத்தல்

மிகப்பெரிய ஈகோவை கொண்டிருத்தல்

ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமானால், மற்றவர்களிடம் பாதையை கேட்க விரும்பாமல், தாங்களாகவே அந்த இடத்தை தேடி கண்டுபிடிக்க விரும்புவார்கள் ஆண்கள். இதனால் இரண்டு மணிநேர தாமதமாகி, பெட்ரோல் வீணானாலும் கூட அதை பற்றியெல்லாம் அவர்கள் கவலை கொள்வதில்லை. இது ஏன் என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா? அதற்கு காரணம் அவர்களுடைய மிகப்பெரிய ஈகோவே.

தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவாற்றலுடன் வாழுதல்

தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவாற்றலுடன் வாழுதல்

இந்த கிரகத்தில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் மற்றும் கால்பந்து வீரர்களின் பெயரை மட்டுமல்லாது அவர்களின் ஸ்கோரையும் கூட ஒவ்வொரு ஆணும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் திருமண நாட்கள் பற்றி கேட்டால் அவ்வளவு தான்! அவர்களின் மூளைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மறதி வியாதி ஏற்பட்டுவிடும்.

காமப்பார்வை வீசுதல்

காமப்பார்வை வீசுதல்

ஆண்கள் பெண்களின் மார்பகங்களை வெறித்து பார்ப்பார்கள் என அதிகார்வப்பூர்வமாக உலகளாவிய சர்வே கூறியுள்ளது. இப்படி ஆண்கள் பெண்களை வெறித்து பார்ப்பது மட்டுமல்ல அவர்கள் இழைக்கும் கொடுமை, ஆனால் இத்தகைய ஆண்களின் அருகில் அமரும் பெண்களின் நிலையும் பாவம் தான்.

மிக வெளிப்படையாக பொஸசிவ்னஸ்ஸை வெளிக்காட்டுதல்

மிக வெளிப்படையாக பொஸசிவ்னஸ்ஸை வெளிக்காட்டுதல்

எங்கிருந்து ஆண்களுக்கு இந்த பாதுகாப்பின்மை ஏற்படுகிறது? பொறாமைப்படுவதற்காக பொதுவாக அவர்கள் பெண்களை குற்றம் சாட்டுவார்கள். ஆனால் தங்கள் பெண்ணைப் பற்றி மற்ற ஆண்கள் குறிப்பிட்டாலே போதும், அவர்களின் முகத்தின் மாற்றத்தை காணலாம்.

தங்கள் வெளிவேஷத்தின் மீது பெருமை கொள்ளுதல்

தங்கள் வெளிவேஷத்தின் மீது பெருமை கொள்ளுதல்

இதை விட கொடுமைக்காரர்களாக ஆண்கள் இருக்க முடியாது! ஊரிலேயே மிகவும் அழகான மற்றும் செக்ஸியான பெண்களுடன் ஊர் சுற்ற ஆண்கள் விரும்புவார்கள். ஆனால் திருமணத்திற்கு தன் தாயிடம் அறிமுகப்படுத்த வேண்டுமென்றால் மட்டும், குடும்ப குத்துவிளக்கு போன்ற பெண்களைத் தேட தொடங்கி விடுவார்கள். இரவு பார்ட்டிகளுக்கு செல்ல அவர்களின் உடையலங்காரம் மற்றும் எதையும் கண்டுகொள்ளாத மனப்பான்மையும் உங்களுக்கு பொருந்தியிருக்கும். ஆனால் திருமணத்திற்கு மட்டும் அது சரிபட்டு வராத என்ன?

கூடுதல் அக்கறையை காட்டுதல்

கூடுதல் அக்கறையை காட்டுதல்

நீங்கள் வீட்டை விட்டு வெளியே சென்றவுடன், எங்கே இருக்கிறாய் என்பதை கேட்க ஒவ்வொரு 15 நிமிடமும் உங்கள் கணவர் உங்களை அழைத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட அக்கறை கண்டிப்பாக எரிச்சலை உண்டாக்கி விடும். அவர்கள் நம் வாழ்க்கைக்குள் வருவதற்கு முன்பாகவே நாம் பாதுகாப்பாகவும், சரியாகவும் வாழ்ந்துள்ளோம் என்பது அவர்களுக்கு தெரியாதா என்ன?

 தன்னை ஒரு சூப்பர்மேனாக காண்பிப்பது

தன்னை ஒரு சூப்பர்மேனாக காண்பிப்பது

நமக்கு உதவி செய்ய ஆண்கள் இருக்கிறார்கள் என நினைக்கும் போது சந்தோஷமாக தான் இருக்கும். இருப்பினும், "எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி நான் பார்த்துக் கொள்வேன்" என்ற தோணி நமக்கு நன்மையை விட தீமையை தான் உண்டாக்கும்; குறிப்பாக சொல்ல வேண்டுமானால், தங்களை மேன்மைமிகு மாமேதையாக நினைத்து கொள்ளுதல். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் பிளம்பர், எலெக்ட்ரிஷியன், கார்பெண்டர் மற்றும் நிதிசார்ந்த ஆலோசகர் போன்ற அனைத்துமாக தன்னை நினைத்துக் கொள்ளுதல்.

 உணர்ச்சிகளை துட்சமாக கருதுதல்

உணர்ச்சிகளை துட்சமாக கருதுதல்

பொதுவாக பெண்கள் உணர்ச்சிமிக்கவர்கள். ஆனால் வாழ்க்கையின் மீது நடைமுறையான எண்ணத்தை தொடர்ச்சியாக கொண்டிருப்பார்கள். இதுவே ஆண்கள் என்றால் அப்படி இருப்பதில்லை. பெண்களின் உணர்ச்சிகள், நம்பிக்கைகளை கிண்டல் செய்வதை நிறுத்தி விட்டு, அவர்களை புறக்கணிக்காத போது தான் அவர்கள் அந்த பக்குவத்தை அடைவார்கள்.

செக்ஸ் பூதமாக இருத்தல்

செக்ஸ் பூதமாக இருத்தல்

பெண்களுக்கு படுக்கையின் மீது பேரார்வம் உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதற்காக ஆண்கள் தாங்கள் பார்த்த ஆபாச படத்தில் வருவதை போல் தங்கள் மனைவி நடந்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவது எல்லாம் மிகவும் கொடுமையான ஒன்றாகும். செக்ஸை பொருத்தவரை பெண்ணை அவர்களாக இருக்க விடுங்கள். அதை விட்டு விட்டு அவர்களை நிர்பந்தம் செய்து, ஒழுங்கான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என குறைக் கூறாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Nine Cruel Things Men Do To Women

Love him or hate him, but you can't ignore him - yes, we are talking about the man of your life. He's probably the most loving creature in your life, but he can also be the perpetual torture in ways more than one. Here, we bring the top 10 cruel things that men do to women...
Story first published: Saturday, June 20, 2015, 12:23 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter