நடிகைகளுடனான உறவினால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த இந்திய பிரபலங்கள்!!!

By: John
Subscribe to Boldsky

பொது மக்களும் கூட தான் அவர்களது மனைவிக்கும், மனைவிகள் கணவன்மார்களுக்கும் துரோகம் செய்கின்றனர். ஆனால், பிரபலங்கள் என்பதினால் தான் இவர்கள் என்ன செய்தாலும் அது செய்திகளில் மிக மிக பிரபலமாகிவிடுகிறது. ஆயினும், இவர்கள் நடிகைகள் உடனான உறவின் பேரால், கட்டிய மனைவிக்கு துரோகம் செய்தப் பிரிவினரை சேர்ந்தவர்கள்.

அழகை அதிகரிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்ட நடிகர் நடிகைகள்!!!

இந்த பட்டியியலில் இடம் பெற்றிருக்கும் சில பிரபலங்கள் ஊரறிய ஒப்புக்கொண்டவர்கள், சிலர் அரசல்புரசலாகப் பேசப்பட்டவர்கள். ஆனால், ஓரிருவர், இந்த பூனையுமா பால் குடிச்சது என்பது போல இருந்தவர்கள்.

வயசானாலும் அழகும் ஸ்டைலும் மாறாத கவர்ச்சிகரமான நடிகைகள்!!!

இனி, நடிகைகளுடனான உறவினால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த இந்திய பிரபலங்கள் யார், யார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிக்

பிக் "பி" அமிதாப்

பாலிவுட்டின் பிக் "பி" என அனைவராலும் செல்லமாக கூப்பிடப்பட்ம் அமிதாப், ஜெயா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது இல்வாழ்க்கை சுபமாக போய்கொண்டிருக்கும் போது, திரைப்பட நடிகையான ரேகாவுடன் அமிதாபிற்கு உறவு ஏற்பட்டதாக அந்நாட்களின் செய்தித்தாள்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இவருக்கு அந்நாளில் இரண்டு குழந்தைகள் இருந்ததாலும், பெயர் புகழின் காரணத்தினாலும், ரேகாவுடனான உறவு முறிந்தது என்று கூறப்படுகிறது.

ஷாருக்கான்

ஷாருக்கான்

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான், நடிகை பிரியங்கா சோப்ராவுடன் குலாவி வந்ததாக பல புரளிகளும், கிசுக்கிசுக்களும் சில பல வருடங்களுக்கு முன் இவர் "டான்" என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் கூறப்பட்டது. அப்போதெல்லாம் இவர், இரவு வீட்டுக்கு வருவதற்குள்ளே விடிந்தே விடும் என்றெல்லாம் கூறப்பட்டது. பின் இவரது மனைவி குறுக்கிட்டு, இந்த புரளிகளிக்கெல்லாம் முற்றுபுள்ளி வைத்தார்.

அமீர்கான்

அமீர்கான்

அமீர்கான் முதலில் ரீனா என்பவரை திருமணம் செய்திருந்தார். 15 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த அமீர்கான், லாகான் படத்தின் போது உதவி இயக்குனராக பணிப்புரிந்த கிரண் ராவ் என்பவரை, ரீனாவை விவாகரத்து செய்த பிறகு மறுமணம் செய்துக் கொண்டார்.

ராஜ் குந்ரா

ராஜ் குந்ரா

இவர் ஒரு ஐரோப்பிய தொழிலதிபர். ஐ.பி.எல். ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் இவர் தான். இவர் முதலில் கவிதா என்பவரை திருமணம் செய்திருந்தார். பிறகு பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியுடன் ஏற்பட்ட உறவினால், கவிதாவை விவாகரத்து செய்துவிட்டு ஷில்பாவை திருமணம் செய்துக் கொண்டார்.

சைஃப் அலி கான்

சைஃப் அலி கான்

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகன் ஆன சைஃப் அலி கான், அம்ரிதா சிங் என்பவரை மணந்து 13 ஆண்டுகளாக இல்லறத்தில் உறவாடி வந்தார். ஆனால், கரீனாவின் வருகைக்கு பிறகு அவரை விவாகரத்து செய்துவிட்டு கரீனாவை திருமணம் செய்துக் கொண்டார்.

ஹ்ரித்திக் ரோஷன்

ஹ்ரித்திக் ரோஷன்

கைட்ஸ் (Kites) திரைப்படத்தின் போது இவருக்கு மெக்சிக்கன் மாடல் அழகியும், அப்படத்தின் நாயகியுமான பார்பரா மோரி உடன் நெருக்கம் ஏற்பட்டதாலும், இவரது குழந்தைகள் கூட அவருடன் நெருக்கம் பாராட்டியதால் தான் இவரது மனைவி சுசேன்னே (Sussane) இவரை பிரிந்து சென்றுவிட்டதாகவும் கிசிக்கிசுக்கள் பரவின.

கோவிந்தா

கோவிந்தா

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருந்த பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகை ராணி முகர்ஜியை கண்டதும் மயங்கிவிட்டதாக அந்நாட்களில் கூறப்பட்டது. இதை அறிந்த கோவிந்தாவின் மனைவி சுனிதா, இவரை பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு திருமண ஆசையை ராணியிடம் கூறியும், சுனிதா செய்த பிரச்சனையினால், கோவிந்தாவிற்கு கோவிந்தா ஆகிவிட்டது.

போணி கபூர்

போணி கபூர்

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் பாலிவுட் தயாரிப்பாளர் போணி கபூர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. அவரது பெயர் மோனா கபூர். இவர் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு போணி மற்றும் ஸ்ரீதேவி ஆகியோருக்கு திருமணம் ஆகி 16 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஸ்ரீதேவிக்கும் போணி இரண்டாவது கணவர் என்பது கொசுறு தகவல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian Celebrities Who Cheated On Their Wives

Do you know about the Indian celebrities who cheated on their wifes? read here.
Story first published: Tuesday, May 26, 2015, 14:26 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter