For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேலையில்லா பட்டதாரிகளின் கல்யாணம்??!! கனவு??!!

By Super
|

L.K.G முதல் +2 வரை தட்டித் தடுமாறி பல ஆண்மகன்கள் பாஸ் செய்வதே கல்லூரியில் கலாட்டா அடித்து, பல லவ்வுகளில் துள்ளி திரியத் தான். 12 வருட உழைப்பு, இந்த 4 ஆண்டுகளில் நாம் எப்படி இருக்கிறோமோ அப்படி தான் நமது நாளையும் விடியும் என்பதை பலர் மறந்துப்போகிற காலமும் இதுதான். என்ன செய்வது தலைப்பைப் போலவே, இன்றைய சினிமா பல இளைஞர்களை ஆட்டிப் படைக்கிறது. சினிமா வெறும் கேளிக்கை என்பதை மறந்து, திரையில் பார்த்ததை வாழ்கையில் வேடிக்கையாக கையாளும் பழக்கத்தை பின் தொடர்கின்றனர் நமது நாளைய இந்தியா என மார்த்தட்டிக்கொள்ளும் இளைஞர்கள்.

சரி, கல்லூரிப் படிப்பு முடிந்த பின், வேலை இல்லா பட்டதாரியாய் இருப்பவர்கள் நேரிடும் பிரச்சனைகள் என்னென்ன? சும்மாவே அட்வைஸ் செய்யும், இளைஞர்களால் பெருசுகள் என்று அழைக்கப்படும் பெரியவர்கள் தாறுமாறாக அட்வைஸ் மழைப் பொழிவர். இதில் சிலருக்கு சளி, காய்ச்சல் கூட வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக நமது தெருக்களில் திரியும் சிண்டு, வண்டு முதல் சிலோன் பார்டர் வரை யாரும் நாம் சொல்வதை சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதுமட்டும் தான் என்று நினைத்துவிட வேண்டாம். இனி தான் வருகிறது முக்கியாமான பிரச்சனையே, அரசே ஆண்களுக்கு திருமண வயது 21 என்று நிர்ணயித்தாலும் வேலை இல்லை என்றால் வயது 41 ஆனாலும் யாரும் பெண் தரமாட்டார்கள். நாம் இந்த கட்டுரையில் இனி இதை பற்றி தான் அலசி ஆராயப் போகிறோம். ஒருவேளை எந்த ஜென்மத்திலோ நீங்கள் புண்ணியம் செய்து... இந்த ஜென்மத்தில் உங்களுக்கு வேலையே இல்லாமல் கல்யாணம் ஆகிவிட்டால்...? தெரிந்துக்கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்...

How Unemployment Affects Marriage

சுமை
இனியாவது வாழ்வில் சுகம் அதிகரிக்கும் என்று ஆசைப்படுவீர்கள். ஆனால் சுமை தான் அதிகரிக்கும். சிங்களாக இருக்கும் போதே சிங்கியடித்துக் கொண்டிருந்த VIP'க்களுக்கு. இனி தான் ஈ, கொசுக் கூட வந்து கிண்டலித்து விட்டு போகும் நிலை உருவாகும். இதிலிருந்து தப்பிக்க வேண்டியே நீங்கள் ஏதாவது ஒரு வேலைக்கு பொய் தீர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மன அழுத்தம்
ஒன்றா, இரண்டா என "காக்க காக்க" திரைப்படத்தில் ஜோதிகா பாடியப் பாடல் போல சுமைகள் அதிகரித்து, மன அழுத்தம் தான் மிஞ்சும். மற்றவர்கள் திட்டியது போக வேண்டா குறைக்கு நீங்க தாலிக் கட்டிக் கூட்டி வந்தவளும் தாளித்து எடுப்பாள். சொல்லும் போது ஜாலியாக இருந்தாலும், அனுபவிக்கும் போது ஜோலி முடிந்துவிடும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.

சண்டை
சொல்வதற்கே கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும், இதுவும் நடக்கும் இதற்கு மேலாகவும் நடக்கும். அது, அவரவரின் விதிப்பயனைப் பொருத்தது. சண்டையால் மண்டை உடையாத அளவு நீங்கள் பத்திரமாக இருந்தால், அதுதான் நீங்கள் நிஜமாகவே போன ஜென்மத்தில் செய்த புண்ணியம்.

பள்ளியறை பாக்கியம்
சில இரவுகள் நீங்கள் மார்கழியாய் இருந்தாலும், பங்குனியாய் இருந்தாலும் ஆடி என நினைத்துக்கொண்டுப் படுக்கும் சூழ்நிலைகள் ஏற்படும். அதற்கெல்லாம் நீங்கள் கண்கலங்க கூடாது. அதற்கான காலக்கட்டம் வரும் போது அதுவே தானாக வந்துவிடும்.

பிரிவு
ஒருகட்டத்தில் வாக்குவாதம், பேசா வாதம் என்ன சுற்றி சுற்றி வாதங்கள் ஏற்பட்டு விவாகரத்து வரை முற்றிப்போகும். இதிலிருந்து எல்லாம் நீங்கள் விடுபட்டு நிம்மதியான இல்லறம், அழகான மனைவி, சுட்டித்தனமான குழந்தை என உங்களது வாழ்க்கை அமைய வேண்டும் என நினைத்தால், அவர்கள் உங்களிடம் எதிர்பாப்பது ஒன்றுதான்..., "உத்தியோகம் புருஷ லட்சணம்" நீங்கள் VIP'யாக இருக்க வேலை இல்லா பட்டதாரியாக தான் இருக்க வேண்டும் என இல்லை, வேலை இருக்கிற பட்டதாரியாகவும் இருக்கலாம்.

English summary

How Unemployment Affects Marriage

here we discussed about few problems arises after marriage because of unemployment
Desktop Bottom Promotion