Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பேச்சுலர் லைஃப் டூ பேஜாரான லைஃப் - திருமணத்திற்கு பின் ஆண்களின் வாழ்க்கை!!!
கட்டுக்கடங்காத காளைகளாக திரிந்துக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு கால்கட்டுப் போட்டு அடக்குகிறோம் என்று அவர்களது வாழ்க்கையை முடக்கிவிடுவது, வாடிக்கையாகிவிட்டது பெற்றோர்களுக்கு.
கல்யாணம் எல்லாம் பழைய பஞ்சாங்கம் - ஓ காதல் கண்மணி எஃபெக்ட்டு!!
திருமணம் இல்வாழ்கையின் ஆரம்பம் என்று சொன்ன யாரும், அது ஆண்களின் நல்வாழ்க்கையின் முடிவு என்பதை சொல்வதில்லை. நண்பர்களோடு ஊர் சுற்ற முடியாது, நினைத்த நேரத்திற்கு, வெளியே செல்ல முடியாது, எது செய்வதானாலும் புதிதாய் ஒருவரிடம் முன்பே அனுமதி பெற வேண்டும்.
திருமண வாழ்வில் ஆண், பெண்ணுக்கு இடையேயான வயது வரம்பு முக்கியம் - அறிவியல் ரீதியான உண்மைகள்!!!
முப்பது நாள் மோகத்திற்கு பின் பெரும்பாலும் ஆண்களின் மகிழ்ச்சியை மூடிக் வைக்கும் சோகமான மேகமாக தான் திருமணம் இருக்கிறது என்று குமுறும் ஆண்களின் எண்ணிக்கை நட்சத்திரங்களோடு ஒத்துப்போகிறது என்றால் பாருங்களேன்...

உடலெடை அதிகரிக்கும்...
திருமணம் ஆகும் முன்பு வரை சிக்ஸ் பேக் வைக்காவிட்டாலும் சிக்கென்று இருந்த ஆண்கள் எல்லாம், திருமணத்திற்கு பிறகு வயிறு மட்டுமல்லாது முகத்திலும் தொப்பை தொங்கும் அளவு புசு, புசு, பூசணிக்காய் போல ஆகிவிடுவார்கள்.

பொறுப்பு
திருமணத்திற்கு முன் எவ்வளவு பெரிய (பிஸ்தா) பருப்பாக இருந்தாலும், திருமணத்திற்கு பிறகு ஆண்கள் பொறுப்பாக தான் இருக்க வேண்டும்.

குடும்பஸ்தன்
தனிக்காட்டு ராஜா என்று கெத்து காட்டிக் கொண்டிருந்த ஆண்கள், இனிமேல் குடும்பத்தின் மீது அக்கறை காட்ட வேண்டும், பண்பாக நடந்துக்கொள்ள வேண்டும். சமூகத்தில் நல்ல பெயருடன் திகழ வேண்டும்.

காசு, பணம், துட்டு, மணி!!!
மடை திறந்து தாவும் நதி அலை போல பணத்தை அசால்ட்டாக செலவு செய்தவர்கள் எல்லாம், இனி, குழாய் நீர் போல சிறுக, சிறுக தான் செலவு செய்ய வேண்டும். இல்லையேல் உங்கள் கதி, அதோகதிதான்!!

சுதந்திரம்
பெற்ற தாய் தந்தையிடம் கூட வெளியே சென்று வர அனுமதி பெறாமல் சுற்றி திரிந்து வந்த ஆண் சிங்கங்கள், இனி தந்து பெண் சிங்கத்திடம் அனுமதி வாங்கி தான் ஆக வேண்டும். இல்லாங்காட்டி, இராத்திரி பட்டினி கிடக்க வேண்டியது தான் (சாப்பாடு போடமாட்டாங்க!!!)

இரவு பார்ட்டி
அதிகாலை சூரியன் எட்டிப் பார்க்கும் முன் கூட வெளியே போகலாம். ஆனால், திருமணத்திற்கு பிறகு இரவு நிலவு எட்டிப் பார்த்த பின் வெளியே செல்ல தடா போடப்படும்.

நட்பு வட்டாரம்...
திருமணத்திற்கு பிறகு பெண்களின் கை வளையலை விட சுருங்கி விடும் உங்களது நட்பு வளையம். நினைத்த நேரத்திற்கு அவர்களோடு ஊர் சுற்றுவது எல்லாம் பகல் கனவில் கூட நடக்காது.



Click it and Unblock the Notifications