திருமணத்திற்கு முன்பு பேச்சுலர் ஆண்கள் விட்டொழிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள்!!!

By: John
Subscribe to Boldsky

பேச்சுலர் வாழ்க்கை என்பது சொர்க்கம் போன்றது, அங்கு எந்த நிபந்தனைகளும், தடை உத்தரவுகளும் இல்லை. நண்பர்கள் என்னும் கேளிக்கை பூங்கா புன்னகையைப் பொன்னகைப் போல வாரி இறைத்துக்கொண்டிருக்கும். ஆனால், இந்த பேச்சுலர் வாழ்க்கையில் ஆண்கள் அனுபவிக்கும் இன்பமானது, ஆண்களையும் அவரது நண்பர்கள் வட்டாரத்தையும் மட்டுமே மகிழ்விக்க கூடியதாய் இருக்கும்.

இல்லற உறவின் ஆரம்பத்தில் ஏற்படும் சில விசித்திர செயல்கள் - இப்படியுமா பண்ணுவாங்க!!!

திருமணம் என்பது ஆதாம், ஏவாள் வாழ்ந்தக் காலத்தைப் போன்றது. இருவர்களுக்குள் இயங்கும் ஓர் தனி உலகம். இந்த இருவர்களுக்குள் ஏற்படும் இன்பமும், துன்பமும் இவர்களை மட்டும் இல்லாது இவர்களை சுற்றி இருக்கும் குடும்பத்தினரையும் பாதிக்கும்.

ஆண்களிடம் பெண்கள் அதிகம் வெறுக்கும் "ச்ச்சீ..." சொல்ல வைக்கும் செயல்கள்!!!

பேச்சுலர் வாழ்க்கை பழக்கவழக்கங்கள் பலவன திருமண வாழ்விற்கு ஒத்துவராது. எனவே, திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் முன்னர், ஆண்கள் விட்டொழிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள் சில இருக்கின்றன. அவற்றை பற்றி இனி காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல்நல அக்கறை

உடல்நல அக்கறை

பேச்சுலராக இருக்கும் வரை ஆண்கள் அவ்வளவாக உடல்நலத்தின் மேல் அக்கறைக் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். சிலர் எல்லாம், காய்ச்சல், சளி, இருமல் எதுவாக இருந்தாலும், குவாட்டரில் மிளகு கலந்துக் குடித்தால் சரியாகிவிடும் என நம்புவரும் இருக்கின்றனர். ஆனால், திருமணத்திற்கு பிறகு இந்த விஷயத்தில் நிறைய அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆண்கள் விஷயம் இல்லாவிடினும், மனைவிக்கு என்னென்ன உடல்நலக் கோளாறு ஏற்படும் அதற்கு எந்த மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் என்றாவது தெரிந்துக் கொள்ள வேண்டும்.

விளையாட்டுத்தனம்

விளையாட்டுத்தனம்

எத்தனை வயதானாலும், ஆண்களினால் களவிளையாட்டில் இருந்து வீடியோ கேம்ஸ் வரை விளையாடுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், திருமணத்திற்கு பிறகு பொறுப்புகள் அதிகமாகிவிடும். ஆதலால், இந்த நேர செலவீடுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும்.

அழுக்கு துணிகளை அணிவது

அழுக்கு துணிகளை அணிவது

ஜீன்ஸ் என்ற ஒன்று ஆண்களின் துணி துவைக்கும் பழக்கத்தை அழித்துவிட்டது என்று தான் கூற வேண்டும். ஆனால், திருமணத்திற்கு பிறகும் இவ்வாறு தொடர்ந்தால் புதியதாய் வந்தவள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடும் நிலை ஏற்பட்டுவிடும்.

உணவுப் பழக்கங்கள்

உணவுப் பழக்கங்கள்

கண்ட நேரத்தில் கண்ட உணவை சாப்பிடுவது. நேரம் காலம் இன்றி சாப்பிடுவது உறங்குவது என்று இருப்பது போன்ற பழக்கங்களை ஆண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். முக்கியமாக ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்தல் வேண்டும்.

படுக்கை அறை

படுக்கை அறை

பேச்சுலர் ஆண்களின் படுக்கை அறை நரகத்தைவிடக் கொடியது. திருமணத்திற்கு முன்பு ஆண்கள் மாற்ற வேண்டிய முதல் வேலை அவர்களது படுக்கையறையை சரியாக வைத்துக் கொள்வது தான்.

உடை அணியும் முறை

உடை அணியும் முறை

இந்த பழக்கத்தை ஆண்கள் மாற்றிக்கொள்ளாவிட்டாலும், திருமணத்திற்கு பின் மனைவியே மாற்றிவிடுவார்கள். ஆனால், பொதுவாகவே தனது ஆண் ஆடை உடுத்தும் விதத்தில் சிறந்தவர் என்பது அவர்களை பெருமையடைய செய்யுமாம்.

இரவு நேர ஊர் சுற்றுதல்

இரவு நேர ஊர் சுற்றுதல்

பேச்சுலர் வாழ்க்கையின் இனிமையே இரவு நேரம் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது தான். ஆனால், திருமணத்திற்கு பிறகு அது நடக்கவே நடக்காது. எனவே, அடம் பிடிக்காமல், திருமணத்திற்கு முன்பே கொஞ்சம் கொஞ்சமாக அந்த பழக்கத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bachelor Habits Men Need To Lose

Do you know about the bachelor habits men need to lose? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter