நிச்சயதார்தத்தின் போது மணமக்களைக் கடுப்படிக்கும் சில விஷயங்கள்!!

By: John
Subscribe to Boldsky

ஆயிரம் தடவை போய் சொல்லி திருமணம் நடந்ததில் இருந்து, ஆயிரம் பொய் சொல்லி நடந்த திருமணம் வரை கடந்து வந்து, இன்று ஃபேஸ் புக்கில் அழைப்பிதழ் கொடுக்கும் வரை திருமணம் வளர்ந்திருந்தாலும். சடங்கு சம்பிரதாயங்கள் மட்டும் சிலவன இன்னும் மாறவில்லை.

திருமணத்திற்கு பிறகு ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் சின்ன சின்ன ஆசைகள்!!!

மார்டனில் இருந்து அல்ட்ரா மார்டனாக ஆட்களையே மாற்றிக் கொண்டிருக்கிறது இன்றையக் கலாச்சாரம். பிட்சா, பர்கர்க்கு மாறிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு முன்னே, ஆயிரம் காலத்துப் பயிரைக் கொண்டுவந்து திணித்தால் இந்த காலத்து இளசுகளுக்கு கடுப்படிக்காமல் வேறு என்ன செய்யும்.

திருமணத்திற்கு முன்பு பேச்சுலர் ஆண்கள் விட்டொழிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள்!!!

சடங்கு, சம்பிரதாயங்கள் அனைத்தும் முக்கியம் தான். ஆனால் இன்று, அது எதற்காக செய்யப்பட்டது என்பதை கூட அறியாது தப்பும், தவறுமாக தான் நம்மில் 99% பேர் செய்து வருகிறோம். இதில், நம்ம இளசுகளைக் கடுப்படிக்கும் விஷயங்களைப் பற்றி இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலில் விழுவது

காலில் விழுவது

தெரியாமல் செய்யும் தவறுக்கே மன்னிப்புக் கேட்க தயங்குபவர்களை (பெரும்பாலானோர்) மண்டியிட்டு காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க சொன்னால் கடுப்பாகாமல் வேறு என்ன செய்வார்கள். பெரியோர்களின் ஆசி மிகவும் முக்கியமானவை. ஆனால், அதை சிறு வயதில் இருந்து பழக்க தவறியது பெரியவர்களின் குற்றம் தான்.

சந்தனம் பூசுதல்

சந்தனம் பூசுதல்

நிச்சயத்தின் போது சில குடும்பங்களின் சம்பிரதாயத்தின் படி, மணமக்களை உட்கார வைத்து சந்தனம் பூசுவார்கள். அந்த காலத்தில் உண்மையான சந்தனம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்றோ முற்றிலும் கலப்படம் செய்யப்பட்ட பொருள்களை தான் பயன்படுத்துகின்றனர். அதை முகத்தில் பூசுவதை மணமக்கள் விரும்புவது இல்லை.

ஆடல், பாடல்

ஆடல், பாடல்

நிச்சயத்தில் நடக்கும் சடங்குகளுக்கு மத்தியில் ஏதோ வேலைக்கு ஆள் எடுப்பது போல, உற்றார் உறவினார்கள் அனைவரும் மணமக்களை சூழ்ந்துகொண்டு, உங்களுக்கு அது தெரியுமா, இது தெரியுமா என்று மொக்கைப் போட்டு சாகடிப்பார்கள்.

சாப்பாட்டில் குறை சொல்வது

சாப்பாட்டில் குறை சொல்வது

ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் போது சாப்பாட்டின் ருசியில் குறை சொல்லலாம். வீட்டில் மனைவியின் ருசியைக் கூட தாலிக் கட்டியதன் உரிமையின் பேரில் குறைக் கூறலாம். ஆனால், வாழ்த்த சென்ற இடத்தில் சாப்பாட்டில் குறைக் கூறுவது எல்லாம் நியாயமா பாஸ்!!!

 மற்றவர் பற்றிய பேச்சு

மற்றவர் பற்றிய பேச்சு

நிச்சயத்திற்கு சென்றால், அன்றைய முக்கியமான நபர்களான மணமக்களை பற்றி பேசாது, அவர்களது உடன் பிறந்தவர்கள் பற்றியும், அவர்களது திருமணம் எப்போது என்பதைப் பற்றியும் பேசி கடுப்படிக்கவே சில ஜீவராசிகள் சொந்த பந்தம் என்ற பெயரில் வந்து செல்லும்.

அடக்க, ஒடுக்கம்

அடக்க, ஒடுக்கம்

அடக்க, ஒடுக்கம், சபை மரியாதை என்று சொல்லி ஒரு அங்குலம் கூட நகரவிடாமல், மணமக்களை ஒரே இடத்தில மணிக்கணக்காக உட்கார வைத்து நோகடிப்பதை தான் இந்த காலத்து இளசுகள் மிகவும் வெறுக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Annoying Things That Happens In Engagement

Do you know about the annoying things that happens in engagement? read here.
Subscribe Newsletter