For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணத்திற்குப் பின் எழும் ஏழு "எழரை"கள்!

By viswa
|

காபியை சுவைக்க எப்படி பாலில் சர்க்கரையும், காபித் தூளும் சரியான விகிதத்தில் கலந்திருக்க வேண்டுமோ, அதேப்போல தான் ஓர் திருமண பந்தம் இனிமையாய் அமைய நல்லது, கெட்டது என இரண்டும் கலந்திருக்கும். ஆனால், தொடக்கத்தில் எதுமே ஏற்றுக் கொள்ள சற்றுக் கடினமாய் தான் இருக்கும். அது விளையாட்டாக இருந்தாலும், வாழ்க்கையாக இருந்தாலும் ஒன்று தான்.

போகப் போக எல்லாம் சரியாகிவிடும் எனினும். அதை சரியாய் ஏற்றுக்கொள்ள மனம் பக்குவம் அடைய வேண்டும். அந்த பக்குவ நிலையை எட்டும் வரை, பிரச்சனை மட்டுமே அடிக்கடி எட்டி எட்டிப் பார்க்கும். அந்த பிரச்சனைகள் எவ்வாறெல்லாம் எட்டிப் பார்க்கும். எந்தெந்த ரூபத்தில் எல்லாம் எட்டுப் பார்க்கும் என்பதை அறிந்துக் கொள்ள தான் இந்த கட்டுரை.

பேச்சுலர் வாழ்க்கை வாழும் வரை சிறகு முளைத்த பறவையாய் பறந்துக் கொண்டிருந்தவனை. நேரத்திற்குக் கூண்டில் அடைக்கப்படுவது போல் தான் திருமண வாழ்க்கைப் புதிதில் போன்றும். இது, ஆண் பெண் இருவருக்கும் பொதுவான நிலைதான். இதை கடந்து வருவது எப்படி? கடந்து நல்ல முறையில் வாழ்க்கையை அமைப்பது எப்படி? தெரிந்துக் கொள்ள வேண்டுமா... தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

எதை செய்ய வேண்டும் என்றாலும் புதியதாய் ஒரு நபரிடம் அனுமதிக் கோருவது. அது நமக்கு பிடித்த விஷயமாக இருப்பினும். புதிதொரு நபருக்காக விட்டுக்கொடுக்க வேண்டியக் கட்டாய நிலைகள் போன்றவை புதியதாய் திருமணம் செய்தவர்களுக்கு இடையே சண்டைகள் ஏற்பட முதல் காரணமாய் இருக்கிறது. இதைப் போக்க பெற்றோரிடம் கலந்துரையாடினாலே போதும். வக்கீல்கள் தேவை இல்லை.

பொருளாதாரம்

பொருளாதாரம்

பொருளாதாரம், பொருந்தா தாரம் என ஆண்களுக்கு இரு பிரச்சனைகள் ஏற்படும் திருமணம் ஆனா புதிதில். கட்டிலுக்கு தேவைப்படுபவள். வேண்டாத செலவுகளுக்கு கட்டளை இடும் போது தேவையற்றவளாக மாறிவிடுவாள். பொருளாதார விஷயத்தில் ஆண்கள் விட்டுக்கொடுத்துப் போவதே சரியான தீர்வு. ஏனெனில், பெண்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

பெற்றோர் எனும் பொறுப்பு

பெற்றோர் எனும் பொறுப்பு

பிள்ளைகள் பிறந்தவுடன் நமக்கு பெற்றோர் என்ற புதியப் பொறுப்பு வரும். சில சமயங்களில் வெறுப்பும் வரும். கண்டிப்பாக நாம் எப்படி பிறந்து வளர்ந்தோமோ அவ்வாறு தான் நமது பிள்ளைகளையும் வளர்க்க முற்படுவோம். ஆனால், இதில் கண்டிப்பாக கணவன் மனைவிக்கு மத்தியில் வேறுபாடு இருக்கும். இதை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பிள்ளைகள் அவர்களுக்கு ஏற்றவரிடம் ஒட்டிக்கொண்டு மற்றொருவரை சீண்டிப் பார்பார்கள். இதுவும் பல நேரங்களில் கணவன் மனைவிக்கு மத்தியில் சண்டைகள் உண்டாகக் காரணமாக இருக்கும்.

நட்பு வட்டாரம்

நட்பு வட்டாரம்

இது பொதுவான பிரச்சனை மட்டும் அல்ல தேவர்கள் காலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் பிரச்சனை. கணவன் அவரது நண்பர்களுடன் அதிக நேரம் செலவளிப்பது, நண்பர்கள் வீட்டுக்கு வருவது போன்றவை 1௦ பொருத்தம் பார்த்து கல்யாணம் செய்தாலும் நம் நாட்டு மனைவிகளுக்கு பொருந்தாத ஒன்றாகும்.

படுக்கையறை

படுக்கையறை

எல்லா நேரங்களிலும் உடல் எல்லாவற்றிற்கும் ஒத்துழைக்கும் என்பது சொல்ல இயலாது, பெண்களுக்கு உடல் சார்ந்த பல பிரச்சனைகள் இயற்கையாகவே வரும், அதை ஆண்கள் தான் பொறுத்துப் போக வேண்டும். பல சமயங்களில் புதிதாய் திருமணம் செய்து கொண்ட கணவன், மனைவிக்கு மத்தியில் பிரச்சனைகள் உருவாகும் இடமாகப் படுக்கையறை மாறுகிறது.

ஒப்பிட்டு பேசுதல்

ஒப்பிட்டு பேசுதல்

தேனிலவு முடியும் வரை திருமண வாழ்வில் இருந்த சுவை, அது முடிந்து வீடு திரும்பிய ஒரு சில வாரங்களிலேயே கசக்க ஆரம்பித்துவிடும். கணவனும், மனைவியும் மாறி மாறி மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசி சண்டையிட துவங்கும் காலம் அதுவாகத் தான் இருக்கும். முடிந்த வரை மற்றவர்களோடு ஒப்பிட்டு பேசாமல் இருப்பது திருமண பந்தத்தை இனிமையாய் எடுத்து செல்ல உதவும்.

சலிப்பு

சலிப்பு

ஒருவரே அனைத்து வீட்டு வேலைகளையும் செய்வது கண்டிப்பாக சில நாட்களிலேயே சலிப்பூட்ட ஆரம்பித்துவிடும். எனவே, கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்துக் கொடுத்து. வேலையை பகிர்ந்து செய்வது ஓர் நல்ல இல்லற வாழ்க்கைக்கு தொடக்கப் பிள்ளியாய் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, February 7, 2015, 18:34 [IST]
Desktop Bottom Promotion