For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆராய்ச்சி முடிவுகளின் படி எந்த வயதில் திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது தெரியுமா?

சமீபத்திய தரவுகளின் படி இந்திய ஆண்கள் பெரும்பாலும் 26 வயதிலும், பெண்கள் 22 வயதிலும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

|

கடந்த காலங்களில் வாழ்க்கையின் பாதை மிகவும் எளிதானதாக இருந்தது. முதலில் காதல் பின்னர் கல்யாணம் அதன்பிறகு குழந்தை என்று சீராக இருந்தது. ஆனால் நவீன கால உறவுகள் மிகவும் சிக்கலானவை. திருமணம் செய்யாமலேயே இளைஞர்கள் சேர்ந்து வாழவும், குழந்தைகள் வேண்டுமென்ற எண்ணத்துடனும் வாழ சிலர் தொடங்கிவிட்டார்கள்.

What Is the Best Age To Get Married?

சமீபத்திய தரவுகளின் படி இந்திய ஆண்கள் பெரும்பாலும் 26 வயதிலும், பெண்கள் 22 வயதிலும் திருமணம் செய்து கொள்கிறார்கள். கல்வி, பொருளாதாரம், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் இலட்சியம் என திருமணம் செய்யும் வயது நபருக்கு நபர் மாறுபடும். ஒவ்வொரு வயதிலும் திருமணம் செய்யும்போதும் அதில் சில சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்யும். இந்த பதிவில் திருமணம் செய்து கொள்ள சரியான வயது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
22-25 வயதில் திருமணம்

22-25 வயதில் திருமணம்

இந்த காலக்கட்டத்தில் நீங்கள் கல்லூரி படிப்பை முடித்திருப்பீர்கள். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் வாழ்க்கையின் புதிய பயணத்தை தொடங்கி இருப்பீர்கள். இந்த வயதில் நீங்கள் உங்களுடைய கல்லூரி அல்லது பள்ளியில் உடன் படித்தவர்களுடனோ அல்லது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒருவருடனோ காதலில் இருப்பீர்கள் அவர்களையே திருமணம் செய்யவும் ஆர்வமாக இருப்பீர்கள்.

22-25 வயது திருமணத்தில் இருக்கும் நன்மைகள்

22-25 வயது திருமணத்தில் இருக்கும் நன்மைகள்

இந்த காலக்கட்டத்தில் நீங்களும் உங்கள் துணையும் இளமைத்துடிப்புடன் இருப்பீர்கள். எனவே நீங்கள் ஒரே திசையில் முன்னேறவும், இலக்கை அடையவும் முடியும். நீங்கள் குழந்தைகளைப் பெற விரும்பினால் நீங்கள் இளம் பெற்றோர்களாக இருப்பீர்கள், மேலும் நீங்கள் ஒரு பெரிய குடும்பத்தையும் பெற முடியும். கூடுதலாக, குழந்தைகள் கல்லூரிக்குச் செல்லும்போது, நீங்கள் இன்னும் 40 வயதில் மட்டுமே இருப்பீர்கள். இது மற்ற பெற்றோரர்களை போல அல்லாமல் புதிய சாகசங்களைத் தொடங்குவதற்கு போதுமான இளமையை கொண்டிருப்பீர்கள்.

22-25 வயது திருமணத்தில் இருக்கும் பாதகங்கள்

22-25 வயது திருமணத்தில் இருக்கும் பாதகங்கள்

நீங்கள் 25 வயதிற்குட்பட்டவராக இருக்கும்போது, உங்களை நீங்கள் நன்கு அறிந்திருக்க மாட்டீர்கள் - குறிப்பாக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள், ஒரு தனிநபராகவும், ஒரு ஜோடிகளாகவும் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள் என்ற தெளிவு உங்களுக்கே இருக்காது. மேலும் இந்த அலட்சிய வயதில் எடுக்கும் முடிவுகள் பிற்காலத்தில் மாறவும் வாய்ப்புள்ளது.

MOST READ: நீங்கள் மூட்டுவலியால் அவதிப்பட்டால் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க... இல்லனா பிரச்சினைதான்..

இது மோசமானதா?

இது மோசமானதா?

இந்தியாவில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் 50% விவாகரத்து விகிதம் குறிப்பாக 20 வயதிற்கு குறைவாக இருக்கும்போது திருமணம் செய்துகொள்பவர்களுக்கு பொருந்தும். 20-23 வயது வரம்பில் இருப்பவர்களுக்கு, இது 34% ஆக உயர்கிறது, மேலும் உங்கள் வயதில் விவாகரத்து விகிதமும் மீண்டும் குறைகிறது. நீங்கள் வீட்டில் தங்கியிருக்கும் அம்மாவாக இருக்க முடிவெடுத்தால் நீங்கள் உங்கள் சுயத்தை இழக்க வாய்ப்புள்ளது.

25-30 வயதில் திருமணம்

25-30 வயதில் திருமணம்

ஒரு பெண்ணாக நீங்கள் உண்மையில் யார், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள், தனிப்பட்ட முறையில் உங்களுக்கு என்ன அர்த்தம் என்பதை நீங்கள் கண்டுபிடிக்கும் அற்புதமான, வேடிக்கையான கண்டுபிடிப்பு நாட்கள் இவை. 20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட ஆண்களுடன் டேட்டிங் செய்வது மகிழ்ச்சியாக உணர வைக்கும்.

25-30 வயது திருமணத்தில் இருக்கும் நன்மைகள்

25-30 வயது திருமணத்தில் இருக்கும் நன்மைகள்

நீங்கள் இப்போது சுயமாக அறிந்திருப்பதால், உங்களைப் போன்றே எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒருவருடன் நீங்கள் முடிவடையும் வாய்ப்பு அதிகம். உங்கள் சமூக வட்ட்டதை சேர்ந்த நண்பர்களுடன் செலவிடுவதற்கு உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். நீண்ட நேரம் வேலை செய்வதற்கும் போதுமான நேரம் இருக்கும்.

MOST READ: மர்மமாக காணாமல் போன பிரதமர் முதல் இரத்த மழை வரை உலகின் பதில் தெரியாத ரகசியங்கள் பற்றி தெரியுமா?

25-30 வயது திருமணத்தில் இருக்கும் பாதகங்கள்

25-30 வயது திருமணத்தில் இருக்கும் பாதகங்கள்

ஆய்வுகளின் படி பொருளாதாரரீதியாக ஒரு பெண்ணின் 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் திருமணம் செய்தால், அவரின் சம்பாதிக்கும் சக்தி மிக உயர்ந்ததாகும். உங்கள் 30 வது பிறந்தநாளுக்குப் பிறகு திருமணம் செய்வது ஒரு பெண்ணின் சம்பாதிக்கும் சக்திக்கு கூடுதல் பணத்தை சேர்க்கிறது. இது கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு ஆபத்து என்னவெனில் இப்போது குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த நீங்கள் ஓய்வு எடுத்தால், அது உங்கள் வாழ்க்கையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

30-35 வயதில் திருமணம்

30-35 வயதில் திருமணம்

20 வயதில் இருக்கும் போது உங்களுக்கு பல வாய்ப்புகள் இருக்கும், ஆனால் 30 வயதில் உங்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் குறைவாகும். உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட நிதி இரண்டிலும் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்.

30-35 வயது திருமணத்தில் இருக்கும் நன்மைகள்

30-35 வயது திருமணத்தில் இருக்கும் நன்மைகள்

நீங்கள் யார்என்பதும், வாழ்க்கையிலிருந்து நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிவதோடு, ஒரு காதல் துணையில் உங்களுக்குத் தேவையானதைப் பற்றியும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். நீண்ட காலமாக உங்களுக்காக ஒரு நல்ல வாழ்க்கைத் துணையாக இருக்கும் ஒருவரை நீங்கள் தேர்வுசெய்து, துவக்க இடத்தில் ஒரு திடமான வாழ்க்கையைப் பெறுவீர்கள். திருமண ஆராய்ச்சியின் படி, 30 வயதிற்கு மேற்பட்ட ஒரு பெண் விவாகரத்து செய்ய 8% மட்டுமே வாய்ப்புள்ளது.

MOST READ: மனிதர்களை அணுஅணுவாய் சித்திரவதை செய்வதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றின் கொடூரமான கருவிகள்...!

30-35 வயது திருமணத்தில் இருக்கும் பாதகங்கள்

30-35 வயது திருமணத்தில் இருக்கும் பாதகங்கள்

பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, ஒரு பெண்ணின் கருவுறுதல் 28 வயதாக இருக்கும்போது மட்டுமே குறையத் தொடங்குகிறது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. 30-34 வயதிற்கு இடையில், ஒரு பெண்ணின் கருவுறாமை பிரச்சினைகள் 8-15% இலிருந்து கிட்டத்தட்ட இரட்டிப்பாகின்றன. ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் கருத்தரிக்க சிரமப்படுகிறீர்கள் எனில், அதைச் சமாளிக்க உங்களுக்கு இன்னும் சிறிது நேரம் இருக்கிறது.

கருத்தரிக்கும் திறன்

கருத்தரிக்கும் திறன்

இந்த காலக்கட்டத்தில் ஒரு பெண் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு 63-52% இலிருந்து மட்டுமே குறைகிறது, எனவே நீங்கள் இன்னும் 35 வயதிற்குட்பட்டவராக இருந்தால், ஒரு குடும்பத்தைத் தொடங்க உங்களுக்கு இன்னும் சிறிது நேரம் ஆகலாம் - ஆனால் அது இன்னும் போதுமானதாக இருக்கும்.

35-40 வயதில் திருமணம்

35-40 வயதில் திருமணம்

இதனை தாமதமாகி பூப்பது என்று கூறலாம். பெண்களுக்கு அவர்களுக்கு பிடித்தது எது, பிடிக்காதது எது, அவர்கள் வாழ்க்கையில் என்ன சாதிக்க விரும்புகிறார்கள் என அனைத்தையும் இந்த காலக்கட்டம் அவர்களுக்கு உணர்த்தியிருக்கும். அதேபோல தங்கள் காதல் துணை எப்படி இருக்கக்கூடாது என்பதையும் முடிவு செய்திருப்பார்கள்.

MOST READ: காமசாஸ்திரத்தின் படி இந்த குணம் இருக்கும் பெண்களை கண்ணை மூடிக்கொண்டு கல்யாணம் செஞ்சுக்கலாமாம்...!

35-40 வயது திருமணத்தில் இருக்கும் நன்மைகள்

35-40 வயது திருமணத்தில் இருக்கும் நன்மைகள்

இந்த வயதில், முதல் திருமணம் என்பது உங்கள் வாழ்க்கைக்கான ஒரே திருமணமாக இருக்கலாம்.இப்போது நீங்கள் விரும்பும் திருமணத்தை விரும்பும் இடத்தில் செய்யலாம். ஒருவழியாக நீங்கள் திருமணம் செய்து கொள்வது நீண்ட காலமாக கவலையில் இருந்த உங்கள் பெற்றோருக்கு நிம்மதியை ஏற்படுத்தும்.

35-40 வயது திருமணத்தில் இருக்கும் பாதகங்கள்

35-40 வயது திருமணத்தில் இருக்கும் பாதகங்கள்

கருவுறாமைக்கான வாய்ப்பு 15-32% ஆக உயரும் என்பதால், சிக்கலான கருத்தரித்தல் இப்போது ஒரு தீவிரமான பிரச்சினையாக இருக்கலாம்; இந்த வயதில், பெண்கள் கர்ப்பமாக இருப்பதற்கான 33% வாய்ப்பு மட்டுமே கிடைத்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is the Best Age To Get Married?

Read to know what is the best age to get married.
Story first published: Friday, November 6, 2020, 17:37 [IST]
Desktop Bottom Promotion