For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உயிர் மேல ஆச இருந்தா உங்க காதலிக்கிட்ட இந்த வார்த்தைங்கள தெரியாமக் கூட சொல்லிறாதீங்க...

காதலியிடம் பேசும் முன் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் நன்கு யோசிக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் பேசும் எந்த வார்த்தை வேண்டுமென்றாலும் அவர்களை வெடிக்க வைக்கலாம்.

|

காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் அனைவரும் விரும்பும் ஒரு உணர்வாகும். கண்டிப்பாக காதலிக்க வேண்டும் என்று தெரிந்த நமக்கு எப்படி காதலிக்க வேண்டும் என்று கடைசி வரை தெரிவதே இல்லை. உங்களுக்கு பிடித்த பெண்ணை காதலிப்பது என்பது கத்தி மேல் நடப்பது போன்றது. மிகவும் ஜாக்கிரதையாக நடக்க வேண்டும், நடந்து கொள்ளவும் வேண்டும்.

things you should never say to your girlfriend

காதலியிடம் பேசும் முன் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் நன்கு யோசிக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் பேசும் எந்த வார்த்தை வேண்டுமென்றாலும் அவர்களை வெடிக்க வைக்கலாம். நீங்கள் சாதாரணமானது என்று நினைத்து பேசும் வார்த்தைகள் அவர்களை எரிமலையாக வெடிக்க வைக்கலாம். எனவே காதலியிடம் பேசும் முன் நிதானமும், கவனமும் அவசியம். குறிப்பாக சில வார்த்தைகளை காதலியிடம் தூக்கத்தில் கூட சொல்லிவிடக்கூடாது, அப்படி காதலியிடம் கூறிவிடக் கூடாத சொற்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சொல்லக்கூடாதது

சொல்லக்கூடாதது

" சாரி, நான் உன் மெஸேஜை பார்க்கவில்லை " என்று தெரியாமல் கூட உங்கள் காதலிக்கிட்ட சொல்லிறாதீங்க. அதுவும் ப்ளூ டிக் வந்ததுக்கு அப்புறமும் இந்த பொய்ய தொடர்ந்து சொன்னா பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும். பொண்ணுங்ககிட்ட ஒரு தனி ரேடார் இருக்கு அது பசங்க பொய் சொன்னா ஈஸியா காட்டிக்கொடுத்துரும்.

சொல்லக்கூடாதது

சொல்லக்கூடாதது

உங்கள் நண்பனின் காதலியை பற்றி ஒருபோதும் உங்கள் காதலியிடம் புகழாதீங்க. அப்படி பண்ணிட்டா நீங்கள் பெரிய சண்டையை தொடங்கி வைச்சுடீங்கனு அர்த்தம். உங்கள் நண்பனின் காதலியை பற்றி பெருமையா பேசுறது உங்க நண்பருக்கு வேண்டுமென்றால் பெருமையாக இருக்கலாம், ஆனால் அது உங்கள் நிலைமையை மோசமானதாக மாற்றிவிடும்.

சொல்லக்கூடாதது

சொல்லக்கூடாதது

" உன்னோட பிரண்ட்ஸ் பார்க்க நான் ஏன் வரணும்?" இது நீங்கள் கண்டிப்பாக கேட்கக்கூடாத கேள்வியாகும். உங்களை தங்கள் நண்பர்களிடம் காட்டி பெருமை பட்டுக்கொள்ள உங்கள் காதலி விரும்பலாம். எனவே பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் உங்கள் காதலி கூப்பிடும்போதெல்லாம் அவங்களோட நண்பர்கள பார்க்க நீங்கள் கண்டிப்பாக போகணும்.

MOST READ: ஹைய்யா! கடல் தண்ணி மட்டும் ஏன் உப்பா இருக்குனு ஒருவழியா கண்டுபிடிச்சாச்சு...!

சொல்லக்கூடாதது

சொல்லக்கூடாதது

" இந்த ட்ரெஸில் நீ குண்டா தெரியுற " இந்த வார்த்தையை கூறிவிட்டால் உங்களின் அன்றைய அனைத்து திட்டங்களும் வீணாகிவிடும். காதலிக்க தொடங்கிவிட்டால் முதலில் உங்கள் நேர்மையை ஒளித்து வையுங்கள். காதலில் பொய்தான் அழகு, எனவே நீங்கள் கூறுவது உண்மையாகவே இருந்தாலும் அதனை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டு எப்போது கேட்டாலும் அழகாக இருக்கிறாய் என்று கூறமட்டும் பழகிக்கொள்ளுங்கள்.

சொல்லக்கூடாதது

சொல்லக்கூடாதது

" நான் என் பிரண்ட்ஸோட இன்னைக்கு ஜாலியா இருக்க போறேன் " இந்த வார்த்தையை நீங்கள் சொல்வது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றது. இதனைக் கூறினால் உங்களுக்கு இரண்டு பிரச்சினைகள் ஏற்படலாம். ஒன்று உங்கள் நண்பர்களோடு வெளியே செல்வதற்கோ அல்லது குடிப்பதற்கோ அனுமதி மறுக்கப்பட்டு அதனால் சண்டை ஏற்படலாம். இல்லையெனில் " உன் பிரண்ட்ஸோட இருக்கறது ஜாலியா இருக்குன்னா அப்ப என்கூட இருக்க உனக்கு பிடிக்கலையா " அப்படினு கேட்டு சண்டை வரும். மொத்தத்துல இந்த வார்த்தை கண்டிப்பா சண்டையை உண்டாக்கும்.

சொல்லக்கூடாதது

சொல்லக்கூடாதது

" என் முன்னால் காதலி இப்படித்தான் செய்வாள் " இந்த வார்த்தையைக் கூறிவிட்டால் அடுத்த ஒரு வாரத்திற்கு நீங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டும். உங்களுக்கு முன்னால் காதலி இருந்தால் ஒருபோதும் அவர்களைப் பற்றி உங்கள் தற்போதைய காதலியிடம் பேசவோ அல்லது இருவரையும் ஒப்பிடவோ கண்டிப்பாகக் கூடாது. இது உங்கள் முன்னாள் காதலியை இன்னும் நீங்கள் மறக்கவில்லை என்று அவர்களை உணரச்செய்யும். பிறகு " அவகிட்டயே போய் பேசிக்க " என்று சண்டையைத் தொடங்கிவிடுவார்கள்.

MOST READ: வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படுகிறது தெரியுமா?

சொல்லக்கூடாதது

சொல்லக்கூடாதது

" அவன்கிட்ட பேசும்போது ஏன் ரொம்ப சிரிக்கிற ". பெண்களின் அகராதியில் அவர்கள் இந்த கேள்வியைக் கேட்டால் அது உங்கள் மீது இருக்கும் பொஸசிவ்னெஸ் அதையே நீங்கள் கேட்டால் அது சந்தேகம். எனவே பார்த்து புரிஞ்சு நடந்துக்கோங்க.

சொல்லக்கூடாதது

சொல்லக்கூடாதது

" உன் இஷ்டம், என்கிட்ட எதுவும் கேக்காத " இது உங்கள் அறியாமையாலோ அல்லது கோபத்தின் வெளிப்பாடாகவோ இருக்கலாம். ஆனால் பெண்களை பொறுத்த வரையில் இதன் ஒரே அர்த்தம் அவர்கள் மீது உங்களுக்கு அக்கறை இல்லை என்பதுதான். எனவே அவர்கள் சொல்வதையே ஒப்புக்கொண்டாலும் அதனை நீங்களாக கூறுவது போல நடிக்க பழகிக் கொள்ளுங்கள்.

சொல்லக்கூடாதுது

சொல்லக்கூடாதுது

" நல்லது, அழுதுகிட்டே இரு ". இந்த உலகத்தின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஆயுதம் பெண்களின் கண்ணீர்தான். இதனை புரிந்து கொண்டு நடப்பது உங்களுக்கு நல்லது. உங்கள் காதலி அழத் தொடங்கினால் நீங்கள் எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் அதனை ஊக்குவிக்கமால் அவர்களை சமாதானப்படுத்த தொடங்குங்கள். இல்லையென்றால் அவர்கள் அழுததை நீங்கள் நின்று ரசித்ததாக ஆயுள் முழுவதும் கூறுவார்கள்.

MOST READ: ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா?

சொல்லக்கூடாதது

சொல்லக்கூடாதது

" கொஞ்ச நேரம் அமைதியா இரு ". உங்கள் காதலி கோபத்தில் கத்தத் தொடங்கினால் அவர்களை சமாதானப்படுத்த முயலுங்கள். மாறாக நீங்களும் கத்தத் தொடங்குவது அல்லது அவர்களை கட்டுப்படுத்த முயலுவது அவர்களின் கோபத்தை அதிகரிக்கத்தான் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Should Never Say To Your Girlfriend

Here is the list of things you should never say to your girlfriend.
Desktop Bottom Promotion