Latest Updates
-
கோவக்காய் வாங்குனா இந்த மாதிரி ஹோட்டல் ஸ்டைலில் பொரியல் பண்ணுங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
வெண்டைக்காயை இப்படி மசாலா அரைச்சு பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு சாப்பிடுவாங்க.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
International Yoga Day 2026: தொப்பையை குறைக்கணுமா? அப்ப தினமும் இந்த 6 யோகாவை செய்யுங்க போதும்! -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம் -
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
உடலுறவின் போது ஆண்களின் இந்த கேள்வி பெண்களுக்கு பெரும்கோபத்தை ஏற்படுத்தும்...தெரியாம கூட கேக்காதீங்க
ஆய்வின்படி பத்து ஆண்களில் ஒன்பது பேர் உடலுறவின் போது உச்சக்கட்டத்தை அடைகிறார்கள், ஆனால் பெண்களை பொறுத்தவரை பத்து பெண்களில் ஆறு பேர் மட்டுமே உக்கக்கட்டத்தை அடைகிறார்கள்.
உடலுறவு என்று வரும்போது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் உள்ளது. சிலர் முன்விளையாட்டுகளுடன் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட விரும்புவார்கள், சிலரோ விரைவில் உடலுறவை முடித்துக் கொள்ள விரும்புவார்கள். சமீபத்தில் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பாலினம், வயது, வாழ்க்கைமுறை போன்றவற்றை பொறுத்து பொதுவாக மக்கள் உடலுறவின் போது விரும்பும் மற்றும் வெறுக்கும் விஷயங்களை கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வின்படி பத்து ஆண்களில் ஒன்பது பேர் உடலுறவின் போது உச்சக்கட்டத்தை அடைகிறார்கள், ஆனால் பெண்களை பொறுத்தவரை பத்து பெண்களில் ஆறு பேர் மட்டுமே உக்கக்கட்டத்தை அடைகிறார்கள். இந்த ஆய்வில் பெண்கள் உடலுறவின் போது விரும்பாத விஷயங்கள் என்னென்ன என்று சிலவற்றைக் கூறியுள்ளனர். இந்த பதிவில் பெண்கள் உடலுறவின் போது வெறுக்கும் விஷயங்கள் என்னவென்பதை பார்க்கலாம்.

போதுமான முன்விளையாட்டுகள் இல்லாதது
உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு போதுமான ஃபோர்ப்ளே இல்லாதது பெரும்பாலான பெண்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தும். ஃபோர்ப்ளே என்பது நன்றாக சாப்பிடும் உணவிற்கு முன்னால் பரிமாறப்படும் சூப் போன்றது. செக்ஸ் அவளுக்கு ஒரு இன்பமான செயலாக மாற்றுவதற்கு சிறிது நேரம் மற்றும் சக்தியை ஃபோர்ப்ளேயில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம்.

சுய உணர்வை ஏற்படுத்துதல்
பெரும்பாலான மக்கள் பல காரணங்களுக்காக தங்கள் உடல்களைப் பற்றி சுய உணர்வுடன் உணர்கிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு ஒரு பெண் தன் உடலைப் பற்றி மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதில்லை. அவர்களின் தோற்றம் குறித்து அவர்கள் மகிழ்ச்சியாக உணர்வதில்லை. எந்தவொரு பெண்ணும் அவர்களின் சுய தோற்றத்தை உணரவைக்கும் ஆணுடன் உறவு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. அதற்காக உடலுறவு கொள்ளும்போது அவர்களிடம் பொய் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை , ஏனெனில் அவர்கள் அதனை எளிதில் கண்டுபிடித்துவிட்டுடுவார்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களின் தோற்றத்துடனேயே அவர்களை வசதியாக உணர வைக்க வேண்டும். அவர்களின் குறைபாட்டுடனேயே அவர்களை நேசித்து உறவு கொள்ளுங்கள்.

தற்பெருமை பேசுவது
தங்களின் பாலியல் வலிமையைப் பற்றி பெருமை பேசும் ஆண்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அந்த பழக்கத்தை உடனடியாக மாற்ற வேண்டும். நீங்கள் படுக்கையில் எவ்வளவு நன்றாக செயல்படுகிறீர்கள் அல்லது கடந்த காலத்தில் எத்தனை பாலியல் உறவுகளைக் கொண்டிருந்தீர்கள் என்பதை அறிய யாரும், குறிப்பாக ஒரு பெண் ஆர்வம் காட்டுவதில்லை. பாலியல் தற்பெருமை என்பது பெரும்பாலான பெண்கள் விரும்பும் ஒன்றாகும்.

உக்கட்டத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் கேட்பது
இது மிகப்பெரிய ஏமாற்றங்களில் ஒன்றாகும். பெண்களின் உச்சக்கட்டம் என்பது இன்றுவரை மிகவும் மர்மமான ஒன்றாகவே இருக்கிறது. தங்கள் துணையின் உச்சக்கட்டம் குறித்து தெரிந்து கொள்ள ஆண்கள் ஆர்வம் காட்டுவதில் தவறில்லை. ஆனால் புணர்ச்சியின் போது மீண்டும் மீண்டும் " உச்சக்கட்டம் அடைந்துவிட்டாயா? " என்று கேட்பது பெண்களுக்கு தர்மசங்கடத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தும்.

ஜி-ஸ்பாட்டை தேடிக்கொண்டே இருத்தல்
பெரும்பாலான ஆண்கள் உடலுறவின் போது பெண்களின் யோனிக்குள் ஜி ஸ்பாட்டை கண்டுபிடிப்பத்தையே
முக்கியமான வேலையாக கொண்டிருக்கின்றனர். உடலுறவின் போது ஒரு மனிதன் செய்யக்கூடிய மிக மோசமான விஷயம் இதுதான். ஒரு பெண் தன் ஆணுக்குள் எவ்வளவு ஆழமாக உணர விரும்புகிறான் என்பது முற்றிலும் தனிப்பட்ட தேர்வாகும். இணையத்தில் சில தவறான தகவல்களை படித்துவிட்டு பெண்களை திருப்திப்படுத்த தவறான வழிகளை பின்பற்ற வேண்டாம்.

பெண்ணின் உடலை நிலத்தைப் போல கையாளுவது
ஆண்கள் செய்யும் தவறான விஷயங்களில் ஒன்று பெண்களின் உடலை எதோ புதையல் இருக்கும் நிலம்போல முட்டாள்தனமாக கையாளுவதான். பெண்கள் வெறுக்கும் மிக முக்கியமான விஷயம் இதுவாகும். ஆண்கள் தங்களின் குழிதோண்டும் திறமையை வெளியில் காட்ட வேண்டுமே தவிர கட்டிலில் அல்ல.

ஆபாசப்படத்தில் பார்த்ததை முயற்சிப்பது
பெரும்பாலான ஆண்களுக்கு ஆபாசப்படம் பார்ப்பதுதான் உடலுறவு பற்றிய முதல் தரவாகும். ஆனால் திரையில் நீங்கள் காணும் அனைத்தும் நிஜ வாழ்க்கையில் பொருந்தாது. ஆபாசப் படங்களில் நடிகர்கள் ஈடுபடும் பாலியல் செயல்களுடன் உங்கள் பாலியல் வாழ்க்கையை நீங்கள் தொடர்ந்து ஒப்பிட்டுப் பார்த்தால், நீங்கள் ஒரு பெரிய ஏமாற்றத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல் உங்கள் துணையை உங்களை வெறுக்க வைக்கிறீர்கள்.



Click it and Unblock the Notifications